மாநில ஆளுநரைப் பற்றி தெரிந்து கொள்வோம்
⧭ குடியரசுத்
தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்,
⧭ மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.
⧭ மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்.
⧭ பொதுவாக ஒவ்வொரு
மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும்,
7-வது அரசியலமைப்பு
திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட
மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
⧭ மாநில ஆளுநரை
குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இவரின் பதவிக்காலம் 5
ஆண்டுகள். எனினும்
பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.
⧭ குடியரசுத் தலைவர்
விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருப்பார்.
⧭ குடியரசுத்
தலைவரின் விருப்பத்தை நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த இயலாது.
⧭ ஒன்றிய அரசின்
பிரதிநிதியாகவே ஆளுநர் செயல்படுகிறார்.
⧭ ஆளுநரின் 5
ஆண்டு பதவிக்காலம்
முடிவுற்ற பின்னரும், அவரைத் தொடர்ந்து வேறு ஆளுநர் நியமிக்கப்படும் வரை,
தொடர்ந்து பதவி
வகிக்க கேட்டுக்கொள்ளப்படுவார்.
⧭ ஆளுநரை ஒரு
மாநிலத்தைவிட்டு மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் குடியரசுத் தலைவருக்கு
அதிகாரம் உள்ளது. ஆளுநர் மாத ஊதியமாக ரூ.1,10,000 பெறுகிறார்.
⧭ ஆளுநரின் ஊதியம்
அந்தந்த மாநிலத்தின் மாநில ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வாக்கெடுப்பின்றியே
வழங்கப்பட அரசியலமைப்பு வழி செய்துள்ளது.
⧭ ஆளுநரின்
அதிகாரப்பூர்வமான இருப்பிடம் இலவசமாக தரப்படுவதுடன், சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இதர
படிகளும் அவருக்கு வழங்கப்படும்.
⧭ ஒருவர் ஆளுநராக
நியமிக்கப்பட வேண்டுமென்றால் அவர் இந்தியக் குடிமகனாகவும்,
35 வயது
நியம்பியவராகவும் இருக்க வேண்டுமென்று ஷரத்து 157 குறிப்பிடுகிறது.
⧭ பாராளுமன்றம்
அல்லது மாநில சட்டபேரவைகளில், ஆளுநர் உறுப்பினராக இருக்க இயலாது. அப்படி
ஏதேனும் ஒர் உறுப்பினர் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட
நாளிலிருந்து, அவரது சட்டபேரவை அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடம்
காலியாகிவிட்டதாக கருதப்படும்.
⧭ ஊதியம் பெறும் வேறு
எந்தப் பதவியையும் ஆளுநர் வகிக்க இயலாது.
⧭ அரசியலமைப்பு மாநில
ஆளுநருக்கென்று சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
⧭ அதன்படி ஒரு மாநில
ஆளுநர் தமது பதவிக்காலத்தில் பதவியின் காரணமாக மேற்கொண்ட எவ்வித செயல்பாடுகள்
குறித்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்.
⧭ மேலும் அவரது
பதவிக்காலத்தின்போது அவர் மீது எந்தவித குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள
இயலாது.
⧭ அது போலவே அவரது
பதவிக்காலத்தில் அவர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் விதிவிலக்கு
அளிக்கப்பட்டுள்ளார்.
⧭ உரிமையியல்
நடவடிக்கைகளை ஆளுநர் மீது மேற்கொள்வதாக இருப்பின் அது குறித்த விவரங்களை 2
மாதங்களுக்கு
முன்பாக ஆளுநருக்கு அறிவித்தல் வேண்டும்.
ஆளுநரின்
அதிகாரங்கள் - பணிகள்:
* ஆட்சித்துறை
அதிகாரங்கள் - Executive Powers
⧭ மாநிலத்தின்
நிர்வாக அதிகாரம் ஆளுநரின் அதிகாரம் ஆளுநரின் கையிலேயே உள்ளது. அந்த அதிகாரங்களை
அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அவரே நேரிடையாகவோ,
தமக்குக் கீழுள்ள
அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்த வேண்டும்.
