disalbe Right click

Monday, March 12, 2018

மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம்

எஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான STATE BANK OF INDIA கடந்த 06.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளுக்கான அபராதத் தொகையை ஏப்ரல் 1 முதல் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது
எந்தக் கிளை அக்கவுண்டுக்கு எவ்வளவு அபராதம்?
மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால்..... 
 சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருக்கும் அக்கவுண்டுக்கு முன்பு 30 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்தது. அது தற்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் +  ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது  
  75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 50 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 15 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
நகரப் புகுதிகள் உள்ள வங்கிக் கிளைகளில்.....
நகரப் பகுதிகளில் உள்ள STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை 2,000 ரூபாய் வரை நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால், 
  சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 7.50 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது.
  75 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் +ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில்.... 
கிராமப்புற STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 1,000 ரூபாய்  இருக்கவேண்டும். அதனை நிர்வகிக்கவில்லை என்றால்....
  சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 5 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 7.50 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
  75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய்ஜிஎஸ்டியாகக்  குறைக்கப்பட்டு உள்ளது
மினிமம் பேலன்ஸ் தேவையில்லாத கணக்குகள் 
நாடு முழுவதிலுமுள்ள STATE BANK OF INDIA வங்கியில் மொத்தம்  41 கோடி சேமிப்புக் கணக்குகள்   இருக்கிறது. இவற்றில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல் 21 வயதுக்கும் குறைவாக உள்ள மாணவ, மாணவியர்களின் சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்க அவசியமில்லை
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.03.2018 

No comments:

Post a Comment