தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளை பயன்படுத்தாத
தகவல் ஆணையம்
தகவல் ஆணையத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் கதை
- கடந்த மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பை காண நேர்ந்தது.
- அதில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சேத்துபட் ஊராட்சியைச் சேர்ந்த திரு ரிஸ்வான் அகமத்துல்லா என்ற மனுதாரர் தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் ஆறு தகவல்களை செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அவர்களிடம் முறைப்படி கேட்கிறார்.
- தகவல்கள் வழங்கப்படுகிறது.
- மனுதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் வழங்கிய தகவல்கள் திருப்தி அளிக்காத காரணத்தால் முதல் மேல்முறையீடு செய்கிறார்.
- மீண்டும் தகவல்கள் வழங்கப்படுகிறது.
- ஆனால், ஐந்து தகவல்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
- இதனால் மனுதாரர் இரண்டாம் மேல்முறையீட்டை தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறார்.
- ஆணையர் அவர்கள் விசாரணை நடத்தி பதினைந்து நாட்களுக்குள் தகவல் வழங்க உத்தரவிடுகிறார்.
- தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டும் அந்த ஒரு தகவலை பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் அந்த குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் வழங்காமல், மிகவும் காலதாமதமாக ஐம்பது நாட்கள் கழித்து வழங்குகிறார்.
- ஆகையால், பொதுத்தகவல் அலுவலர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் மீண்டும் தகவல் ஆணையத்திடம் முறையீடுகிறார்.
- விசாரனை மீண்டும் நடக்கிறது.
- ஆனால், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் தகவல் ஆணையம் எடுக்கவில்லை வழக்கை முடித்து வைக்கிறார்கள்
- இந்த வழக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரைமுறைகள் கனம் தகவல் ஆணையர் அவர்களால் பின்பற்றப்படவே இல்லை.
- மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் தகவலை வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
- அதுவும் ஒரே ஒரு தகவல்தான். அதையும் கூட பொது தகவல் அலுவலர் அவர்கள் ஐம்பது நாட்களுக்குப் பிறகே வழங்குகிறார்.
- மனுதாரர் புகார் அளித்தும், தகவல் ஆணையத்தின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு தண்டணை ஏதும் வழங்கப்படவில்லை.
- இந்த விசாரணைக்கு மனுதாரர் நேரில் சென்னைக்கு அவரது சொந்த செலவில் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
- ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைக்கிறார்கள்.
- இன்னும் சொல்லப்போனால், தனது ஆணையை பொது தகவல் அலுவலர் அவர்கள் மதிக்காதது பற்றி தகவல் ஆணையர் கனம் தமிழ்குமார் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
- இப்படி ஒரு சட்டம்! இதற்கு ஒரு ஆணையம்!
- இவர்களுக்கு மாதம் இரண்டேகால் லட்ச ரூபாய் சம்பளம்!
- மக்களது வரிப்பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாடு எப்படி உருப்படும்?
தீர்ப்புகளின் நகல்களை டவுண்லோடு செய்ய கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
,
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 13.04.2020
No comments:
Post a Comment