disalbe Right click

Monday, August 27, 2018

ஆற்றை சுத்தப்படுவது குற்றமா.. போலீஸை கண்டித்த கோர்ட்..

ஆற்றை சுத்தப்படுவது குற்றமா.. போலீஸை கண்டித்த கோர்ட்..
நாம் தமிழரை ரிமாண்ட் செய்ய மறுப்பு 

கரூர்: அமராவதி ஆற்றில் அனுமதியின்றி சீமைக்கருவேல மரங்களை அகற்றியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 12 பேரை ரிமாண்ட் செய்ய நீதிபதி மறுத்துவிட்டார். அதோடு அவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் 12 பேர் அமராவதி ஆற்றில் தூர் வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். புதிய மற்றும் பழைய ஆற்றுப்பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொக்லைன் மிஷினை கொண்டு இந்த வேலையில் இறங்கினர். அங்கு ஏராளமான குப்பைகளுடன் நிறைய சீமைக்கருவேல மரங்களும் இருந்தன. அதனால் எல்லாவற்றையுமே 12 பேரும் அகற்றிக் கொண்டே வந்தனர்.
விரைந்து வந்த அதிகாரிகள்
விரைந்து வந்த அதிகாரிகள் இந்த தகவல் அறிந்து பொதுப்பணி, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆற்றுப் பகுதிக்கே வந்துவிட்டனர். அனுமதி பெற்றுக் கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டுங்கள் என அவர்களிடம் சொன்னார்கள். ஆனால் 12 பேரும் தொடர்ந்து அனுமதி வாங்காமலேயே சுத்தப்படுத்தி கொண்டு இருந்தனர்.
12 பேரும் கைது
12 பேரும் கைது
இந்த தகவல் புகாராக அளிக்கப்பட்டு, கரூர் டவுன் போலீசார் வந்துவிட்டார்கள். அனுமதியின்றி தூர் வாரிக் கொண்டிருந்த 12 நாம் தமிழர் கட்சியினரையும் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் கூறுவது என்னவென்றால், "இப்படி ஆற்றில் தூர் வாரி, சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு உரிய பதில் இல்லாததால் நாங்களே இப்படி தூர் வார வந்துவிட்டோம்" என்றனர்.
மண்ணில் புதையாதா?
கைது செய்யப்பட்டவர்கள் இப்படி கூறுகிறார்களே என்று அதிகாரிகளிடத்தில் கேட்டால், "கரூர் லைட்அவுஸ் அமராவதி ஆற்றுபாலம் 90 வருஷத்துக்கு மேல் பழமையானது. இப்போதான் ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கியுள்ளது. இந்த நேரத்தில் பொக்லைன் மிஷினை ஆற்றுக்குள் இறக்கில் மண்ணில் புதைந்துவிடாதா?" என்று கேள்வி எழுப்பினர்.
ரிமாண்ட் செய்ய மறுப்பு
ரிமாண்ட் செய்ய மறுப்பு
கடைசியில் கைது செய்யப்பட்ட 12 பேரும் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, "இவர்கள் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில்தானே ஈடுபட்டனர்? இது ஒரு சமூக சேவைதான். அதனால், அவர்களை ரிமாண்ட் செய்ய வேண்டிய தேவையில்லை. அப்படி ரிமாண்ட் செய்துவிட்டால், இளைஞர்கள் சமூக சேவையில் ஈடுபட என்றுமே முன்வர மாட்டார்கள்" என்று போலீசாரை கண்டித்தார்.
அதோடு ரிமாண்ட் மனுவையும் தள்ளுபடி செய்து 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து 12 பேரும் சிறைக்கு செல்லாமல் அவரவர் வீடு திரும்பினர்.
நன்றி : ஒன் இந்தியா தமிழ் செய்திகள் - 27.08.2018

No comments:

Post a Comment