திருத்தம் செய்யப்பட்ட போக்குவரத்து விதிகள்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையானது பல மடங்குகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் இன்று (01.09.2019) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகின்றது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட
63 திருத்தங்கள் நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விபத்துகளைக்
குறைப்பதற்காகவும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுப்பதற்காகவும் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச
புதிய அபராதத் தொகை
போக்குவரத்து
விதிகளை மீறுவோருக்கான
பொதுவான அபராதத் தொகை ரூ.100லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவருக்கு
ரூ.100 அபராதமாக இதுவரை வசூலிக்கப்பட்டு
வந்தது. அந்தத் தொகை தற்போது ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் வரை தகுதியிழப்பு
செய்யப்படும்.
இருசக்கர வாகனத்தில் இரண்டு நபருக்கு மேல் பயணித்தால், ரூ.100 அபராதமாக இதுவரை வசூலிக்கப்பட்டு
வந்தது. இனிமேல் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு
செய்யப்படும்.
காப்பீடு (Insurance) செய்யப்படாத வாகனங்களுக்கு அபராதமாக ரூ.1,000 இதுவரை வசூலிக்கப்பட்டு
வந்தது. அந்தத் தொகை தற்போது ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உரிய வயதை அடையாத சிறுவர், சிறுமியர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களின் காப்பாளர் அல்லது அந்த வாகன உரிமையாளர் குற்றவாளியாகக் கருதப்பட்டு
அவர்களிடம் ரூ.25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், அந்த வாகனத்தின் பதிவை ரத்து செய்யவும் முடியும்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு இதுவரை ரூ.500 அபராதத் தொகை விதிக்கப்பட்டு வந்தது. அது ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னரும், வாகனங்களைத் தொடர்ந்து இயக்குபவர்களிடம்
அபராதமாக ரூ.500 இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்களிடம் அபராதமாக ரூ.100 இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு
அபராதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை என்றும், இலகுரக வாகனங்களுக்கான
அபராதம் ரூ.1,000 என்றும், நடுத்தரப் பயணியர் வாகனங்களுக்கான அபராதம் ரூ.2,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்
இனி ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்.!
அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் வாகனங்களை ஓட்டுபவர்களிடம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் விதிமுறைகளை மீறும் முகவர்களுக்கு
ரூ.20,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குபவர்களிடம்
வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.1,000-த்திலிருந்து
ரூ.5000 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
சாலைகளில் பந்தயம் வைத்து வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிக அளவில் லோடு வாகனங்களில்
சுமை ஏற்றி வருவோர்களிடம் அபராதம் ரூ.20,000 மற்றும் கூடுதலான ஒவ்வொரு டன் எடைக்கும் ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும். இதற்கு முன் இந்த அபராதத் தொகை ரூ.2,000 மற்றும் கூடுதல் ஒவ்வொரு டன் எடைக்கும் ரூ.1,000 என வசூலிக்கப்பட்டு வந்தது.
அனுமதிக்கப்பட்ட
எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றினால் ஒவ்வொரு கூடுதல் பயணிக்கும் தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்படும்.
போக்குவரத்து
காவலர்கள் முறைகேடு செய்தால்....
போக்குவரத்து
விதிகளை நடைமுறைப்படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டால், அவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையைப் போல் இருமடங்கு வசூலிக்கப்படும்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.09.2019
No comments:
Post a Comment