காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை
குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41ல், பிடியாணை இல்லாமல், ஒருவரை காவல்துறை அதிகாரி கைது செய்யலாம்! என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-A
ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை! என்பது பற்றி குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-Aல் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர், அழைப்பாணையின்படி காவல் அதிகாரியின் முன் ஆஜராகாமலோ, காவல் அதிகாரி நடத்துகின்ற விசாரணைக்கு ஒத்துழைக்காமலோ, இருந்தால் நீதிமன்ற உத்தரவின்படி அவரை காவல்துறையினர் கைது செய்யலாம்.
டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை
அமந்த்தீப்சிங் ஜோஹர் VS தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி ANR (உரிமையியல் நீதிப் பேராணை கோரும் மனு எண்:7608/2017 வழக்கில், வழங்கப்பட்ட 07.02.2018 நாளிட்ட தீர்ப்புரையில், குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-Aன் கீழ், அறிவிப்பு வழங்குவதற்கான மாதிரிப் படிவமும், அதன் உட்பொருளும் மற்றும் அதனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு .சார்பு செய்யும் விதம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு சுற்றறிக்கை
மேற்கண்ட தீர்ப்பின் அடிப்படையில் தமிழக காவல்துறை இயக்குநர் அவர்கள், தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையினை அனுப்பியுள்லார். அதில் ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை! என்பது பற்றிய வழிகாட்டுதல்கள் உள்ளது. அந்த சுற்றறிக்கையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்! என்று மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளவற்றை பின்பற்றாத புலன் விசாரனை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் அர்னேஷ்குமார் எதிர் பீகார் அரசு (2014) 8 SCC 273 வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்! என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள் இறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 08.02.2019
No comments:
Post a Comment