⧭ மாநிலத்தின்
நிர்வாக அதிகாரம் என்பது அதன் சட்டமியற்றும் அதிகாரத்துடன் சேர்ந்தே காணப்படும்.
⧭ பொதுப்பட்டியலில்
உள்ள விசயங்களைப் பொறுத்தவரையில் அரசியல் சட்டத்தின்படி அல்லது வேறு ஏதேனும்
சட்டத்தின்படி ஒன்றியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டதே மாநில
நிர்வாகத்தின் அதிகாரம் எனப்படும்.
⧭ மாநிலத்தின்
அனைத்து நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயராலேயே மேற்கொள்ளப்படும்.
⧭ ஜார்க்கண்ட,
மத்திய பிரதேசம்
மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை
ஏற்படுத்துவதும் ஆளுநரின் கடமையாகும்.
⧭ மாநிலத்தின்
முதல்வரையும், அவரது ஆலோசனையின்படி பிற அமைச்சர்களையும், மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார்.
⧭ அமைச்சர்கள்
அனைவரும் ஆளுநர் விரும்பும் வரை பதவியில் நீடிப்பார்கள்.
⧭ ஆனால் அமைச்சரவை மாநில
சட்டப்பேரவைக்குக் கூட்டுப் பொறுப்புடையதாக உள்ளது.
⧭ அதாவது
சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றவரே முதல்வராக
நியமிக்கப்பட வேண்டும் என்றும், மாநில சட்டப்பேரவையின் நம்பிக்கையைப்
பெற்றிருக்கும் வரை மட்டுமே அமைச்சரவை பதவியில் நீடிக்க இயலும் என்றும் இதற்குப்
பொருள்படும்.
⧭ மாநிலத்தின் நிர்வாகப்
பணிகளை எளிதாக மேற்கொள்ளவும், அமைச்ர்களிடையே பொறுப்புக்களை ஒதுக்கீடு
செய்யவும், தேவையான விதிகளை ஆளுநர் உருவாக்கலாம்.
⧭ மாநில அட்வகேட்
ஜெனரல், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
சார்நிலை
நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆகி்யோரையும் ஆளுநரே நியமனம் செய்கிறார்.
⧭ மாநிலத்தில்
சட்டமன்ற மேலவை இருப்பின், அதன் உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கினரை, இல்க்கியம், கலை, அறிவியல், கூட்டுறவு இயக்கம்,
சமூக சேவை போன்ற
துறைகளின் சிறப்பறிவும், பழுத்த அனுபவமும் வாய்ந்தவர்களில் இருந்து ஆளுநர் நியமிக்க வேண்டும்.
⧭ ஆங்கிலோ-இந்திய
சமூகத்தினருக்கு சட்டப்பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றும்,
அதற்குப்
பிரதிநிதித்துவம் தேவையென்று ஆளுநர் கருதினால், அந்தச் சமூகத்தில் இருந்து ஒருவரை
பேரவைக்கு ஆளுநர் நியமனம் செய்யலாம் என ஷரத்து 333 கூறுகிறது.
ஆளுநரின்
சட்டத்துறை அதிகாரங்கள்:
⧭ மாநிலச்
சட்டப்பேரவையின் ஒரு ்ங்கமாகவே ஆளுநர் திகழ்கிறார். சட்டப்பேரவையின் இரு
அவைகளையும்(பேரவை,மேலவை என இரு அவைகள் உள்ள மாநிலங்களில்) கூடுமாறு ஆணையிடுவதும்,
கூட்டத் தொடரை
முடித்து வைப்பதும் ஆளுநரே ஆவார்.
⧭ அவர் நினைத்தால்
பேரவையைக் கலைத்து விட முடியும். மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே அவர்
உரையாற்றுவதுடன், சட்டப்பபேரவைக்கு செய்திகளையும் அனுப்ப ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
⧭ பொதுத் தேர்தல்
முடிந்தபின் நடைபெறும் முதல் கூடட்த்தில் ஆளுநர் உரையாற்றுகிறார்.
