எதிரிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யும் முன் நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்?
- ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும்.
- நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது.
- ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது.
- அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டவை.
- ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக்கூடாது.
- எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏழ்மை நிலையின் காரணமாக காவல் நிலையத்திற்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது புகார்தாரர் அவரை கையெழுத்து போடவிடாத படி தடுக்கலாம் அல்லது காவல் துறையினரே எதிரி கையெழுத்து போட விடாமல் தடுக்கலாம்.
- எனவே ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு முன்பாக எதிரிக்கு அது குறித்து ஒரு அறிவிப்பை அனுப்பி அவர் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும்.
- ஜாமீன் உத்தரவை ரத்து செய்வது அபாயமான ஒன்றாகும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை திரும்ப பெறுகிற ஒரு விஷயமாகும்.
- இயற்கை நீதிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். இயற்கை நீதிமுறைகள் குறித்து சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.
- இதற்கு நீதிபதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. உயர்ந்த நுட்பங்களை கொண்ட ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு நீதிபதிக்கு மாற்றாக செயல்பட முடியாது.
- ஏனென்றால் கம்ப்யூட்டருக்கு எந்தவிதமான உணர்ச்சிகளோ, உணர்வுகளோ கிடையாது.
- எனவே ஜாமீன் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யும் போது நீதிபதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Uma Maheshwari (253/2016)Vs Inspector of police, District Crime Branch, Madurai &
R. Hariharan (254/2016) Vs Inspector of police, District Crime Branch, Madurai (2016-3-MWN-CRL-121)
முகநூல் பதிவு 01.02.2017நன்றி : எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு Dhanesh Balamurugan
முகநூல் பதிவு 01.02.2017நன்றி : எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு Dhanesh Balamurugan
No comments:
Post a Comment