வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணைய சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு
15 வகையான சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு
💬 சாதிச் சான்றிதழ்,
💬 வருமானச் சான்றிதழ்,
💬 இருப்பிடச் சான்றிதழ்,
💬 முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்
💬 கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ்
ஆகிய 5 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது
💬 விவசாய வருமானச் சான்றிதழ்,
💬 சிறு, குறு விவசாயி சான்றிதழ்,
💬 கலப்புத் திருமணச் சான்றிதழ்,
💬 விதவைச் சான்றிதழ்,
💬 வேலையின்மைச்
சான்றிதழ்,
💬 குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ்,
💬 கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான
சான்றிதழ்,
💬 ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ்,
💬 திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்,
💬 வாரிசு சான்றிதழ்,
💬 செல்வ நிலைச் சான்றிதழ்,
💬 அடகு வணிகர் உரிமம்,
💬 வட்டிக்குப் பணம் கொடுப்போர் உரிமம்,
💬 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ்
ஆகிய சான்றிதழ்களையும் இந்த வசதி மூலம் பொதுமக்கள் பெறலாம்.
என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பொதுச்சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு ஒன்று வழங்கப்படும்.
இந்த விவரம் அவர்கள் பதிவு செய்துள்ள செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். தங்களது விண்ணப்பங்களின்
நிலவரத்தை அறிய '155250' என்ற எண்ணுக்கு விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி
அனுப்பியோ அல்லது இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தோ பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு
இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்த குறுஞ்செய்தி கிடைத்தவுடன் விண்ணப்பதாரர்
இணையதளத்தில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது அருகிலுள்ள அரசு பொதுச்சேவை மையம் மூலமாகவோ சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.03.2018
No comments:
Post a Comment