பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு.....
முதலில் என்ன செய்ய வேண்டும்?
- பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் அந்த பத்திரத்தை ரத்து செய்துள்ளாரா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
- அந்த பவர் பத்திரத்தை எழுதுவதற்கு அவர் தகுதியானவர்தானா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
- அதற்கு அந்த சொத்தின் தாய்பத்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
- அந்த சொத்து பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் பெயரில் மட்டும் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
- வேறு யாருக்காவது அந்த சொத்து விற்கப்பட்டுள்ளதா? என்பதை வில்லங்கம் போட்டு பார்க்க வேண்டும்.
- பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும்.
- பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் இறந்து எத்தனை நாளாயிற்று? என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும், இது சம்பந்தமாக கடந்த 09.10.2018 அன்று பதிவுத்துறைத்தலைவர் அவர்கள் பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளையும் சொத்து வாங்குபவர்கள் பின்பற்ற வேண்டும்.
பதிவுத்தலைவர் அவர்களின் சுற்றறிக்கை என்ன சொல்கிறது?
பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்கள் சம்பந்தமாக பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் சில அறிவுரைகளை பதிவாளர்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றை கீழே காணலாம்.
- பவர் பத்திரம் எழுதிக் கொடுத்ததன்படி ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட பதிவாளர் அவர்களிடம் தாக்கல் செய்யப்படுகின்றபோது அதை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழும் இணைத்து தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- அந்த பத்திரம் பதிவு செய்யப்படுவதற்கு முன் உள்ள முப்பது நாட்களுக்குள் அந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
- அதற்கு முன்பாக அந்த சான்றிதழ் பெறப்பட்டு இருந்தால் கண்டிப்பாக செல்லாது. அதனால் அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது.
- அதே நேரத்தில் பவர் பத்திரம் எழுதப்பட்டு முப்பது நாட்களுக்குள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு முகவர் விற்பதாக இருந்தால் மேற்கண்ட சான்றை இணைக்க வேண்டியது இல்லை.
- பவர் பத்திரங்கள் மூலம் விற்கப்படுகின்ற சொத்துக்களுக்குத்தான் மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தும்.
- பவர் பத்திரங்கள் மூலம் வாங்கப்படுகின்ற சொத்துக்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தாது.
பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கையின் நகலை கீழே காணலாம்.
*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.03.2020
No comments:
Post a Comment