குறைந்த கட்டணத்தில் மருத்துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு
வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் சிறந்த வாய்ப்பு
வெளிநாட்டில்
மருத்துவ பட்டப்படிப்பை
பயில விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பத்தை
வங்கதேசம் தருகிறது. இந்தியாவுக்கு அருகில் அமைந்துள்ள வங்கதேசத்தில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரிகளில் படித்து, பட்டம் பெறுவதன் மூலம் இந்திய மாணவர்கள் தங்களது டாக்டர் கனவை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள இயலும்.
வெளிநாடுகளில்
மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாக பணிபுரிய இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் FMGE ( Foreign
Medical Graduates Examination) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வங்கதேசத்தில் மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் இந்திய தேர்வு வாரியத்தின் தகுதி தேர்வில் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தில்
தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அரபு நாடுகள், நேபாளம், கஜகிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் பயின்ற மாணவர்கள் போல, FMGE தேர்வில் கடந்த 2012-13 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் வங்கதேசத்தில்
MBBS பட்டம் பெற்ற மாணவர்கள் அதிக சதவிகிதத்தில்
தேர்வு பெற்றுள்ளனர்.
அதற்கான காரணம், வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் உள்ள சிறப்பான பாடத்திட்டம், மருத்துவம் சார்ந்த பயிற்சிகள், ஆசிரியர் அணுகுமுறைகள்
மற்றும் தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய பல விஷயங்கள் இந்தியாவைப்போலவே
இருப்பதால் மாணவர்கள், அரசின் சோதனை தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள்.
ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் படித்த மாணவர்கள் போலவே வங்கதேசத்தில் படித்தவர்களும் இந்திய அரசின் தகுதி தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்று Smile Education
Consultancy-ன் தலைமை செயல் அதிகாரி ரீபா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில்
அமைந்துள்ள Smile கல்வி ஆலோசனை மையம் மாணவர்களிடையே
நம்பிக்கை பெற்ற அமைப்பாக செயல்பட்டு, இந்திய மாணவர்கள் வங்கதேசத்தில் மருத்துவ பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை சிறந்த முறையில் அளித்து வருகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு
சென்று மருத்துவப்படிப்பை
மேற்கொள்வதில் ஆர்வமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது போன்ற பாடத்திட்டங்கள், சுற்றுச்சூழல், இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலம் மற்றும் பண்பாடு ஆகிய நிலைகளில் இந்தியாவைப் போன்று
ஒற்றுமைகளை கொண்ட வங்கதேசம் தரமான கல்விக்கான சிறந்த வாய்ப்புகளை மாணவர்களுக்கு
அளித்து வருகிறது. மேலும், மருத்துவக் கல்விக்கான கட்டணங்கள் அதிகப்படியான சுமையாக மாணவர்களுக்கு இருக்காது என்றும் Smile Education
Consultancy தலைமை செயல் அதிகாரி ரீபா பிஸ்வாஸ் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில்
MBBS படிக்க விரும்பும் மாணவர்கள் 17 வயது பூர்த்தி ஆனவர்களாக இருப்பதுடன், 12-ம் வகுப்பு இறுதி தேர்வுகளில் Physics, Chemistry,
Biology ஆகிய பாடங்களில் 60 சதவிகிதத்துக்கு குறையாமல் மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும். தகுதி உள்ள மாணவர்கள் 5 ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் ஒரு ஆண்டு உள்ளிருப்பு பயிற்சி ஆகிய பாடத்திட்டத்தில்
பயின்று பட்டம் பெறலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் இணையம் மூலமாக தங்களது GPA (Grade Point Average) பற்றிய விவரங்களை கண்டறிந்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள,
Smile Education,
4 Santoshpur Lake West Road (3rd
Floor),
Arambagh Food Mart Building,
(Near Santoshpur Lake Shiv
Mandir)
Kolkata - 700075,
West Bengal, India
Helpline : 9903-033-033
Skype: mbbsinbd
Phone: (+91)-91633-22022
Whatsapp/Call: (+91)-988312-3838
Dial: (+91)-903864-3838,
0983126-3838
Landline: 033-40628147
Fax: 2416 6974
Website:
https://www.mbbsbangladesh.com
Read in English :
https://www.mbbsbangladesh.com/mbbs-from-bangladesh
நன்றி : தினத்தந்தி நாளிதழ் - 20.07.2019
No comments:
Post a Comment