disalbe Right click

Thursday, August 16, 2018

கோர்ட்டு சொன்னாதான் வழக்குப்பதிவு

பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு!
திருப்பூர்:போலி சான்றிதழ் தயாரித்து, மாநகராட்சியில் பணிபுரிந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இளம் பொறியாளர் மீது, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி, பொறியியல் பிரிவில், இளம் பொறியாளராக சந்திரசேகரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, 2017 ஜூலையில் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
போலி சான்றிதழ் தயாரித்து, அரசு வேலையும், பதவி உயர்வும் பெற்ற சந்திரசேகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீஸ் கமிஷனரிடம், திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் மனு அளித்தார்.
விசாரித்த ரூரல் போலீசார், வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில், கனகராஜ் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், சந்திரசேகரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், ரூரல் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 16.08.2018

No comments:

Post a Comment