சட்டத்தின் பார்வையில் குற்றம் என்றால் என்ன?
- . ஒரு நபரினால் அது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- அந்த நபருக்கு தீய எண்ணம் இருந்திருக்கவேண்டும்.
- அந்த எண்ணத்தின் காரணமாக அவரால் ஒரு செயல் நடைபெற்றிருக்க வேண்டும்.
- அந்த செயலின் மூலமாக ஒருவருக்கு அல்லது உங்களுக்கு ஒரு தீங்கு நடந்திருக்க வேண்டும்.
இவ்வளவும் இருந்தால்தான் அதனை சட்டப்படி குற்றம் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்.
குற்றத்தின் நிலைகள் என்ன ? (Stages of Crime)
பொதுவாக குற்றத்திற்கு நான்கு நிலைகள் உண்டு.
- . ஒருவருக்கு தீய எண்ணம் இருக்க வேண்டும்.
- அந்த தீய எண்ணத்தினால் ஒரு திட்டத்தை அவர் தயாரித்திருக்க வேண்டும்.
- அந்த தயாரிப்பின் காரணமாக அவர் ஒரு செயலை செய்ய முயற்சித்திருக்க வேண்டும்.
- அந்த செயலால் வேறு ஒருவர் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்.
உதாரணமாக, (1) குமார் என்பவர் ராஜா என்பவரை கொல்லவேண்டும் என்று நினைக்கிறார். (2) அதற்காக அரிவாள் செய்யும் இடத்திற்குச் சென்று வீச்சு அரிவாள் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். (3) ராஜாவின் வீட்டுக்குச் சென்று கையில் கொண்டு சென்ற வீச்சு அரிவாளால் அவரை வெட்டுகிறார். (4) ராஜா படுகாயம் அடைகிறார் அல்லது மரணம் அடைகிறார்.
No comments:
Post a Comment