disalbe Right click

Showing posts with label ஆதார் அட்டை. Show all posts
Showing posts with label ஆதார் அட்டை. Show all posts

Monday, February 26, 2018

குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை :

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை
பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதார் கண்டிப்பாக வேண்டும் என்ற நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கென்று  தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பால் ஆதார் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அட்டையில் என்ன என்ன இருக்கும்?
இந்த அடையாள அட்டையில் குழந்தைகளின் கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்காது. குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் எண்கள் ஆகியவற்றை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன்மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, அதில் குழந்தையின் பெயர், குழந்தையின் பிறந்த நாள், பெற்றோர்களின் பெயர் மற்றும் முகவரி சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் ஆதார் அட்டை அவர்களுக்கு வழங்கப்படும்ப்ளூ வண்ணத்தில் இந்த பால் ஆதார் அட்டை இருக்கும்.
ஐந்து வயது முடிவடைந்த பிறகு....?
குழந்தைகளுக்கு 5 வயது முடிந்த பிறகு அதனுடைய பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும். பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம். அதே சமயம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.
இந்தக் குழந்தைகள் 5 வயதை நிறைவுசெய்த பின்அவர்களின் கை விரல் ரேகைகருவிழிப் படலம் பதிவு செய்து பெரியவர்களுக்கு வழங்கப்படுகின்ற அட்டையைப் போல், புதிய ஆதார் அட்டை அவர்களுக்குத் தரப்படும்  
பிறப்பு சான்றிதழ்களுடன் இணைப்பு
குழந்தைகளின் 5, 10 மற்றும் 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள அட்டையுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும். . தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு -சேவை மையங்களில் செயல்பட்டு வருகின்ற ஆதார் நிரந்தர மையங்கள் மூலமாக ஆதார் பதிவு செய்யப்படுகிறது.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.02.2018 

Wednesday, February 7, 2018

ஆதார் எண் பாதுகாப்பு

உங்கள் ஆதார் எண் பாதுகாப்பாக இருக்கிறதா! என்று சோதித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய ஆதார் எண்ணை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? என்பது இன்றைக்கு எல்லோர்க்கும் எழுகின்ற சந்தேகமாக ஆகிவிட்டது. ஏனென்றால் நமது வங்கி எண், எரிவாயு இணைப்பு எண் என்று நம்மைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் கட்டாயமாக்கி  ஆதாருடன்  மத்திய அரசு  இணைத்துவிட்டது.  அதனால், நமது ஆதார் எண்ணை வைத்து நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மற்றவர்கள் பெறுகிறார்களோ? என்ற ஒருவித சந்தேக மனப்பான்மையுடன் நாம் இருந்து வருகிறோம். இதனை தீர்க்க  UIDAI இணையதளத்தில்  https://resident.uidai.gov.in/notification-aadhaar என்று புதிதாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளதுஇந்த லிங்கிற்குச் சென்று நாம் நம்முடைய ஆதார் எண்ணைப் பதிவு செய்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து Generate One Time Password  க்ளிக் செய்ய வேண்டும்.
ஏற்கனவே, ஆதார் அட்டை வாங்கிய போது அதில் பதிவு செய்த உங்களின் செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password  வரும். மேலும், அப்போது  திரையில் உள்ள விண்ணப்பத்தில், உங்கள் ஆதார் எண் பற்றிய அனைத்துத் தகவல்களும் வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கான தகவல்கள் மட்டும் வேண்டுமா? என்பதை பதிவு செய்து அந்த One Time Password ஐ பதிவு செய்தால் நீங்கள் கேட்ட தகவல்கள் கிடைக்கும்.
அதாவது, உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் எங்கெல்லாம் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற அனைத்துத் தகவல்களும் ஒரு பட்டியலாகக் கிடைக்கும்.
உங்கள் ஆதார் எண்ணை வேறு யாரேனும் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் இதன் மூலம்  உங்களால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.  அப்படி பயன்படுத்தி இருந்தால், உடனடியாக 1945 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகாரும் அளிக்கலாம்.
***************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

