வேட்பாளர்கள் தங்களுக்குரிய வருமானத்திற்கு ஆதாரம் காட்ட வேண்டும்
தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
இனி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய சொத்து கணக்கை தாக்கல் செய்வதுடன், அதற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
பொதுநல வழக்கு
'லோக் பிரஹாரி' என்ற, அரசு சாரா அமைப்பு ஒன்று தேர்தல்களில் போட்டியிடுபவர்கள்,
தங்களுடைய சொத்து கணக்குடன், அதற்கான வருவாய் ஆதாரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
'லோக் பிரஹாரி' என்ற, அரசு சாரா அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த இரு தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தற்போது லோக்சபா, எம்.பி.,யாக உள்ள
நான்கு பேரின் சொத்து மதிப்பு, 12 மடங்கு உயர்ந்து உள்ளது. 'அதே நேரத்தில், 22 பேரின் சொத்து மதிப்பு, ஐந்து மடங்கு உயர்ந்து உள்ளது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய நேரடி வரி வருவாய் வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் அறிக்கையில், 'ஏழு லோக்சபா, எம்.பி.,க்கள் மற்றும், 98 எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்துள்ள சொத்து கணக்குகளில், தவறான தகவல்கள் உள்ளது தங்களுக்குத் தெரிய வந்துள்ளது' என்று கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய மற்றும் குடும்பத்தாரின் சொத்து கணக்கை தாக்கல்
செய்கின்றனர். இந்தத் தேர்தல் நடைமுறைகளில், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், இனிமேல், இந்த சொத்துக்கான வருவாய் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018
No comments:
Post a Comment