ரயில் பயணிகள் வைத்திருக்க வேண்டிய வாட்ஸ் அப் எண்
ரயில் பயணிகளுக்கு ஓர் அன்பான அறிவிப்பு! புதிய வாட்ஸ்அப் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பயணம் செய்யப் போகின்ற ரயிலின் வருகையை துல்லியமாக தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே துறையானது புதிய வாட்ஸ்-அப் எண் ஒன்றை அறிவித்துள்ளது.
'வாட்ஸ் அப்' மூலம் ரயிலின் வருகை குறித்து பயணிகள் அறிந்துக்கொள்ள '7349389104' என்ற மொபைல் எண்ணை ரயில்வேத்துறை அறிமுகபடுத்தியுள்ளது.
மேற்கண்ட எண்ணை உங்கள் ஆண்டிராய்டு செல்போனில் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாட்ஸ்-அப்பில் சென்று சேமித்து வைத்துள்ள அந்த 7349389104 எண்ணிற்கு பயணிகள் தாங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயிலின் எண்ணை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், பயணிகளின் வாட்ஸ் அப்பில் தாங்கள் குறிப்பிட்ட ரயில் எண், அதன் பெயர், எப்போது அது புறப்பட்டது?, எந்த ரயில் நிலையத்தை அது தாண்டி உள்ளது?, அடுத்துள்ள ரயில் நிலையத்தை அது எப்போது வந்தடையும்? ஆகிய தகவல்களை அடுத்த சில நொடிகளில் குறுச்செய்திகளாக பெற முடியும்.
இந்தியன் ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து இந்த சேவையை அளிக்கிறது. அதனால் நீங்கள் வாட்ஸ் அப் மூலமாகவே உங்களுக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment