disalbe Right click

Thursday, May 31, 2018

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204 
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 156(3) மற்றும் 200-ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் அளிக்கப்படுகின்ற புகாரின் மீது (Private Complaint) புலன்விசாரணை செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு,அனுப்பி வைத்த புகாரில்(எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) எதிர்மறையான ஓர் அறிக்கையை (Negative Report) காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, குற்றவியல் நடுவர் அவர்கள் அந்த அறிக்கையை, “தவறான அறிக்கை” என்று நினைத்தால்,  காவல்துறை தாக்கல் செய்த அந்த அறிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, அந்த புகாரில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 -ன் கீழ் அழைப்பாணை அனுப்ப வேண்டும்
சரியானது என்று நினைத்தால்....?
அதே நேரத்தில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை சரியானது என்று குற்றவியல் நடுவர் முடிவு செய்தால், அது குறித்து புகார்தாரருக்கு ஒரு அறிவிப்பினை அனுப்ப வேண்டும்
புகார்தாரர் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையினை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி பெற்று, அந்த அறிக்கைக்கு ஒரு பதிலுறை அல்லது ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை குற்றவியல்  நடுவர் அவர்கள் தனிநபர் புகாராக கருத வேண்டும்
இந்த சூழ்நிலையில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்துள்ள புகார்தாரர் மற்றும் அவர் தரப்பு சாட்சிகளையும், ஆவணங்களையும் குற்றவியல்  நடுவர் அவர்கள் பரிசீலித்து, புகாரில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தால் அந்த புகாரை நீதிமன்ற கோப்பிற்க்கு ஏற்றுக்கொண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 204 ன் கீழ் எதிரிக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும்
குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றால்?
முகாந்திரம் இல்லை என்றால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு - 203ன் கீழ் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும்
இந்த நடைமுறையை குற்றவியல் நடுவர் பின்பற்ற வேண்டும்!
இந்த நடைமுறையை பின்பற்றாமல் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ஏற்றுக் கொண்டு குற்றவியல் நடுவர் வெறுமனே புகாரை தள்ளுபடி செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
Antony Manuvel Raj Vs Inspector of police, 
Theni police station 
CRL. RC. NO - 293/2016, 
DATE - 1.6.2016,
(2016-2-TLNJ-CRL-22)
நன்றி : நண்பரும் வழக்கறிஞருமான  நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்