⧭ அதே போன்று
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரே
உரையாற்றுவார்.
⧭ தேவைப்படும்போது
இரு அவைகளையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ கூட்டி உரை நிகழ்த்தவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
⧭ சட்டப்பேரவையின்
இரு அவைகளிலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஆளுநரின் ஒப்புதலின்றி அது சட்டமாகாது என
ஷரத்து 200 கூறுகிறது.
⧭ அவையில் ஒரு
மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்ற
அமைச்சரவையின் ஆலோசனையுடன், அம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
⧭ அம்மசோதாவுக்கு
ஆளுநர் தமது ஒப்புதலை அளிக்கலாம்.
⧭ ஒப்புதல்
அளிக்காமல் நிறுத்தி வைக்கலாம்.
⧭ குடியரசுத்
தலைவரின் பரிசீலனைக்காக அதனை அனுப்பி வைக்கலாம்.
⧭ பண மசோதாவைத் தவிர
வேறு மசோதாவாக இருப்பின், ஆளுநர் தம்து குருத்தையும் கூறி, அந்த மசோதாவைப் பரிசீலனை செய்யுமாறு
அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.
⧭ மசோதாவைப் பற்றிச்
சில தகவல்கள், விவரங்கள் தேவையெனக் கேட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிற ஆலோசனையை
மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பலாம்.
⧭ ஆளுநர் தமது
கருத்தைக் கூறி ஒரு மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பினால்,
அவருடைய
கருத்தின்படி அந்த மசோதா பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டோ,
அல்லது
திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலோ மீண்டும் நிறைவேற்றப்பட்டால்,
ஆளுநர் அதற்கு
ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
⧭ சட்டப்பேரவையின்
சூட்டத்தொடர், அல்லது மேலைவை இருந்தால் இரு அவைகளின் கூட்டத்தொடர்,
நடைபெறாத காலத்தில்,
ஷரத்து 213-ன்படி ஆளுநர் அவசரச் சட்டங்களைப்
பிறப்பிக்கலாம்.
⧭ சட்டப்பேரவை இயற்றி,
ஆளுநர் ஒப்புதல்
அளித்த சட்டங்களைப் போலவே, அவசரச் சட்டங்களும் செயல் வீச்சுயுடையவை.
⧭ எனினும்,
சட்டப்பேரவையில்
இயற்றப்படும் சட்டங்களுக்கு உள்ள அதே கட்டுப்பாடுகள் அவசரச் சட்டங்களும் உள்ளன.
⧭ எனவே ஒரு மசோதாவை
அறிமுகப்படுத்துவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெற
வேண்டியிருப்பினும்
⧭ ஒரு மசோதாவின்
உள்ளடக்கத்தைப் பொறுத்து அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலினைக்காக ஆளுநர்
அனுப்ப வேண்டியிருப்பினும்
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல்
செல்லுபடியாகாமல் போய்விடக்கூடியதாக அம்மசோதா இருந்தாலும் இம்மூன்று இனங்களிலும்,
குடியரசுத்
தலைவரின் உத்தரவின்றி, ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க இயலாது. ஆளுநர் பிறப்பிக்கும்
அவசரச் சட்டங்கள் சட்டப்பேரவை முன் (மேலவை இருப்பின் இரு அவைகளின் முன் வைக்கப்பட
வேண்டும்)
⧭ சட்டப்பேரவை
மாண்டும் கூடியதும் 6 வாரங்களுக்குப் பின்னர் அவசரச் சட்டம் செயலிழந்து விடும்.
⧭ அதற்கு முன்னரே
அதனை நிராகரிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நிறைவேற்றினால் அப்போதே அவசரச்
சட்டம் செயலற்றுப் போய்விடும். அவசரச் சட்டத்தை எந்த நேரத்தில் மேண்டுமானாலும்
ஆளுநர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையத்திலிருந்து கடந்த 10.08.2015 அன்று திரட்டிய தகவல்