disalbe Right click

Sunday, November 11, 2018

மோசடி பத்திரப்பதிவு புகார் மேல்முறையீட்டில் மாற்றம்

மோசடி பத்திரப்பதிவு - புதிய சுற்றறிக்கை
மோசடி பத்திரப்பதிவு புகார் மேல்முறையீட்டில் மாற்றம்
மோசடி பத்திரப்பதிவு குறித்த மேல்முறையீடுகளை, அந்தந்த மண்டல, டி..ஜி.,க்களே விசாரிக்கலாம்' என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக, பத்திரங்கள் பதிவானால், அது குறித்த புகார்களை விசாரிக்கும் நடைமுறையில் குழப்பம் நிலவியது.
விசாரிக்க உத்தரவு
இதில், பதிவு அலுவலர்களை, வழக்கில் சேர்ப்பது தொடர்பாக, 2011ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 2017 நவ., 11ல், திரும்ப பெறப்பட்டதுஇதில், 2011 முதல், 2017 நவ., வரை, மோசடி பத்திரப் பதிவுகள் தொடர்பான புகார்கள் குறித்து, மாவட்ட பதிவாளர்கள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதில், மேல்முறையீடு செய்வோர், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தை அணுக வேண்டும் என, ஜூலையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் வர துவங்கி உள்ளன. இதில், மனுதாரர்கள், சென்னைக்கு வர வேண்டிய சூழல் எழுந்தது. இதனால் ஏற்படும் அலைச்சல் உள்ளிட்ட விஷயங்களை கருதி, சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
60 நாட்கள்
இதன்படி, மேல்முறையீடு செய்ய விரும்பும் புகார்தாரர்கள், அந்தந்த மண்டல, டி..ஜி.,க்களிடம் மனு அளிக்கலாம். இந்த மனுக்களை, 60 நாட்களுக்குள் விசாரித்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க, டி..ஜி.,க்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, பதிவுத் துறை பிறப்பித்து உள்ளது.
Letter No.41530/U1/2017 dated 09.11.2018   https://tnreginet.gov.in
நன்றி : தினமலர் நாளிதழ் - 11.11.2018

No comments:

Post a Comment