மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்' பற்றிய விழிப்புணர்வு
பொதுமக்களிடத்தில் இல்லை. எனவே அந்த சட்டம் பற்றி நான் படித்து தெரிந்துகொண்ட சங்கதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மூத்த குடிமக்கள் கவனத்திற்கு.....
இந்த சட்டத்தின்படி
வழக்கறிஞரை அணுக வேண்டியதிருக்குமோ?, நீதிமன்றம் செல்ல வேண்டியதிருக்குமோ?, செலவு எவ்வளவு ஆகுமோ? நமக்கு ஒன்றுமே தெரியாதே!. என்று மூத்த குடிமக்கள் கலங்க வேண்டியதில்லை. நன்றாக மனு எழுத தெரிந்திருந்தால் போதுமானது.
நீதி வழங்கும் அதிகாரம்
நீங்கள் வசித்து வருகின்ற பகுதியின் மாவட்ட ஆட்சியரே இதற்கு நீதிபதி ஆவார்.; அந்த மாவட்டத்தின்
வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சமூக நல அதிகாரி, வட்டாட்சியர்,
ஆகியோர்கள் இந்த சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதற்கான முக்கிய அதிகாரிகள் ஆவார்கள்.
இந்த சட்டத்தின் கீழ் புகார்களை அளிக்க விரும்புபவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக குறைகளைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு யாரும் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே போல யாருடைய சான்றொப்பமும் தேவையில்லை.
மனுதாரர்கள் தங்களுக்கு பராமரிப்புக்குண்டான தொகை தேவை என்று விண்ணப்பித்தால்
போதும். அந்தப் புகாரின் மேல் விசாரணைக்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரியே தெரிவிப்பார்.
நன்கு மனு எழுதத் தெரிந்தவர்கள் மூலம் விண்ணப்பிப்பது நல்லது.
பொதுவாக மூத்த குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் இந்த சட்டப்படி தங்களுடைய வாழ்க்கைக்கான பராமரிப்புக்கான தொகையைத்தான் கோருகின்றனர். அதிகப்படியான
தேவைகளை அவர்கள் யாருமே வேண்டுவதில்லை.
யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?.
குறை தீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனுவை அளித்தால் போதுமானது. அவர் அதனை மாவட்ட சமூக நல அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். மாவட்ட சமூக நல அதிகாரி அதனை பரிசீலணை செய்து சப் கலெக்டர் எனப்படுகின்ற வருவாய் கோட்ட அதிகாரிக்கு அனுப்புவார். அவர் முதலில் மூத்த குடிமக்களை அழைத்து விசாரிப்பார்.
பிறகு பிரதிவாதிகளை
அழைத்து விசாரிப்பார்.
அவரே நீதியும் வழங்கலாம்; சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சில நேரங்களில் அதனை மாவட்ட ஆட்சியருக்கு
அனுப்புவார். "பிரதிவாதியை விசாரணைக்கு அழைத்தும் வராவிட்டால் "எக்ஸ்பார்ட்டி' தீர்ப்பு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.
.
சட்டம் என்ன சொல்கிறது?
தனது கணவரின் இறப்புக்குப் பிறகு கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்று கோரும் ஒரு மருமகள் தனது மாமியாரையும்
வைத்து பராமரிக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் மருமகளால் மாமியார் பராமரிக்கப்படாவிட்டால் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்..
பெற்றோர்களுக்கு ஓய்வூதியம் இல்லாவிட்டாலும், மாதச் சம்பளம் வாங்குகின்ற மகன் அல்லது மகன்கள் அவர்களை . வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டாலும்
இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்..
நிலம், வீடு மற்றும் தோட்டம் போன்ற அசையாச்சொத்துகள் இருந்தாலும் ஓய்வூதியம் வாங்கினாலும் அவற்றையெல்லாம் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பெற்றோரை அல்லது மூத்த வயதினரான குடும்ப உறவினரை பட்டினிபோட்டு
தவிக்கவிடுகின்ற "வாரிசுகள்' யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்...
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று பட்டினி போட்டு வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து மனதளவிலும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்தாலும் அவர்கள் மீதும் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்...
தமிழக அரசு மேற்கண்ட விதிகளை உருவாக்கியுள்ளது. பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.04.2020
No comments:
Post a Comment