உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது புகார் அளிக்க....
மேயர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி
அலுவலர்கள் மீதான முறைகேடு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகத்தில்
கடந்த 2014-ல், ‘உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்’ ஏற்படுத்தப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முதல் முறைமன்ற நடுவராக முனைவர் சோ. அய்யர், இ.ஆ.ப.(ஓ)., அவர்கள் 22.04.2015 அன்று பிற்பகலில் பொறுப்பேற்றார். இரண்டாவது முறையாகவும் அவரே மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தலைமையில் கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
இச்சட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொதுப்பணியாளர்களால் தொடர்புடைய சட்டத்தின் வகை முறைக்கிணங்க நிர்வாக செயல்பணிகளை செய்துமுடிக்கையில் செய்யப்படும்
ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் அல்லது முறைகேடுகள் எதன் பேரிலுமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணியாளர்கள் என்றால் யார்?
“பொதுப் பணியாளர்” என்றால் தலைமையர் அல்லது துணைத் தலைமையர், மேயர் அல்லது துணை மேயர் உள்ளடங்களாக உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கும்.
அதிகாரங்கள்
(1) முறைமன்ற நடுவர், விசாரணை எதனின் நோக்கத்திற்காக, 1908-ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி உரிமை வழக்கு ஒன்றினை விசாரணை செய்யும் உரிமையியல் நீதிமன்றமொன்றின்
மற்றும், குறிப்பாக, பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பாக, அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பார்,
அதாவது
(a) முறையீட்டாளரை அல்லது சாட்சி அளிப்பவர்களை வருகை தருமாறு அழைப்பதற்கு மற்றும் கட்டாயப்படுத்துவதற்கு மற்றும் அவரை உறுதிமொழியின் பேரில் விசாரிப்பதற்கு
(b) தொடர்புடைய மற்றும் தேவைப்படும் ஆவணம் எதனையும் கண்டுபிடிப்பதற்கு மற்றும் முன்னிலைப் படுத்துமாறு கேட்பதற்கு
(c) உறுதி ஆவணங்களின் பேரில் சான்றினைப் பெறுவதற்கு
(d) பொதுப் பதிவுரு எதனையும், அல்லது அதனின் நகலை நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் கேட்டுப் பெறுவதற்கு
(e) சாட்சி அளிப்பவரை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக பணிப்பாணையை வழங்குதல் மற்றும்
(f) வகுத்துரைக்கப்படலாகிறவாறான பொருட்பாடு எதுவும்
(2) முறைமன்ற நடுவர் முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில்
பொருள் எதுவுமில்லை என்று கண்டுணர்கிறவிடத்து அவர் ஆணையொன்றினால், செலவினமாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகையொன்றினை எதிர் தரப்பினருக்கு வழங்குமாறு முறையீட்டாளரைப்
பணிக்கலாம்.
(3) எழுத்து வடிவிலான முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில்
உள்ளாட்சி அமைப்பு நிதியத்தின் இழப்பு பற்றியதாக இருக்கிறவிடத்து, முறைமன்ற நடுவர், விசாரணையின் போது, சான்றினை சேகரித்து இழப்பினை நிச்சயிக்கலாம்
மற்றும் அந்த இழப்பை ஏற்படுத்தியதற்கு பொறுப்பாகவுள்ள
நபரிடமிருந்து அந்தத் தொகையினைப் பெறுவதற்கு அவருடைய ஆணையில் பணிக்கலாம்.
(4) (2)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி முறைமன்ற நடுவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி செலுத்தத்தக்க தொகை, அவரால் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள்
செலுத்தப்படாமல் இருக்கிறதென்றால்,
அந்தத்தொகை, 1864-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலித்தல் சட்டத்தின்படி நிலவருவாய் பாக்கி இருந்தாற்போன்று வசூலிக்கப்படுதல்
வேண்டும்.
அலுவலக முகவரி:
தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்,
எண்.100, அண்ணாசாலை,
கிண்டி, சென்னை-600 032.
மின்னஞ்சல்:
ombudsmanlocal@tn.gov.in
இணையதளம்: www.tnlbo.tn.gov.in
தொலை பேசி : 044-22201337
நிகரி 044-22201337
முனைவர் சோ. அய்யர், இ.ஆ.ப.(ஓ),
முறைமன்ற நடுவர் 044-22201337
திரு.சீ. சோமுபாண்டியன், எம்.ஏ., பி.எல்.,
செயலாளர் 044-22201301
திருமதி ப. தாமரைச் செல்வி, எம்.எல்.,
சட்ட ஆலோசகர் (துணைச் செயலாளர் - சட்டம்) 044-22201300
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள்:
திரு.மு. சந்திரசேகரன்,
பொதுத் தகவல் அலுவலர்
திரு.மு. பழனிவேல்,
மேல்முறையீட்டு
அலுவலர் 044-22201337
புகார் மனு மாதிரி
*********************
*********************
https://fb.watch/pkPQzvDAh1/?mibextid=Nif5oz
புகார் மனுவில் 10 ரூபாய்க்கான கோர்ட்ஃபீ ஸ்டாம்ப் கண்டிப்பாக ஒட்டவேண்டும்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் - சட்டம் தமிழில்
http://www.tnlbo.tn.gov.in/assets/acts.pdf
நகராட்சி ஆணையர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் மனுதாரருக்கு அனுப்பிய நோட்டீஸ் நகல்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.05.2018
No comments:
Post a Comment