disalbe Right click

Wednesday, April 10, 2019

பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?

தேர்தலில் போட்டியிடுவோரின் தகுதியின்மைகள்
பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் (Representation of the People Act 1951)-ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் -II அத்தியாயம் -III ல் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிக் கேடுகள், அதாவது யார் யார் தேர்தலில் போட்டியிட முடியாது எனப் பார்ப்போம்
அத்தியாயம்-III
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினராக தகுதியின்மைகள்
Disqualifications for membership of Parliament and State Legislatures
பிரிவு 7. பொருள் வரையறைகள் : இந்த அத்தியாயத்தில்உரிய அரசுஎன்பது பாராளுமன்றத்தின் ஈரவைகளில் ஒன்றுக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு மத்திய அரசு மற்றும் அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு மாநில அரசு எனப்பொருள்படும்.
தகுதியின்மைஎன்பது பாராளுமன்றத்தின் ஈரவைகளில் ஒன்றுக்கு அல்லது மாநில சட்டமன்றத்திற்கு அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு தகுதியிழந்தவர் எனப் பொருள்படும்
சில குற்றங்களில் தீர்ப்பு குற்றவாளியின் தகுதியின்மை [பிரிவு8]
Disqualification on conviction for certain offences
(1) பின்வரும் குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருநபர்;
இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் படி
பிரிவு 153 A (மதச்சார்பாக, இனம், பிறந்தஇடம், குடியிருப்பு, மொழி மற்ற பிற வகையில் பகைமையை வளர்ப்பவராக மேலும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவராக அல்லது;
பிரிவு171-E லஞ்சம் பெற்ற குற்றவாளியாக அல்லது;
பிரிவு171-F தகாத செல்வாக்கு உடையவராக அல்லது தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தவராக இருந்தால் அல்லது;
பிரிவு 376 உட்பிரிவு (1) அல்லது (2) அல்லது 376 அல்லது 376-Aஇல் 376-B இல் அல்லது 376 C இல் அல்லது 376-D இல் அல்லது;
பிரிவு 498-A இல் பெண்ணுக்கு கணவனால் கொடுமை செய்த அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்திற்காக அல்லது;
பிரிவு 505 உட்பிரிவு (2) அல்லது உட்பிரிவு (3) பகைமையை தோற்றுவித்தல் அல்லது தூண்டுதல், வகுப்புகளுக்குள் வெறுப்பு அல்லது தீயஎண்ணத்தை, வழிபாடு நடக்கும் இடங்களில் அல்லது தெய்வவழிபாடு நடக்கும் கூட்டங்களில் அல்லது மதச்சார்பான விழாக்களில் தோற்றுவிக்கும் வகையில் அல்லது;
குடிமுறை உரிமைகள் சட்டம்,1955 [Protection of Civil Rights Act, 1955] இல் தீண்டாமை போதிப்பதற்கும் நடைமுறைபடுத்துவதற்கும் மேலும் அதனை கட்டாயப்படுத்துவதற்கும் தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன; அல்லது
சுங்கச்சட்டம்,1962 [The Customs Act, 1962] பிரிவு 11இன் கீழ்தடை செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கான குற்றம்; அல்லது
சட்டபுறம்பான செயல்கள்(தடுப்புச்) சட்டம்,1967 [Unlawful Activities (Prevention) Act, 1967] பிரிவு 10 முதல் 12 ( சட்டத்திற்கு புறம்பான சங்கத்தில் உறுப்பினராக இருத்தல், சட்டத்திற்கு புறம்பான சங்கத்தின் நிதியை கையாளும் குற்றம், அல்லது குறிப்பிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை மீறும் குற்றத்திற்காக; அல்லது;
வெளிநாட்டு செலாவணி (ஒழுங்குமுறை) சட்டம, 1973 [Foreign Exchange (Regulation) Act, 1973] அல்லது
போதை மருந்து மற்றும் மயக்கம் தரும் பொருட்கள் சட்டம், 1985 [Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985] அல்லது
தீவிரவாத மற்றும் குழைக்கும் செயல்கள் (தடுக்கும்) சட்டம்,1987 {Terrorist and Disruptive Activities (Prevention) Act, 1987 ] பிரிவு 3 (தீவிரவாத செயல்கள் புரியும் குற்றம்) அல்லது பிரிவு 4 (குலைக்கும் செயல்கள் புரியும் குற்றம்) அல்லது;
மத சார்பான நிறுவனங்கள் (தவறான பயன்பாட்டைத் தடுத்தல்) சட்டம்,1988 {the Religious Institutions (Prevention of Misuse) Act, 1988] பிரிவு 7 (பிரிவுகள் 3 லிருந்து 6 வரை உள்ள வழிவகை மீறுகை குற்றத்திற்காக
அல்லதுமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951 இன்பிரிவு 125 (தேர்தல் சம்பந்தமாக இனங்களுக்குள் பகைமையை வளர்த்தல் குற்றத்திற்காக 
அல்லது  பிரிவு 135 (வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டுகளை பறிமுதல் செய்த குற்றத்திற்காக 
