பள்ளிகளில் இருக்க வேண்டிய இட வசதி
தமிழகத்தில் தனியார் பள்ளிகளை தொடங்குவதற்கும், அதற்கு அரசு (கல்வித்துறை) அங்கீகாரம் வழங்குவதற்கும் குறைந்தபட்சமாக இடவசதி (பரப்பளவு) இவ்வளவு இருக்க வேண்டும் என்று அங்கீகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் தன்மைக்கேற்ப இதனை அரசு வரையறுத்துள்ளது.
ஏற்கனவே இருந்த அரசாணைகள்
இதற்கான அரசாணை கடந்த 2004ம் ஆண்டில் கல்வித்துறையால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அரசாணை எண்: பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை (2டி) எண்: 48, நாள்:21.07.2004 ஆகும்.
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளிகளால் மேற்கண்ட அரசாணையில் குறிப்பிட்டபடி தங்களது இடவசதியை அதிகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆகையால், அந்த பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்களின் நலன் கருதி மேலும் மூன்றாண்டுகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு, ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணை எண்: பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை எண்: 238, நாள்:26.11.2008 ஆகும்.
திருத்தப்பட்ட அரசாணை
பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை (2டி) எண்: 48, நாள்:21.07.2004 ல் உள்ளபடி.தனியார் பள்ளிகளால் இடவசதியை மேம்படுத்த முடியாத காரணத்தால் அந்த பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்களின் நலன் கருதி அந்த அரசானையில் இடவசதி பற்றி குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை தளர்த்தி 23.04.2010 அன்று அரசாணை நிலை எண்: 24 வெளியிடப்பட்டது.
வல்லுநர் குழு அமைத்தல் பற்றிய அரசாணை
ஆனால், அதன் பிறகும் இந்த அரசாணையில் குறிப்பிட்டபடி தனியார் பள்ளிகளில் இடவசதியை ஏற்படுத்த பள்ளி நிர்வாகத்தால் முடியவில்லை. ஆகவே வல்லுநர் குழு அமைப்பது குறித்து பள்ளி கல்வித்துறை, அரசாணை நிலை (1டி) எண்: 54, நாள்:05.03.2013 ஐ வெளியிட்டது அதன் நகல் கீழே உள்ளது.
மேற்கண்ட அரசானையில் குறிப்பிட்டுள்ள வல்லுநர் குழு அமைக்கப்பட்டதா, அதன்பிறகு ஏதேனும் அரசானை வெளியிடப்பட்டதா? என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் அவற்றினை பதிவிடுகிறேன்.
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020
No comments:
Post a Comment