உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் அதிகாரங்கள்
உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்தலைவராக விளங்குகிறார். அவருக்கு உதவ பதிவாளர் (நிர்வாகம்), பதிவாளர் (கண்காணிப்பு), பதிவாளர் (மேலாண்மை) ஆகியோர்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய துணைப் பதிவாளர்கள், உதவிப்பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்கள் உள்ளனர்.
உயர்நீதிமன்ற பதிவாளர், அந்நீதிமன்ற மேல்முறையீட்டு
விதிகளில் கூறப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தும் உரிமை மற்றும் மேல்முறையீடுகள், மனுக்கள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள்
போன்றவைகள் தொடர்பான உத்தரவுகளை பெற்றுக் கொள்ளும் உரிமை கொண்டவர். மேலும்,
- உரிய சட்டவிதிகளின் கீழ் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு அனுப்புதல்.
- வழக்கு விசாரணைக்கான தேதியை நிர்ணயித்தல்.
- பதிவேடுகளை வழக்கு தொடர்பானவர்களுக்கு வழங்க உத்தரவிடுதல்.
- ஆவணங்களை தயாரிக்க உத்தரவிடுதல்
- மனுதாரர்கள் வசிக்கும் இடங்களைப் பொருத்து, வழக்கு தொடர்பான காலத்தை நீட்டிக்கவும் இவர் அதிகாரம் பெற்றுள்ளார்.
- நீதிமன்றத்திலோ அல்லது தன்னிடத்திலோ சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு குறிப்பேடுகள், குறைதீர் மனுக்கள், விண்ணப்பங்கள் அல்லது ஏதேனும் வழக்கு நடவடிக்கைகளை திருத்தக் கோரும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருச்சிராப்பள்ளி மற்றும் கருர் ஆகிய மாவட்டங்களின் நீதி முறைமைகளை மதுரை உயர்நீதிமன்றம் கண்காணிக்கிறது.
மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் முகவரி:
பதிவாளர் அவர்கள்
மதுரை உயர்நீதிமன்றம்,
மதுரை - 625 023.
மேலே கண்ட தென்மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களின் நீதி முறைமைகளையும், புதுச்சேரி மாநில நீதி முறைமைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் முகவரி:
பதிவாளர் அவர்கள்
சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை - 600 104
******************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.02.2020
No comments:
Post a Comment