disalbe Right click

Wednesday, February 19, 2020

ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுத் துறை வேண்டுகோள்!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுத் துறை வேண்டுகோள்!
ரேஷன் பொருட்கள் விற்பனை தொடர்பாக அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்., விபரத்தை கவனிக்குமாறு, கார்டுதாரர்களுக்கு, உணவுத் துறை வேண்டுகோள் விடுத்துஉள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 2.05 கோடி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.
இதற்காக, தமிழக அரசு ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. பல அரிசி கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில், காகித ரசீது இருந்தபோது, வாங்காத பொருட்களை வாங்கியது போல், பதிவேடுகளில் எழுதி, முறைகேடு செய்தனர்.
இதனால், முறைகேடு விபரம், கார்டுதாரர்களுக்கு தெரியவில்லை.
தற்போது, பொருட்கள் அனுப்புவது, விற்பனை உள்ளிட்டவை, கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
அதனால், கடைகளில் விற்கப்படும் பொருட்கள், விற்பனை கருவியில் பதியப்படுகின்றன.
பதியப்பட்டதும், அந்த விபரம், கார்டுதாரர்களின் மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும்.
இதற்காக, உணவு வழங்கல் துறையிடம், 2.04 கோடி கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்கள் உள்ளன.
எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள் கவனிப்பதில்லை.
அவ்வாறு, வாங்காத பொருட்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்தால், உடனே, அதை, 97739 04050/ 99809 04040 என்ற மொபைல் எண்களுக்கு, 'பார்வேர்டு' செய்ய வேண்டும்.
நடவடிக்கை
பின், அதிகாரிகள், எஸ்.எம்.எஸ்., வந்த கார்டுதாரரை தொடர்பு கொண்டு, பொருட்கள் வாங்காததை உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பர்.
பொருட்கள் வாங்காத பலர், எஸ்.எம்.எஸ்., வந்தும் புகார் அளிப்பதில்லை.
விரைவில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
எனவே, ரேஷன் எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.12.201

No comments:

Post a Comment