disalbe Right click

Wednesday, March 13, 2019

காதல் திருமணம் - ரேஷன் கார்டு தர புது நிபந்தனை


காதல் திருமணம் - ரேஷன் கார்டு தர புது நிபந்தனை
நடைமுறை என்ன?
தமிழகத்தில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவரின் பெயர்கள், வேறு கார்டில் இருக்கக்கூடாது. புதியகார்டுக்கு விண்ணப்பிபவர்கள் யாராக இருந்தாலும், பெயர் நீக்கல் சான்று அவசியம். தங்கள் பெற்றோர்களின் ரேசன் கார்டிலிருந்து தங்களது பெயரை நீக்க, முதலில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் ஒரிஜினல் ரேசன் கார்டை இணைக்க வேண்டும். பெற்றோர்களை பகைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் இது சாத்தியப்படுவதில்லை. அவர்களின் பெயரை கார்டில் இருந்து நீக்க, பெற்றோர் அனுமதிப்பதில்லை.இதனால், பாதிக்கப்படுவோர், சென்னையிலுள்ள, உணவு வழங்கல் துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர்.
என்ன நடக்கிறது?
அங்குள்ள அதிகாரிகள், பயனாளியின் பெயரை கார்டில் இருந்து நீக்கும்படி, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவார்கள். அதன்படி வட்ட வழங்கல் அதிகாரி, பதிவேட்டில் இருந்து  பெயரை நீக்கி, தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார். அதன்பின், பெயர் நீக்கல் சான்று வழங்கப்படும்அதனை, புதிய கார்டு பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துடன் இணைத்து வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் சமர்ப்பித்து, கார்டு பெறலாம்.
இதற்கு, அதிக காலதாமதம் ஆவதால், காதல் திருமணம் செய்தவர்கள், ரேஷன் கார்டு பெற மிகவும் சிரமப்படுகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
எந்த ஒரு திருமணமாக இருந்தாலும், ஆணுக்கு, 21; பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த தம்பதிக்கு, பெற்றோர்  விருப்பம் இல்லாவிட்டாலும், தங்களின் குடும்ப ரேஷன் கார்டில் இருந்து, தங்களது பெயரை நீக்கிக் கொள்ள உரிமை உள்ளது. காதல் திருமணம் செய்தவர்கள், தங்களது பெற்றோரின் கார்டில் இருந்து, தங்களது பெயரை நீக்கி கொள்ள, 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளில், இதனால் ஏற்படுகின்ற'சட்ட நடவடிக்கைக்கு முழுப் பொறுப்பாவோம்' என, கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரம் ஒன்றை வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் அளிக்க வேண்டும். மேலும், இந்த பத்திரம், திருமண பதிவு சான்று ஆகியவற்றை, பெயர் நீக்க கோரும் மனுவுடன், தங்கள் பகுதி உணவு வழங்கல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  
*****************************************ஆதாரம் : தினமலர் செய்திகள் - 14.03.2019

No comments:

Post a Comment