விபத்து வழக்குகளில் மேல்முறையீடு - நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது:
ஆணையங்களுக்கு
உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: விபத்து இழப்பீடு வழக்குகளில்
அறிவிக்கப்படும் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றால் நிறுவனங்களின் மேல்முறையீடு வழக்குகளை பட்டியலிடக்கூடாது என்று உயர் நீதிமன்ற பதிவகம் மற்றும் மேல்முறையீடு ஆணையங்களுக்கு
அறிவுறுத்தியுள்ளது.
- கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் 22 வயது இளைஞர் பலியானார்.
- இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தொழிலாளர் துணை ஆணையரிடம் முறையிட்டனர்.
- அவர்களின் மனுவை விசாரித்த துணை ஆணையர் இளைஞர் பணியாற்றிய நிறுவனம் ₹2 லட்சத்து 93 ஆயிரத்து 502 இழப்பீடு தருமாறு உத்தரவிட்டார்.
- இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனத்தை சேர்ந்த நஸர் அக்தர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
- இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
- இந்த வழக்கில் விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
- ஆனால், அந்த இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் டெபாசிட் செய்யவில்லை.
- இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களோ, இன்சூரன்ஸ் நிறுவனங்களோ மேல்முறையீடு செய்யக்கூடாது.
- இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களின் பின்னால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒழிந்துகொள்ளக்கூடாது.
- எனவே, இந்த வழக்கில் தொழிலாளர் துணை ஆணையரின் உத்தரவின்படி இழப்பீடு தொகையை 3 மாதத்திற்குள் விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் மேல் முறையீடு செய்பவர் டெபாசிட் செய்ய வேண்டும்.
- மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது இழப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை உயர் நீதிமன்ற பதிவகம் உறுதி செய்ய வேண்டும்.
- அதன் பிறகே மேல்முறையீடு வழக்கை பட்டியலிட வேண்டும்.
- இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு வழக்குகளை நீதிமன்றங்கள் மற்றும் மேல் முறையீடு ஆணையங்கள் விசாரிக்க கூடாது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 08.03.2020
No comments:
Post a Comment