ஒரு மனமாக இணைந்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
உங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் உங்களது இருவரின் மனத்திலும் இருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், உங்களில் ஒருவரது திட்டம் ஒருவருக்கு(ம்) தெரியாமல் போய்விடக் கூடாது என்ற எண்னத்தில்தான் நான் இதனை எழுதுகிறேன்.
இதுவரை உங்களது பெற்றோரின் பின்னால் இருந்து செயலாற்றிக் கொண்டிருந்த உங்களுக்கு என்று ஒரு தலையாய பொறுப்பை இந்த சமூகம் வழங்கி இருக்கிறது. இனியும் மற்றவர்கள் உங்களுக்கு ஆலோசணை வழங்கலாம். ஆனால், நீங்கள் செய்யப் போகின்ற செயல்கள் ஒவ்வொன்றிற்கும் நீங்களே முழுப் பொறுப்பு என்பதை மறவாதீர்கள்.
என்ன செய்ய வேண்டும்?
1. உங்களது திருமணத்தை முதலில் பதிவு செய்யுங்கள்.
2. உங்கள் இருவருக்கும் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவை ஏற்கனவே இருக்கலாம். அதில் உள்ள முகவரியை இருவரும் முதலில் மாற்ற வேண்டியது முக்கியம். மனைவி தனது கணவன் பெயரை அதில் இணைப்பது முக்கியம்.
2. உங்கள் இருவருக்கும் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவை ஏற்கனவே இருக்கலாம். அதில் உள்ள முகவரியை இருவரும் முதலில் மாற்ற வேண்டியது முக்கியம். மனைவி தனது கணவன் பெயரை அதில் இணைப்பது முக்கியம்.
3. இருவருக்குமான குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
4. வங்கியில் உள்ள அக்கவுண்ட் மற்றும் நிதி சார்ந்த அக்கவுண்டையும் உங்களது இருவரின் பெயரிலும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.,உங்கள் இருவரில் யார் வேண்டுமானாலும் அதனை ‘ஆபரேட்’ செய்யும்படி உருவாக்கிக் கொள்ளுங்கள்.
5. வருமான வரி செலுத்துவதற்கென்றோ அல்லது வேறு காரணங்களுக்காக தனித்தனியாக வங்கி மற்றும் நிதி சார்ந்த கணக்குகளை நீங்கள் வைத்துக்கொண்டால், உங்கள் இருவரில் ஒருவர் மற்றொருவரை நாமினியாக தேர்வு செய்துகொள்ளலாம்.
6. உங்களில் ஒருவரின் அக்கவுண்டை மற்றொருவர் பார்க்கும்படி இருப்பதும் மிகவும் முக்கியம். யூஸர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டையும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தயவு செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
7. உங்களது மனைவி ஹவுஸ் ஒய்ஃப் என்றால், அவரை உங்களது வங்கி மற்றும் நிதி சார்ந்த அக்கவுண்ட் செயல்களைச் செய்ய வழிவகுத்து உற்சாகப்படுத்துங்கள். வீட்டிற்குத் தேவையான வேலைகளை அவர்களே முடிவெடுத்து செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.
8. நிதி சார்ந்த முடிவுகள் ஒவ்வொன்றையும் நீங்கள் இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து எடுங்கள்.
9. உங்களில் ஒருவர் தங்களுடைய சொந்தங்களுக்கோ, நண்பர்களுக்கோ கைமாற்றாக பணம் கொடுத்தாலோ அல்லது அவர்களிடம் இருந்து கைமாற்றாக பணம் பெற்றாலோ அதனை ஒரு டயரியில் தேதிவாரியாக எழுதி வருவது அவசியம். புரோ நோட்டின் அடிப்படையில்
கடன் ஏதேனும் மேற்கண்டவர்களுக்கு கொடுத்திருந்தாலோ அல்லது வாங்கியிருந்தாலோ அவற்றிற்கு நகல் எடுத்து அவற்றை முறைப்படி ஃபைல் செய்து வையுங்கள்.
10. பங்குகள் மற்றும் டெபாசிட் போன்ற முதலீடுகளை இருவர் பெயரிலும் ஜாயிண்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை தனித்தனியாக செய்திருந்தால், அந்த முதலீடு பற்றிய ஆவணங்களை ஃபைல் செய்வதோடு, உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் மறக்காமல் தெரிவியுங்கள்.
11. உங்களது நிதி ஆலோசகர், ஆடிட்டர், வங்கி மேலாளர் மற்றும் நிதி சம்பந்தமான தொடர்புகளின் முகவரி மற்றும் எண்களை ஒரு பொதுவான டைரியில் குறித்து வைத்து அதனைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரிவியுங்கள்.
12. உங்களது முதலீடுகள், கடன்கள், இன்ஷூரன்ஸ், வங்கி மற்றும் நிதி சார்ந்த அனைத்து பேப்பர் டாக்குமென்டுகளையும் ஒரே ஃபைலில் வைத்திருப்பதுபோல, உங்களது கம்ப்யூட்டரிலும் ஒரே ஃபோல்டரில் போட்டு வைத்து அதனைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தெரியப்படுத்துங்கள்.
13. கணவன் மனைவி ஆகிய நீங்கள் இருவரும் தனித்தனியாக கிரெடிட் கார்டு வைத்துக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் இருவருக்கும்
சிபிலில் கிரெடிட் ஸ்கோர் தனித்தனியாக பதிவாகும். அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கடன் வாங்க வங்கிக்குச் செல்லும்போது
இது மிக உதவியாக இருக்கும். ஒருவேளை எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உங்களது லைப் பார்ட்னருக்கு
இது கண்டிப்பாக உதவும்.
14. உங்களுக்கென்று மனை வாங்கினாலும் வீடு வாங்கினாலும் உங்கள் இருவரது பெயரிலும் ஜாயின்டாக வாங்குவது நல்லது. இதனால், இருவரும் தனித்தனியே வரிச் சலுகை பெற முடியும்.
15. நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை எக்காரணம் கொண்டும் மாற்றாதீர்கள். ஒருவரது செல்போன் எண்ணை மற்றவர் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
16. உங்களது பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு அட்டை, குடும்ப அட்டை, சொத்துப் பத்திரங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து உங்களது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
17. உங்களது பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை எண் சொத்துப் பத்திரங்கள் ஆகியவற்றின் நகல்களையும் தனியாக ஒரு பைலில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
வருங்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மேற்கண்ட நடவடிக்கைகள் உங்களுக்கு அல்லது உங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.2018
No comments:
Post a Comment