பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை
அரசு அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் அளிக்கப்படுகின்ற மனுக்கள் மீது அந்த அலுவலகத்திலுள்ள அதிகாரியால் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாத நேரங்களில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றும் சில திருத்தங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (ஏ) துறை அரசாணை (எண்:73) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அலுவலக நடைமுறை நூல் - அத்தியாயம் 22 - மனுக்கள் - அனுப்புதல் & முடிவு செய்தல்
➽ குறை களைவு மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் அந்த மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு, மனுதாரருக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.
➽ குறை களைவு மனுக்கள் பெறப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் குறைகள் களையப்பட வேண்டும்.
➽ மனுக்களை அனுப்பியவர்கள் அரசுத்துறை அலுவலர்களை அணுகி கேட்கும்போது, அவர்களது குறை களைவு மனுக்களின் மீதான நடவடிக்கை தொடர்பான நிலையினை அவர்களிடன் தெரிவித்தல் வேண்டும்.
➽ ஏதேனும் காரணங்களால், மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க கூடுதலாக அவகாசம் தேவைப்படும்போது, அதுபற்றிய நீட்டிக்கப்பட்ட கால அளவு குறித்து எழுத்துபூர்வமாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
➽ மனுதாரரின் மனுக்களை ஏற்க இயலாது என்றால், அதற்குரிய காரணத்துடன் கூடிய பதிலை மனுதாரருக்கு ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
ஆளுநர் அவர்களது ஆணையின்படி அரசு தலைமைச் செயலாளர் இதனை வெளியிட்டு அனைத்து அரசுத்துறைகளுக்கும் அனுப்பியுள்ளார்.
அரசாணையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.08.2018
No comments:
Post a Comment