disalbe Right click

Thursday, June 28, 2018

போக்குவரத்து போலீசாரின், 'இ - சலான்' திட்டம்;


 போக்குவரத்து போலீசாரின், ' - சலான்' திட்டம்;
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், பணமில்லா பரிவர்த்தனை முறையில் அபராதம் வசூலிக்க, தமிழக  போக்குவரத்து காவல் துறைஅறிமுகம் செய்துள்ள ' - சலான்' திட்டமானது தமிழகம், முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
 1992க்கு முன் தமிழ்நாட்டில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, , போலீசார், அபராதம் விதித்து, ரசீது வழங்குவார்கள்வாகன ஓட்டிகள், அந்த ரசீதை நீதிமன்றத்தில் காட்டி, அபராதம் செலுத்தி வந்தனர். அதற்குப் பின்னர்,  'ஸ்பாட் பைன்' முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால், இதன் மூலம், பல்வேறு முறைகேடுகள் போக்குவரத்து காவலர்களால் நடந்தது.  
இதனை முடிவுக்குக் கொண்டு வர, தமிழக காவல் துறை, பணமில்லா பரிவர்த்தனை முறையில் அபராதம் வசூலிக்கும், - சலான் திட்டத்தை அறிமுகம் செய்தது
சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்
இந்த இசான் திட்டம், முதன்முதலாக சென்னை மாநகர போலீசில், மே, 10ல், அமல்படுத்தப் பட்டது.இதற்காக, கேமரா மற்றும் ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்யும், ஸ்வைப்பிங் வசதியுடன் கூடிய, 300 கையடக்க மின்னணு கருவிகள் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப் பட்டது.
இதன் மூலம் தரப்படும் ரசீது வாயிலாக, கடன் மற்றும் பற்று (Gredit & Debit) அட்டைகளை பயன்படுத்தி அபராதம் செலுத்தலாம்பாரத ஸ்டேட் வங்கியின், www.onlinesbi.com என்ற இணையதள முகவரியிலும், துரித குறியீடு எனும், கியூ.ஆர்., கோடு, பேடிஎம், தமிழக அரசின்
- சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்களிலும், பணமில்லா பரிவர்த்தனை வழியாக அபராதத்தை, இரண்டு நாட்களில் செலுத்த வேண்டும்.
இந்த வசதியை பயன்படுத்த முடியாதவர்கள், இந்த ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அபராதத்தை ரொக்கமாக செலுத்தலாம்.
அபராதம் செலுத்தியதற்கான ரசீதை, அருகில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம், அபராதம் செலுத்தியவர் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்போக்குவரத்து விதிகளை மீறுகின்ற வாகன ஓட்டிகளின் விபரம், மின்னணு கருவி வழியாக, உடனடியாக, ஆர்.டி..,விற்கும் சென்று விடும்.
போலீசார், எந்த வகையிலாவது, வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால், லஞ்சமாக கருதப்பட்டுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டு உள்ளது. 
இந்தக் கருவியின் செயல்பாடுகள் எப்படி?
போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ள, மின்னணு கருவியின் செயல்பாடுகள் அனைத்தும், கணினிமயமாக்கப் பட்டுள்ளது. அந்த கருவி மூலமாக, ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்ய முடியும். விதிமீறலில் ஈடுபட்டோரின் வாகன எண்ணை போக்குவரத்துக் காவலர் அந்த கருவியில் பதிவு செய்ததும், அவரது பெயர், வீட்டு முகவரி, மொபைல் போன் எண், இதற்கு முன் எத்தனை முறை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்ற விபரங்கள் அனைத்தும், திரையில் தெரியும்.
கருவியில் உள்ள வசதிகள் என்ன?
மேலும், அந்த கருவியில், 75 வகையான போக்குவரத்து விதிமீறல், அதற்கான அபராத தொகை ஆகிய விபரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதை, 'கிளிக்' செய்ததும், அபராதம் வசூலிக்கும் போலீசார், அபராதம் செலுத்தும் வாகன ஓட்டிகள் ஆகிய இருவரும், மின்னணு கருவியிலேயே கையெழுத்திட வசதி உள்ளது. கையெழுத்து போட தெரியாதவர்கள் தங்க்ளது விரல் கைரே கையை பதிவு செய்யலாம்.
போக்குவரத்து விதி மீறல்கள் நடக்கும் இடம், அபராதம் விதிக்கும் நடைமுறைகள், போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் அனைத்தையும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கண்காணிக்கும் வகையில் இந்தக் கருவி அதிக தொழில் நுட்ப வசதியுடன் உள்ளது.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.06.2018 


No comments:

Post a Comment