குற்றவியல் நடுவரின் அதிகாரம் என்ன?
ஷேக் தாவூத் என்பவர் தனக்கு சொந்தமான ரூ. 25000/- மதிப்புள்ள ஈட்டி மரக்கட்டில் மற்றும் நாற்காலிகள் உட்பட இதரப் பொருட்களை வீட்டில் பூட்டி வைத்திருக்கும் நிலையில், தனது மூத்த சகோதரி வீட்டை உடைத்து அந்தப் பொருட்களை திருடிச்சென்று விட்டதாகவும், இது குறித்து அவரிடம் கேட்டபோது தன்னை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் ஷேக் தாவூத்தின் புகாரில் உண்மையில்லை என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
புலன்விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை
அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த குற்றவியல் நடுவர், வழக்கை CBCID விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் CBCID போலீசார் புலன் விசாரணை ஏதும் மேற்கொள்ளாததால் ஷேக் தாவூத் மதுரை உயர் நீதிமன்றத்தில்,
குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவுபடி தனது வழக்கை CBCID போலீசார் புலன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
குற்றவியல் நடுவர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
இதற்கிடையில் CBCID போலீசாரும், குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் என்ன கூறியது?
இரண்டு வழக்கையும் நீதிபதி திரு. C. T. செல்வம் விசாரித்தார்.
உச்சநீதிமன்றம் " சந்திரபாபு (எ) மோசஸ் Vs மாநில அரசு (CRL. A. No - 866/2015) " என்ற வழக்கில், குற்றவியல் நடுவர் ஒரு குறிப்பிட்ட புலன் விசாரணை துறையை (Specific Agency), அந்த வழக்கில் "மேற்கொண்டு புலன் விசாரணையை செய்யும்படி" உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
ஒரு குற்ற வழக்கில்" மேற்கொண்டு புலன் விசாரணை "(Further Investigation) செய்யும்படி உத்தரவிடலாமே தவிர, அந்த வழக்கை வேறொரு புலன் விசாரணை அமைப்பு "மேற்கொண்டு புலன் விசாரணை" செய்யும்படி ஓர் உத்தரவினை பிறப்பிக்கும்
அதிகாரம் குற்றவியல் நடுவருக்கு இல்லை. அந்த அதிகாரம் உயர்ந்த அதிகாரங்கள் கொண்ட நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது.
குற்றவியல் நடுவர் உத்தரவு ரத்து
எனவே ஷேக் தாவூத் வழக்கை CBCID போலீசார் விசாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஷேக் தாவூத் Vs ஆய்வாளர்,CBCID திருச்சி
2016-1-TLNJ-CRL-157
நன்றி : எனது நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan
No comments:
Post a Comment