தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கைவிட்டால்....!
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவ, மாணவியர், பின்னர் அதை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. 01.07.2018- முதல் 05.07.2018-வரை அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று அதனை ஏதோ ஒரு காரணத்தால் கைவிடுவோர் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., தகவல்குறிப்பேட்டில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விதிகளில் கீழ்க்கண்ட விதியும் இணைக்கப்படுகிறது.
அதன்படி, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் 02.08.2018-ஆம் தேதி முதல் 19.08.2018 ஆம் தேதிக்குள் இடங்களைக் கைவிட்டால் ஒப்பந்தத்தைத் மீறியதற்காக ரூ. ஒரு லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 19.08.2018 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு இடங்களைக் கைவிட்டால் ரூ.பத்து லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.06.2018
No comments:
Post a Comment