அன்னை தெரசா நினைவு திருமண நிதியுதவித் திட்டம்
என்ன செய்ய வேண்டும்?
பெண்களுக்கு அரசு திருமண நிதி உதவி திட்டங்களை செய்து வருகிறது. ஆதரவற்ற பெண்களுக்கு அரசு வழங்கும் அன்னை தெரசா நினைவு திருமண நிதிஉதவி திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து பயன் பெறுங்கள்.
விண்ணப்பம்
அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் என்ற விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
நிதி விபரம்
ஆதரவற்ற படிக்காதப் பெண் என்றால் ரூபாய் 25000க்கான காசோலையும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும். படித்தப் பெண் என்றால் ரூபாய் 50,000க்கான காசோலையும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பெற்றோரை இழந்து, திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். திருமணத்தன்று நிதியுதவி பெறும் பெண்ணுக்கு 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டுமானால் குறிக்கப்பட்ட திருமண தேதிக்கு 40 நாளுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். திருமணத் தேதியன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்போ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.
தகுதி
பட்டதாரிப் பெண்களுக்கான திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால் விண்ணப்பிக்கும் பெண் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிக்காத ஆதரவற்ற பெண்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.
இணைக்க வேண்டியவை
சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று. திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் வயதுச்சான்று. தாய் தந்தையின் இறப்புச்சான்று. விண்ணப்பிக்கும் பெண்ணின் வருமானச்சான்று அல்லது பாதுகாவலரின் வருமானச்சான்று.
குறிப்பு
நீங்கள் விண்ணப்பித்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இது தொடர்பான மேலும் அதிக தகவலுக்கு உங்கள் பகுதியில் இருக்கும் மாவட்ட சமூகநலத்துறையையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அணுகுங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------- சூரியா கோமதி.
நன்றி : விகடன் செய்திகள் – 02.11.2016