ஹிந்துவாக மாறிய பெண்ணின் பணியை உறுதி செய்தது ஐகோர்ட்
சென்னை, 'கிறிஸ்தவ மதத்தில் இருந்து, ஹிந்து மதத்துக்கு மாறிய, ஆதிதிராவிட பெண்ணின், பணி நியமனம் சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்திலிருந்து.......
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, சிக்கத்தம்பூப்பாளையத்தைச் சேர்ந்தவர், டெய்சி ப்ளோரா; கிறிஸ்தவ ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பின், ஹிந்து மதத்துக்கு மாறி, மேகலை என, பெயர் சூட்டிக் கொண்டார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, 1999-ல், திருமணம் செய்து கொண்டார். இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து, 2004-ல், தேர்வு எழுதினார். அதிக மதிப்பெண் எடுத்தும், தேர்வு செய்யப்படவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது,
அவரது ஜாதி சான்றிதழ் ஏற்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
உயர் நீதிமன்றத்தில், வழக்கு!
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், மேகலா வழக்கு தொடுத்தார். நீதிமன்றத்தின்
இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, 2005-ல், பணியில் சேர்க்கப்பட்டார். பின், கல்வி தகுதியின் அடிப்படையில், 2007-ல், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
பிரதான இந்த வழக்கு, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார்
முன், விசாரணைக்கு
வந்தது. மேகலா சார்பில், வழக்கறிஞர், ஆர்.முத்துகண்ணு ஆஜரானார்.
மனுவை விசாரித்த, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
- ஹிந்து மதத்துக்கு மாறி, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவரை, மேகலா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- கிறிஸ்தவ மதத்தில் இருக்கும்போதும், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இதில், எந்த சர்ச்சையும் இல்லை.
- ஹிந்து மதத்துக்கு மாறியதை, அந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா; அதை நிரூபிக்க ஆதாரம் உள்ளதா; மதம் மாறிய பின், ஹிந்து மத சடங்குகளை பின்பற்றுகிறாரா என்கிற, சர்ச்சைக்கு தான் தீர்வு காணப்பட வேண்டும்.
- ஹிந்து மதத்துக்கு மாறிய நிகழ்ச்சி, அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அளித்த சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது.
- மேலும், கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், வருவாய் ஆய்வாளரின் பரிந்துரைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
- மதம் மாறிய பின், அரசு இதழிலும் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
- சர்வதேச அளவில், புகழ் பெற்ற அமைப்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளது. ஹிந்து மதத்தின் மகத்துவம், அதன் சடங்குகள், நடைமுறைகளை, நாடெங்கும் பரப்பி வருகிறது.
- மதம் மாற்றத்துக்கான பூஜை, 'சுத்தி சடங்கு' நடத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த சடங்குகளை, 'பண்டிட்' ஒருவர் நடத்தி உள்ளார்.எனவே, நாடு முழுவதும் கிளைகள் கொண்ட, புகழ் பெற்ற ஹிந்து அமைப்பு, மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, சான்றிதழ் வழங்கி உள்ளது.
- ஹிந்து மத சடங்குகளை மனுதாரர் பின்பற்றுவதாக, அந்தப் பகுதியில் வசிப்பவர்களும், வருவாய் அதிகாரிகளிடம், வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- அதனால், ஹிந்து ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என, மனுதாரர் கோருவதில், எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
- மனுதாரரின் ஜாதி பற்றி, இன்னும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவரது ஜாதிஅந்தஸ்தின் அடிப்படையில், பணியில் தேர்வு செய்து நியமிக்கப்பட்டதை, உறுதி செய்ய வேண்டும்.
- அதன்படி தற்போது, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவது,உறுதி செய்யப்படுகிறது.
- ஜாதியை காரணம் காட்டி, இவரது நியமனத்தில் தொந்தரவு கூடாது.
********************************நன்றி : தினமலர் நாளிதழ் -22.08.2018 செய்தி
No comments:
Post a Comment