அல்லது 135A வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய குற்றத்திற்காக
அல்லது பிரிவு 136 உட்பிரிவு (2) கூறு (a) வஞ்சகமாக வேட்புமனுக்களை தெளிவற்றதாக்குதல் அல்லது அழித்தல் குற்றத்திற்காக
அல்லது வழிபாடு செய்யும் இடங்கள் (சிறப்புகூறுகள்) சட்டம்,1991[Places of Worship (Special Provisions) Act, 1991] பிரிவு 2 (வழிபாடு செய்யும் இடங்களை மாற்றியமைத்த குற்றத்திற்காக) அல்லது தேசிய நன்மதிப்பை அவமதிப்பைத் தடுக்கும்சட்டம்,1971 [Prevention of Insults to National Honour Act, 1971] பிரிவு 2 (இந்திய கொடியை அவமதிக்கும் அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் குற்றத்திற்காக) அல்லது பிரிவு 3 (தேசிய கீதம் பாடுவதைத் தடுக்கும் குற்றதிற்காக) 
அல்லது உடன்கட்டை ஏறுதல் தடுப்புச் சட்டம்,1987 [Commission of Sati (Prevention) Act, 1987] 
அல்லதுஊழல்தடுப்புச்சட்டம்,1988 
அல்லது தீவிரவாதத் தடுப்புச்சட்டம்,2002 [Prevention of Terrorism Act, 2002] 
அல்லதுகுற்றத் தீர்ப்புக்குள்ளான நபர், குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும். அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருக்கும் போது, குற்றத் தீர்ப்பு அளித்த நாளிலிருந்து ஆறாண்டுகளுக்கும் அபராதம் மட்டும்அத்தகைய குற்றத்திற்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவர் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து ஆறாண்டுகளுக்குத் தகுதியின்மையுடையவராகிறார்
(2) பதுக்கல் அல்லது கொள்ளை இலாபத்தை [hoarding or profiteering] தடுக்கும் தொடர்பான எந்தச் சட்டமாயினும்
அல்லது உணவு அல்லது மருந்துகளில் கலப்படம் தொடர்பான எந்தச் சட்டமாயினும்; அல்லது வரதட்சணைதடுப்புச்சட்டம்,1961-இல் எந்தக் கூறாக இருந்தாலும் குற்றவாளியாகத் தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் (3) உட்பிரிவு (1) அல்லது (2) இல் குறிப்பிட்டுள்ள எந்தவொரு குற்றத்தையும், தவிர்த்து, எந்தவொரு நபருக்கும் ஏதேனும் குற்றத்திற்காக 2 வருடங்களுக்கு குறையாமல் சிறைதண்டனை விதிக்கப்படிருந்தால், அவர் தண்டனை விதிக்கப்படிருந்த நாளிலிருந்து தேர்தலுக்கு நிற்க தகுதியின்மை உடையவராகிறார். மேலும், விடுதலையான நாளிலிருந்து ஆறாண்டுகளுக்குத் தகுதியின்மையடைகிறார்.
(4) உட்பிரிவு (1) அல்லது (2) எவ்வாறு இருப்பினும், எந்தவொரு உட்பிரிவின் கீழான தகுதியின்மையானது, நபர் ஒருவர், குற்றத் தீர்ப்புத் தேதியில் மக்களவை அல்லது மாநிலங்களவை மாநிலசட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது, அந்தத் தேதியிலிருந்து 3 மாதங்கள், கடந்தபின்னர் செயலுக்குவரும் அல்லது அந்தக் காலஅளவிற்குள் குற்றத் தீர்ப்பு அல்லது தண்டனை பொறுத்து மேல்முறையீடு அல்லது சீராய்வு விண்ணப்பம் செய்யப்பட்டு இருப்பின், அந்த மேல்முறையீடு அல்லது சீராய்வு நீதிமன்றத்தால் முடிவு அல்லது தீர்வு செய்யப்படும் வரை செயல் விளைவுக்கு வராது.
விளக்கம்;இந்தஉட்பிரிவில் பதுக்கல் அல்லது கொள்ளை இலாபத்தைத் தடுத்தல் தொடர்பான சட்டம் என்பது எந்த ஒரு சட்டம் அல்லது , ஆணை, விதி அல்லது அறிவிக்கை[ notification] கீழ்க்காணும் கூறுக்களுக்கான சட்டத்திற்குண்டான அதிகாரத்தையுடையது.
அத்தியாவசியப் பொருள்களைத் தயாரித்தல் அல்லது உற்பத்தியை ஒழுங்கு முறைப்படுத்துதல்;
அத்தியாவசியப் பொருட்களின் வாங்கும் மற்றும் விற்கும் விலையைக் கட்டுப்படுத்துதல்;
அத்தியாவசியப் பொருள்களைக் கைப்பற்றுதல் வைத்துக்கொள்ளுதல், சேர்த்துவைத்தல், கொண்டுசெல்லுதல், விநியோகம், தீர்வுசெய்தல், நுகர்தல் அல்லது பயன்படுத்துதல் ஆகியவற்றை ஒழுங்கு முறைப்படுத்துதல்;
சாதாரணமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை விற்காமல் தடுத்து நிறுத்துவதைத் தடுத்தல்;
சாதாரணமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை விற்காமல் தடுத்து நிறுத்துவதை தடுத்தல்;
மருந்துஎன்பது மருந்து மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டம்,1940 [Durgs and Cosmetics Act, 1940] குறிப்பிட்டுள்ள படி;
அத்தியாவசியப் பொருள் என்பதன் பொருள் அத்தியாவசியப் பொருள் சட்டம்,1955 [Essential Commodity Act, 1955] குறிப்பிட்டுள்ள படி;
உணவுஎன்பதன் பொருள் உணவு கலப்படம் தடுப்பு சட்டம், 1954 [Prevention of Food Adulteration Act, 1954]இல் அதற்கென குறிப்பிட்டுள்ள படி;
By வழக்கறிஞர் சி.பி. சரவணன்
நன்றி : தினமணி நாளிதழ் - 13.02.2019 https://www.dinamani.com

No comments:

Post a Comment