இணையத்தின் மூலமாக எத்தனையோ வேலைகளை வீட்டில் இருந்தபடியே நம்மால் சிரமம் இல்லாமல் செய்ய முடிகிறது. வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக நாம் ஓட்டுநர் உரிமம் பெறவும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் டிஜிலாக்கர் (DigiLocker). பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள்.
டிஜிலாக்கர் என்றால் என்ன?
நமது மத்திய அரசாங்கம் நாம் ஒவ்வொருவருடைய சான்றிதழ்கள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும், தேவைப்படுகின்ற போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ள லாக்கரின் பெயர்தான் டிஜிலாக்கர். இதனை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஆதார் எண்ணும், செல்போன் எண்ணும் சொந்தமாக இருக்க வேண்டும். அவைகளை பயன்படுத்திதான் இந்த லாக்கரை நாம் பெறவும், பயன்படுத்தவும் முடியும். ஒவ்வொருவருக்கும் 1 GB சேமிப்பகமானது டிஜிலாக்கரில் வழங்கப்படுகிறது.
டிஜிலாக்கரை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
முதலில் https://digilocker.gov.in/ இணையதளத்தினுள் சென்று உங்களது பெயர் மற்றும் ஆதார் எண்ணை அதற்குரிய இடத்தில் டைப் செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password அனுப்பி வைக்கப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம். ஒருவருக்கு ஒரு அக்கவுண்டுதான் ஓப்பன் செய்ய முடியும். உங்களுக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் கூகுளில் அக்கவுண்ட் இருந்தால் அதனை வைத்தும் உங்களது பாஸ்வேர்டை அமைத்துக் கொள்ளலாம்.
தற்போது நமது நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதற்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது, டிஜிலாகர் உடன் இணைந்து வழிவகுத்துள்ளது.
டிஜிலாக்கரின் பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களிலும், கணினிகளிலும்
ஆர்.சி. (RC)இன் டிஜிட்டல் வடிவத்தை எளிதாக தற்போது அணுகமுடியும்.
டிஜிட்டல் ஓட்டுனர் உரிமத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
டிஜிலாக்கர் படி, டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம், அசல் ஆவணங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கும்.
⧭ குடிமக்கள் தரவு மூலத்தில் (Database) இருந்து நேரடியாக நம்பகமான டிஜிட்டல் ஓட்டுநர் உரிமையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
⧭ டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை முகவரியின் அடையாளமாகவும், அடையாளத்தின்
ஆதாரமாகவும் மற்ற துறைகளோடு பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் உங்களது சிரமங்கள் குறையும்.
⧭ டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் ஆவணத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது மொபைலில் டிஜிலாகர் பயன்பாட்டில் உள்ள QR ஸ்கேன் வசதி மூலம் டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸின் நம்பகத்தன்மையை சோதித்துப்பார்க்க முடியும்.
டிஜிலாக்கர் மூலம் டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
⧭ முதலில் தங்கள் ஆதார் அட்டை எண்ணை டிஜிலாகர் கணக்குடன் நீங்கள் இணைக்க வேண்டும்.
⧭ அது முடிந்தவுடன்,
அவர்கள் Pull Partner Documents பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
⧭ வழங்குபவர் & ஆவண வகைகளைத் தேர்ந்தெடுத்து ஆவணம் தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.
⧭ ஆவணம் தரவுத்தளத்தில் (Database) இருந்து பெறப்படும்.
⧭ இப்போது டிஜிட்டல் ஆவணத்திற்கு ஒரு "நிரந்தர இணைப்பு" (URL) கிடைக்கும்.
இதனை,"Issued Documents" பிரிவின் கீழ் சேமித்துக் கொள்ள வேண்டும்.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 28.03.2018
No comments:
Post a Comment