****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 31.05.2018 

Friday, May 25, 2018

உட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்

உட்பிரிவு சொத்துகளுக்கு பத்திரப்பதிவின்போது கட்டணம்
பத்திரப்பதிவு செய்யப்படும்போது, அதன் உட்பிரிவு சொத்துகளுக்கு கட்டணம்: வருகின்ற   28.05.2018-ம் தேதி முதல் வசூலிக்கப்பட இருக்கிறது
பத்திரப்பதிவின்போது, உட்பிரிவு செய்யப்படும் சொத்துகளுக்கு அவை அமைந்துள்ள இடம் 
மற் றும் பரப்பளவின் அடிப்படையில் பதிவுத்துறையில் உட்பிரிவு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
புதிய மென்பொருள் ‘ஸ்டார் 2.0’
கடந்த 13.02.2018-ம் தேதி முதல் பத்திரப்பதிவுத் துறையில், இணைய வழி பத்திரப்பதிவுக்கான புதிய மென்பொருள்ஸ்டார் 2.0’ அறிமுகம் செய்யப்பட்டது. பத்திரப்பதிவின்போது, பரிமாற்றம் செய்யப்படும் சொத்தானது உட்பிரிவு செய்யப்பட வேண்டியிருந்தால் அதற்கான உட்பிரிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் விவரம் மென்பொருள் வழியாக வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டது. இதனால், கட்டணம் வசூலிப்பதில் சில குழப்பங்கள் பதிவுத்துறைக்கு  ஏற்பட்டன.
இவற்றைத் தவிர்க்கும் வகையில், சில அறிவுறுத்தல்களை தற்போதைய பதிவுத்துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் அவர்கள் பதிவு செய்யும் அலுவலர்களுக்கு  வழங்கியுள்ளார். இதன்படி
  1. சொத்தின் பரப்பு அமைந்துள்ள சர்வே எண், உட்பிரிவு சொத்தின் சர்வே எண்ணின் மொத்த பரப்புக்கு சமமாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை
  2. சமமாக இல்லாமல் குறைவாக இருந்தால், சொத்து அமைந்துள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் இதரப் பகுதிகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில், உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்.
  3. மாநகராட்சி பகுதி என்றால் ரூ.60, நகராட்சி பகுதி என்றால்   ரூ.50, நகராட்சி அல்லாத பிற பகுதி என்றால்  ரூ.40 என வசூலிக்கப்படும்.
  4. பதிவு ஆவணத்தில் எழுதப்பட்ட ஒரே நான்கு எல்லைக்கு உட்பட்ட சொத்தானது, ஒரு சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் இருந்தால், ஒரு உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும்
  5. ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே, உட்பிரிவு சர்வே எண்களில் இருந்து, சொத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்களின் மொத்த கூடுதல் பரப்புக்கு குறைவாக இருந்தால், எத்தனை சர்வே, உட்பிரிவு சர்வே எண்கள் உள்ளதோ அத்தனைக்கும் தனித்தனியாக  உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
  6. அடுக்குமாடி குடியிருப்புகளில், பிரிக்கப்படாத பாகங்கள் (யுடிஎஸ்) பதிவு செய்யும்போது அதற்கு உட்பிரிவு கட்டணம் தேவையில்லை
  7. நத்தம் குடியிருப்புப் பகுதியில், தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்
  8. விவசாய நிலம் மற்றும் மனைகளில் பிரிக்கப்படாத பாகம் பரிமாற்றம் செய்யப்படும்போது, பிரிக்கப்படாத பாகம் அடங்கிய முழு பாகத்தின் பரப்பு, சர்வே, உட்பிரிவு சர்வே எண்ணின் பரப்புக்கு குறைவாக இருந்தால் உட்பிரிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
  9. ஒரே சர்வே எண் கொண்ட சொத்தில், நான்கு பிரிவுகளாக தனித் தனி எல்லைகளுக்குள் குறிப்பிடப்பட்டிருந்தால் உட்பிரிவு கட்டணம் வசூலிக்கப்படும். சர்வே எண் அல்லது உட்பிரிவு சர்வே எண் என்பது இறுதியாக வருவாய்த்துறையால் உட்பிரிவு செய்த எண்ணை குறிக்கும்.
  10. ஒருமுறை உட்பிரிவு கட்டணம்  வசூலிக்கப்பட்ட சொத்து மீண்டும் வேறு ஒருவருக்கு விற்கப்படும்போது, அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
இந்த புதிய நடைமுறை வரும் மே 28-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
*************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 26.05.2018 

Tuesday, May 22, 2018

மாப் ஆப்ரேஷன்

காவல்துறை துப்பாக்கிச் சூடு - விதிமுறைகள்
பொது இடங்களில் நடத்தும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான தெளிவான நிர்வாக நடைமுறை விதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குமாப் ஆபரேஷன்என்று பெயர்
விதிமுறைகள் என்ன?
  • சட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன்னதாக 500 மீட்டர் தூரத்தில், முதலில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண்டும்
  • முன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினர் நிற்க வேண்டும் 
  • இரண்டாவதாக லத்தி சார்ஜ்அணியினர் நிற்க வேண்டும்.
  • மூன்றாவதாக  குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினர் நிற்க வேண்டும்.
  • இறுதி வரிசையில் முதலுதவி அளிக்கும் அணியினர் நிற்க வேண்டும் 
  • முன்னறிவிப்பாக போராட்டக்காரர்களுக்கு மைக்கில் எச்சரித்து விடுத்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்
  • அதன்பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப்புகை குண்டுகளைத் தரையில் படும்படியாக 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுட வேண்டும்.
  • தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அவர்கள் மீது ரப்பர் குண்டுகளையும் வீசலாம்
  • அதன் பின்பு லத்தி சார்ஜ் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகும் கலவரம் அடங்கவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரு வரிசையாக சிறிது முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்ப வேண்டும்.
  • காவலர்களில் ஒருவர் 5 அடி முன்னால் சென்று மீண்டும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்..  
  • இதன் பிற்கு காவல் அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம் கூட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட முக்கியமான ஒரு நபரை மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார். (அந்த நபர் சுடப்பட்டதும் போராட்டக்காரர்கள் கலைந்து ஓடுவிடுவார்கள் என்பது காவல் துறையினரின் கணிப்பு) 
  • அதன் பின்பு உடனடியாக முதலுதவி அணியினர் முன்னேறிச் சென்று குண்டடிப் பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நடைமுறைகள் ஏனோ இப்போது பின்பற்றப்படுவது இல்லை.
********************************************************** செல்வம் பழனிச்சாமி - 23.05.2018