நாடெங்கும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test) பற்றிய அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) தற்போது வெளியிட்டுள்ளது. இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய தகுதித் தேர்வு:
2018ம் ஆண்டுக்குரிய இந்தத் தேர்வு ஜூலை 8ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை மூன்று தாள்கள் கொண்ட தேர்வானது இந்த முறையிலிருந்து இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும் (மொத்தம் 1 மணி நேரம் மட்டும்) நடத்தப்படும். இதில் மொத்தம் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு 1000 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) 500 ரூபாய் கட்டணமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு 250 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்..
வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்காக தேசிய தகுதித் தேர்வை எழுதுபவர்களுக்கு இதற்குமுன் அதிகபட்சமாக 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது..
விண்ணப்பிக்கும் நாள்
கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) வெளியிட்டுள்ளது.
இதற்கு மார்ச் மாதம் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 5 ம் தேதி கடைசி நாளாகும்.
Website : https://cbsenet.nic.in/
Website : https://cbsenet.nic.in/
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.02.2018
No comments:
Post a Comment