முடியும், ஆனால் முடியாது!
இந்துவாக இருக்கின்ற ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கோ, முஸ்லீம் மதத்திற்கோ மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது தந்தையின் சொத்தில் அவருக்கு கண்டிப்பாக பங்கு உண்டு. ஆனால், அவரது பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் பங்கு கிடையாது.
இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு-26
மேற்கண்ட குழப்பங்களுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு - 26 தீர்வு தருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த தகப்பனார் ஒருவர் இறந்து போனால், அவரது வாரிசான அவரது மகனுக்கு அல்லது மகளுக்கு (அந்த மகன்/மகள் மதம் மாறி இருந்தாலும்) அவரது சொத்துக்கள் சேரும். அதோடு வாரிசுரிமை ஒரு முடிவுக்கு வந்துவிடும். மகனின் மகன்களுக்கு அதாவது பேரன்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.
தந்தை இறப்புக்கு முன்னரே மகன்/மகள் இறந்திருந்தால்?
தந்தையார் உயிரோடு இருக்கிறார். அவருக்கு முன்னரே மதம் மாறிய அவரது மகன்/மகள் இறந்துவிட்டார். ஆனால், மகனின் மகன் / மகள் அல்லது மகளின் மகன் / மகள் அதாவது பேரன் / பேத்தி உயிரோடு இருக்கிறார். இந்த நிலையில் தாத்தா இறந்து விடுகிறார். தாத்தாவின் சொத்தில் மதம் மாறிய தந்தைக்கு வரவேண்டிய பங்கு, மேற்கண்ட எந்த பேரனுக்கும் எந்த பேத்திக்கும் கிடைக்காது.
சுருக்கமானச் சொல்வதென்றால், இறந்து போன ஒரு இந்துவின் சொத்துக்களை நேரடியான அவரது வாரிசுகள் அடைந்து கொள்ளலாம். அவர்கள் எந்த மதத்திற்கு மாறியிருந்தாலும் சரி. ஆனால், மதம் மாறிய வாரிசின் வாரிசுகளுக்கு அந்த உரிமை ரத்தாகிறது. இதுவே இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு - 26 தருகின்ற தீர்வாகும்.
E. ரமேஷ் மற்றும் ஒருவர்
Vs P. ரஜினி மற்றும் இருவர் (2002-MLJ-216)" என்ற வழக்கில், ஜாதிக் குறைபாடுகளை
போக்கும் சட்டத்தின் பிரிவு 1ன்படி, ஒரு இந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதால், அவருக்கு தனது சொத்தை இழந்து விடுவார் என்பது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.04.2018
No comments:
Post a Comment