தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் - சிவகாசி தாலுகாவிலுள்ள மீனம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். தெற்கிலிருந்து வடக்கே சென்று திரையிலகில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகைகளான பத்மினி, வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி ஆகியோர்கள் வரிசையில் இணைந்தவர். ஏற்கனவே மணமான போனிகபூரை மணந்த இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்கின்றனர்.
அரசு மரியாதையுடன் தகனம்
ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் நாட்டிற்குச் சென்ற இவர் கடந்த 24ம் தேதி குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டார். பல தடைகளைக் கடந்து இந்தியா வந்த அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் இறந்த ஒரு நடிகைக்கு இதுபோல அரசு மரியாதை செய்வது சரிதான? என்று பலரும் புருவத்தை உயர்த்துகிறார்கள். நாட்டுக்காக அவர் என்ன செய்துவிட்டார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழத்தான் செய்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
நமது நாட்டில் உள்ள முக்கியமானவர்களில் குடியரசுத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இறந்தால் மட்டுமே அவர்களுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு தற்போது மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் இப்போது யாருக்கு முழு அரசு மரியாதை தரவேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம்.
கலைத்துறையில் செய்த சேவையினால்தான்!
மறைந்து போன ஒருவருக்குஇருக்கின்ற புகழ் மற்றும் அவர் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முழு அரசு மரியாதை தரலாம் என விதிகள் சட்டத்தில் ஏற்டுத்தப்பட்டுள்ளது.. இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் இறக்கும்போது
அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கலாமா? அளிக்கக்கூடாதா? என்பது பற்றி அந்த மாநிலத்தின் முதல்வர், தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்.
காவல்துறையின் பொறுப்பு
முடிவெடுத்த பின்னர் இறந்தவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு அந்த மாநிலத்தின் காவல்துறைக்கு
வழங்கப்படும். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள்.
அதுபோன்றுதான் நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன்
தகனம் செய்யப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.
************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.03.2018
No comments:
Post a Comment