disalbe Right click

Thursday, April 11, 2019

அறிவுரை கழகம் என்றால் என்ன?

அறிவுரை கழகம் என்றால் என்ன? அது எங்குள்ளது?

நமது மாநிலத்தில் மாவட்டந்தோறும்அறிவுரை கழகம்’’ செயல்பட்டு வருகிறது. நன்னடத்தை கைதிகளை விடுவிக்க,. இந்த கழக்த்திற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைவராகவும், மாவட்ட முதன்மை நீதிபதி, தலைமை நீதித்துறை நடுவர், சிறை கண்காணிப்பாளர், மண்டல நன்னடத்தை அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
அறிவுரை கழகம் நீதி மன்றம் அல்ல
அறிவுரை கழகம் என்பது தீர்ப்பு வழங்கும் நீதி மன்றம் அல்ல. கைது செய்யப்பட்டவர்களின் தரப்பு நியாயங்களை விசாரித்து அரசுக்கு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா இல்லையா என்று பரிந்துரை செய்வார்கள், அவ்வளவுதான்!. கைது செய்தது தவறு என்று கூறி விடுதலை செய்யுமாறு கூறலாம், அல்லது கைது செய்தது சரிதான் என்றும் கூறலாம்.
நன்னடத்தை கைதிகளின் பட்டியல்
ஆயுள் தண்டனை பெற்று 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த நன்னடத்தை கைதிகளின் பட்டியலை தயாரித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நன்னடத்தை அலுவலர் ஆகியோருக்கு சிறைத்துறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அனுப்புவார்.


விசாரணை அறிக்கை
இதன்பேரில், சம்பந்தப்பட்ட கைதி சிறையில் இருந்து வெளியே சென்றால் அவரால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா? அவருக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என காவல்துறையினரும், வருவாய் துறையினரும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
அறிவுரை கழகத்தின் அதிகாரம்
இந்த விசாரணை அறிக்கை, கைதிக்கு சாதகமாக இருந்தால் அறிவுரை கழகத்திற்கு சிறைத்துறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் முலம் பரிந்துரை செய்யப்படும். இதன்பின்னர், கலெக்டர் தலைமையிலான அறிவுரை கழகம் கூடி, ஆய்வு செய்த பின்னர், உள்துறை மூலமாக தகுதியான கைதிகள் விடுதலை செய்யப் படுவார்கள். 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ், ஒருவரை கைது செய்தது சரியா என விசாரிக்கவும், அறிவுரை கழகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டம்-1980 மற்றும் தமிழ்நாடு குண்டர்கள் தடுப்புச் சட்டம் - 1982ன் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் மட்டுமே இங்கு விசாரிக்கப்படுவார்கள்
குண்டர் சட்டக் கைதிகள்
குண்டர் சட்டம் மூலம் கைது செய்யப்பட்ட கைதி இங்கு 45 நாட்களுக்குள் ஆஜர் செய்யப்படுவார். கைது செய்யப்பட்ட நபர் இருக்கின்ற சிறைக்கூடத்திற்கு இது குறித்த சம்மன் அனுப்பப்படும். இந்த விசாரணை நடக்கும் சமயத்தில் கைதியின் உறவினர் ஒருவர் மட்டும் விசாரணை நடக்கும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார். அவரிடத்திலும் நீதிபதி விசாரனை நடத்துவார். அதன்பிறகு இந்த வழக்கை விசாரனை செய்து கொண்டிருக்கும் விசாரணை அதிகாரியையும் இங்கு விசாரிப்பார்கள்.
குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் எவரும் இங்கு வழக்கறிஞர் மூலம் வாதாட முடியாது. தங்கள் தரப்பு நியாயங்களை அவர்களேதான் நீதிபதி முன்பு எடுத்துரைக்க வேண்டும்.
ஒருவேளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சரிதான் என்று இங்கு முடிவு செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கைதி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் இங்கு வழங்கப்படும்
சென்னையில் இது எங்குள்ளது?
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ளது
********************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 12.04.2019

No comments:

Post a Comment