disalbe Right click

Sunday, February 28, 2021

அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீட்


 அரசு மருத்துவமனை - சிகிச்சை - காயம் - மரணம் - இழப்பீடு!

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சிறுமியின் இறப்பு; தாயாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!
  • தமிழ் செல்வி என்பவரின் மகளின் பெயர் சங்கீதா. எட்டு வயது கொண்ட இந்த சிறுமி டான்சில் எனப்படும் (தொண்டையில் சதை வளர்ச்சி) நோயால் அவதிப்பட்டு வந்தார்.
  • சிகிச்சைக்காக கடந்த 07.04.2016 அன்று விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்படுகிறார்.
  • அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறது.
  • துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட சில சிக்கல்களினால், அந்த சிறுமி மதுரையிலுள்ள ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
  • கோமா நிலைக்கு சென்ற அந்த சிறுமி 05.07.2016 அன்று இறந்துவிடுகிறார்.
  • மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகள் இறந்ததாக தமிழ்செல்வி குற்றம் சாட்டி 20 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்கிறார்.
  • நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி, மருத்துவர்களின் மீது தவறு இல்லை என்று ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ( WP(MD)No.2721 of 2017 ) வழக்கை கனம் நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்கள் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவு
  • அரசு மருத்துவமனையில் எதிர்பாராமல் நிகழ்கின்ற காயம், மரணத்திற்கு மருத்துவ அலட்சியம் காரணமாக இல்லாவிடினும் அரசு அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
  • G.O.(M.s) No:395 - 04.09.2018 ன்படி உருவாக்கப்பட்டுள்ள கார்பஸ் நிதியில் இருந்து இறந்து போன சிறுமியின் தாயாரான தமிழ்செல்விக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை எட்டு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்
  • என்று 01.02.2021 அன்று தீர்ப்பளித்துள்ளார்.
அந்த தீர்ப்பின் நகல் பெற கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment