குழந்தை நல எண் அவசியம்!
நகரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், தாய் சேய் நலத் திட்டத்தில் செவிலியர்களின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய விபரம் பெறப்பட்டு பிக்மி என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்பிறகு அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 12 இலக்கம் கொண்ட பேறுசார் அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை RCH (Rural Child Health) வழங்குகிறது.
அரசு மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள்!
இதனைப் பெற கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மட்டுமே அணுக வேண்டும். அரசு மருத்துவமனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
இந்த எண்ணின் அவசியம் என்ன?
குழந்தையினுடைய பிறப்புச் சான்றிதழ், அரசு வழங்குகின்ற மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு இந்த எண் மிகவும் அவசியமாகும். தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சேவை பெறுகின்ற கர்ப்பிணி பெண்களும் இந்த 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணைப் அவசியம் பெற வேண்டும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அந்தந்தப் பகுதியில் பணிபுரிகின்ற செவிலியர்களிடம் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொலைபேசி மூலமாகவும் பதியலாம்.
ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பதிய முடியாத (நாடு முழுவதிலும் உள்ள) கர்ப்பிணிப் பெண்கள் 102 என்ற எண் மூலமாகவும் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட பின் உங்களது செல்போனுக்கு அவர்கள் 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணை அனுப்புவார்கள். .
தொலைபேசி மூலமாகவும் பதியலாம்.
ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பதிய முடியாத (நாடு முழுவதிலும் உள்ள) கர்ப்பிணிப் பெண்கள் 102 என்ற எண் மூலமாகவும் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட பின் உங்களது செல்போனுக்கு அவர்கள் 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணை அனுப்புவார்கள். .
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய வட்டாரங்களில் வசித்து வருகின்ற கர்ப்பிணிப் பெண்கள் மேற்கண்ட 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணை இதுவரை பெறாமல் இருந்தால் உரிய விபரங்களைப் பெற 04562-255623 என்ற தொலைபேசி மூலமாகவும், 87789
64401 என்ற செல்போன் எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 08.02.2018
No comments:
Post a Comment