disalbe Right click

Thursday, July 26, 2018

சிறப்புத் திருமணச் சட்டம் - 1954

சிறப்புத் திருமணச் சட்டம்  - யாருக்காக?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
சிறப்பு திருமண சட்டம்-1954
நமது நாட்டில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதத்தினர்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்துவ திருமண சட்டம்-1872  இந்து, இஸ்லாமியர், பார்சி, யஹொதி மதங்களை தவிர்த்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது.
இந்து திருமண சட்டம்-1955ஆனது இந்து, ஜெயின், பவுத்த, சீக்கிய மதத்தினருக்கு  பொருந்தும்பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு என்றும் தனி தனியாக திருமண சட்டங்கள் நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நமது நாட்டில் ஒரு மதத்தை விட்டு வேறொரு மதம் மாறி திருமணம் செய்து கொள்வதை அந்தந்த மதத்தைச் சேர்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. அப்படியென்றால் மதம்விட்டு மதம் மாறி காதலிப்பவர்கள் எப்படித்தான் திருமணத்தை பதிவு செய்து கொள்வது?.
சில ஆண்டுகளுக்கு முன் வரை அப்படி மதம் மாறி திருமணம் செய்துகொள்வது சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமணமாக இருந்தது. மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரிக்க தொடங்கியதால், அந்த திருமணங்களை சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு திருமணம் சட்டம்-1954  அமல்படுத்தப்பட்டது.  இதனை கலப்புத் திருமணச் சட்டம் என்றும் கூறுகிறார்கள். இச்சட்டம் கடந்த 01.01.1955ம் ஆண்டு முதல் ஜாமு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் மூலம் சாதி, மதம், மொழி பேதமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் உரிமை நாட்டுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு திருமண சட்டத்தின் படி வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும் மத கலாச்சாரம் அல்லது சீர்த்திருத்த முறையில் திருமணம் செய்து கொள்பவர்கள் சிறப்பு திருமணம் சட்டம்-1954, சட்டப்பிரிவு 4ஐ  பின்பற்ற வேண்டும் 

  •  சிறப்பு திருமணம் சட்டம்-1954ன் கீழ், திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் ஆணுக்கு திருமணமாகி மனைவி உயிருடன் இருக்கக்கூடாது. அதேபோல் பெண்ணுக்கு திருமணமாகி கணவர் உயிருடன் இருக்கக்கூடாது.
  •  திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் மணமகன், மணமகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.
  • திருமணம் செய்து கொள்ள இருவரின் மனபூர்வமான ஒப்புதல் இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் விருப்பமில்லாமல் திருமண பந்தத்திற்குள் செல்பவர்களாக இருக்ககூடாது.
  • மணமக்கள் மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்பவர்களாக இருக்கக்கூடாது.
  • திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் மணமகனுக்கு 21 வயது, மணமகளுக்கு 18 வயது முழுமையாக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
  • மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்கக்கூடாது.
  • மணமக்கள் கண்டிப்பாக உறவினர்களாக இருக்கக்கூடாது.
புதிய சிறப்பு சட்டத்தின்படி திருமண ஏற்பாடு செய்ய என்ன செய்ய வேண்டும்?
  • அரசாங்க பதிவு மூலம் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்ற தம்பதிகள், தங்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக 30 நாட்களுக்கு முன் அரசு திருமண பதிவு அதிகாரிக்கு நேரில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அதில் எந்த இடத்தில், என்ன தேதியில், அந்த மத வழிமுறைப்படி திருமணம் நடக்கிறது என்ற விவரங்கள் குறிப்பிட வேண்டும்.
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 6-ன்படி பதிவு திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தம்பதிகள் கொடுக்கும் விண்ணப்பப் படிவத்தை பரிசீலனை செய்யும் அரசு அதிகாரி, தன் நகலை தனது அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பார். 
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 7-ன்படி அரசு அலுவலகத்தில் வெளியிடப்படும் திருமண தகவலில் தம்பதிகள் நியாயமான சட்டப்படி திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள் அல்ல என்று பொதுமக்களில் எவரும் உரிய ஆதாரங்களுடன் ஆட்சேபனை மனு கொடுக்கலாம். 
  • அவ்வாறு யாரிடமிருந்தாவது ஆட்சேபனை திருமண பதிவாளரிடம் ஆட்சேபனை மனு கொடுத்தால், முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் முடிவெடுக்க, சிவில் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் திருமண பதிவு அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • விசாரணையின் போது குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றால், ஆட்சேபனை மனு தள்ளுபடி செய்யப்படும். நியாயமான காரணங்கள் இருந்தால், திருமணம் செய்து வைக்க மறுக்கப்படும்சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 8-ன்படி பாதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து கொள்ளலாம்.
  • பதிவு திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்து 30 நாட்களுக்கு பின் ஆட்சேபனை ஏதும் எவரிடத்தில் இருந்தும் வராத நிலையில், பதிவு அதிகாரி மூன்று சாட்சிகளின் கையெழுத்துடன் தம்பதிகள் விரும்பும் கலாச்சாரத்தின் அடிப்படையில் பதிவு திருமணம் செய்து வைப்பார்
  • இது போன்ற பதிவு திருமணமானது அரசு அலுவலகம் அல்லது தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ள மண்டபத்திற்கு அதிகாரி நேரில் வந்து நடத்தி வைப்பார்
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 12-ன்படி திருமண நாளில் திருமணம் செய்து வைக்கும் உரிமை பெற்ற அதிகாரி முன் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியரில் மணமகன் தனது பெயரை குறிப்பிட்டு, மணமகனாகிய நான்,  மணமகளின் பெயரை குறிப்பிட்டு, மணமகளாகிய உன்னை, இன்றிலிருந்து சட்டப்படி மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். நாம் இருவரும் வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் வரை கணவன், மனைவியாக வாழ ஒப்புதல் அளிக்கிறேன் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதே போன்ற  உறுதிமொழியை மணமகளும் கொடுக்க வேண்டும். அவர்கள் அறிக்கையில் கொடுக்கும் உறுதிமொழியின் கீழ் தம்பதியரின் உறவினர்கள் மூன்று பேர் சாட்சியாக கையெழுத்திட வேண்டும். அப்போது தான் அந்தத் திருமணம் அரசால் அங்கீகரிக்கப்படும்.
  • சிறப்பு திருமணம் சட்டம்-1954,  பிரிவு 13-ன்படி திருமணச் சான்றிதழ்:- பதிவு திருமணம் முடிந்த பின், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மணமகன், மணமகள் தம்பதியராக அங்கீகரிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் இரண்டு அசல் திருமண பதிவுச் சான்றிதழ்களை கணவன், மனைவியிடம் பதிவு அதிகாரி வழங்குவார்.


No comments:

Post a Comment