இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னையிலுள்ள, பாரிமுனையைச்
சேர்ந்தவர், அபுதாகீர். இவர், கோட்டூர்புரத்தில் உள்ள, ஒரு தனியார் வங்கியில், கிரெடிட் கார்டு வாங்கியிருந்தார். இவர், இந்தக் கார்டை பயன்படுத்தி, 2005ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 20 ஆயிரத்து, 735 ரூபாய்க்கு, வாகன எரிபொருள் வாங்கியுள்ளதாகவும், அதனால், அந்தக் கடன் பணத்தை செலுத்த வேண்டும் என, ஷை வங்கி கோரியது.
அதிர்ச்சியடைந்த அபுதாகீர்
அந்தக்'கார்டை, நான் பயன்படுத்தவில்லை; பொருட்களை நான் வாங்கவில்லை: ஏதோ தவறாக பணப்பரிவர்த்தனை
நடந்துள்ளது' என, அபுதாகீர் வங்கியினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை வங்கி ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கடன் தொகையை கட்டினால்தான், நீங்கள் கணக்கை தொடர முடியும் என்று, வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
இதனால், வேறு வழியின்றி அந்த வங்கியில் 20 ஆயிரத்து, 735 ரூபாயை, அபுதாகீர் செலுத்தினார். செலுத்திய தொகையுடன்,
உரிய இழப்பீடும், வழக்குச் செலவும் அந்த வங்கி தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என, சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில்,
வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி மோனி அவர்கள், இந்த வழக்கில், 'வங்கி, முறைகேடாக வர்த்தகம் செய்துள்ளது. அபுதாகீர் செலுத்திய, 20 ஆயிரத்து, 735 ரூபாயுடன், இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்கு, 5,000 ரூபாயும் என, மொத்தம், 35 ஆயிரத்து, 735 ரூபாயை, மனுதாரருக்கு, வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.02.2018
No comments:
Post a Comment