பால் அலுவலகங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி நமக்கு ஏற்கனவே தெரியும். இதன் மூலம் அனுப்புகின்ற பணம் போய்ச் சேர்வதற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை ஆகும். இதிலேயே தந்தி மணி ஆர்டர் என்ற சேவையில் நாம் விரைவாக மற்றவருக்குப் பணம் அனுப்ப முடியும்.. இதனால். ஒரு நாளிலேயே பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இணையதளம் மூலமாக.....
இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை IMO (Instant Money Order) இப்போது தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்திலேயே
பணம் அனுப்பவும். பெறவும் முடியும்.
எவ்வளவு அனுப்ப முடியும்?
குறைந்த கட்டணத்தில் ரூ.50 ஆயிரம் வரை இணைய தளம் வழியாக பணம் அனுப்பலாம். பணம் அனுப்ப நினைத்து, அணுகும் நபருக்கு அஞ்சல் நிலையங்களில்
உள்ள சேவை மையங்களில் பணத்தைச் செலுத்திய பிறகு, அவரிடம் ரகசியமாக 16 இலக்க எண் ஒன்று வழங்கப்படும். அந்த எண்ணை வழங்குபவருக்குக் கூட அந்த எண் எது என்பது தெரியாது. அவர் யாருக்கு பணம் அனுப்புகிறாரோ அவருக்கு அந்த எண்ணை இ–மெயில் அல்லது செல்போன் மூலமாக அந்த எண்ணை தெரிவிக்க வேண்டும்.
பணத்தைப் பெறுபவர் தன் அடையாள அட்டை மற்றும் 16 இலக்க ரகசிய எண்ணை, தபால் நிலையங்களில்
காண்பித்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையின் மூலம் அனுப்புவதும் பெறுவதும் மிகவும் எளிதானது.
கட்டணம் எவ்வளவு?
இந்த சேவையில் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரைக்கும் உடனடி மணியார்டர் அனுப்ப ரூ.100 கட்டணம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ரூ.110 கட்டணம். அதற்கு மேல் ரூ.50 ஆயிரம் வரை ரூ.120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.03.2018
No comments:
Post a Comment