எதிரிடை அனுபவப் பாத்தியம்
அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி பல ஆண்டுகளாக சிலர் குடியிருந்து வருவார்கள். திடீரென்று, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளும்போது அவர்களது வீடு அகற்றப்படும். அவர்கள் இதுபோன்ற வேறு இடங்களைத் தேடிச் சென்று வீடு கட்டிக் கொள்வார்கள்.
எதிரிடை அனுபவப் பாத்தியம்
இதுபோல அரசு நிலங்களை அல்லது தனியார் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து வீடு கட்டி வாழ்ந்து வருபவர்கள் அந்த நிலத்தினை தங்களுக்கு பாத்தியம் ஆக்கிக் கொள்ள முடியுமா? என்றால் முடியும்! இது போன்ற அனுபவப் பாத்தியத்திற்கு சட்டத்தில் எதிரிடை அனுபவப் பாத்தியம் என்று பெயர்.
சட்டம் இதைப் பற்றி என்ன சொல்கிறது?
ஒருவர் தனக்கு பாத்தியமில்லாத பிறருடைய சொத்தை, அந்த சொத்தின் உரிமையாளருக்குத் தெரிந்தே, ஊரறிய, எந்தவிதமான ஆட்சேபனை மற்றும் தடை இன்றி பல வருடங்களாக இடைவெளி ஏதுமின்றி அனுபவித்து வந்தார் என்றால், அவர் அந்த நிலத்திற்கு பாத்தியம் கோரலாம். இதைத்தான் சட்டமானது எதிரிடை அனுபவப் பாத்தியம் என்று சொல்கிறது.
தனியாருக்கு சொந்தமான சொத்து என்றால்....?
மேற்கண்டவாறு ஒருவர் அனுபவித்து வருகின்ற சொத்து தனியாருக்குச் சொந்தமானது என்றால், அவர் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அதனை அனுபவித்து வந்திருக்க வேண்டும். குத்தகையின் பெயரிலோ, அனுமதியின் பெயரிலோ, வாடகை கொடுத்து வந்தோ அதனை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதனை நிரூபிக்க ஆவணங்கள் மிகவும் அவசியம். இது போன்ற பாத்தியத்தை நீதிமன்றம் மூலமாக மட்டுமே பெற முடியும்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்து என்றால்....?
மேற்கண்டவாறு ஒருவர் அனுபவித்து வருகின்ற சொத்து அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றால், அவர் தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் அதனை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2018
Having some other doubt can you clarify ?
ReplyDelete