Tuesday, January 16, 2018

பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக

வட்டார அளவில் ஆதார் மையம்
பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக வட்டார அளவில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது
எமிஸ்திட்டத்தின் கீழ் ’ஆன்லைனில்பள்ளி மாணவர்களின் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் முகாம் நடத்தி எடுத்தாலும் பல மாணவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்கவில்லை.
அதேபோல் ஒவ்வொரு வருடமும் புதிதாக பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் ஆதார் எடுக்க வேண்டியுள்ளது. தாலுகா அலுவலகத்தில் செயல்படுகின்ற பொது நிரந்தர ஆதார் மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதில் பெற்றோர்களுக்கு சிரமம் இருக்கிறது. 
இதனை உணர்ந்து நமது தமிழக அரசு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்  ஒவ்வொரு வட்டார அளவிலும் பள்ளிகளில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.01.2018 

Wednesday, January 10, 2018

ஆதார் - மாற்று எண்

ஆதார் அட்டையால் தனிநபருடைய ரகசியம் பறி போகும் பிரச்னைக்கு...
மாற்று அடையாள எண் வழங்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தனிநபருடைய சுதந்திரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாற்று அடையாள எண்களை, 'ஆதார்' இணையதளத்தில் இருந்து பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளும் முறையை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்று உருவாக்கப்படும் மாற்று அடையாள எண்களை, மொபைல் போன், 'சிம் கார்டு' பெறுவதற்கு அடையாளம் சரிபார்க்க பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நமது நாடு முழுவதும், 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன. இந்த அட்டையில், தனிநபருடைய கைரேகைகள், கருவிழி ரேகை மற்றும் முகவரி ஆகிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளால், தனிநபர் சுதந்திரம் மற்றும் அவர்களின் ரகசிய தகவல்கள் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர்கள், வழக்குகள் தொடர்ந்து உள்ளனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
ஆதார் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர், எட்வர்டு ஸ்நோடென், சமீபத்தில் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், தனிநபர் சுதந்திரம், ரகசிய தகவல்கள் கசியும் அபாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக, 'விர்ச்சுவல்'எனப்படும், 16 இலக்க எண்கள் உடைய, மாற்று அடையாள எண்ணை
Unique Identification Authority Of India
யு..டி..., எனப்படும்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதை,பயனாளிகள் ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து, 'டவுன்லோடு' செய்ய முடியும்
இந்த மாற்று அடையாள எண் ஒருவரிடம் இருந்தால், அவர் தனது ஆதார் அட்டையில் உள்ள, 12 எண்களை சொல்ல வேண்டியதில்லை.  இதனை பயனாளிகளே உருவாக்கிக் கொள்ளலாம். 
தேவையான தகவல்கள் மட்டுமே
மொபைல் போன் மற்றும் சேவை நிறுவனங்கள்  இந்த 16 இலக்க அடையாள எண் மூலம், விண்ணப்பதாரரின் பெயர், விலாசம் மற்றும் புகைப்படம் ஆகியவை உள்ளிட்ட அடையாள சரிபார்ப்புக்கு தேவையான தகவல்களை மட்டுமே பெற முடியும்.
எத்தனை முறை வேண்டுமானாலும்
இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளர், எத்தனை முறை வேண்டுமானாலும், தன்னுடைய மாற்று எண்ணை உருவாக்க முடியும். புதிய குறியீடு எண் உருவாக்கப்பட்ட உடன், பழைய குறியீடு எண், தானாகவே ரத்தாகி விடும் என்பது இத்திட்டத்தின் சிறப்புஇந்தத்திட்டம், 01.03.2018  முதல் அமலுக்கு வருகிறது
ஆனால், 01.06.2018ல்  இருந்துதான்  வங்கி, மொபைல் போன் சேவை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், மாற்று அடையாள எண்ணை ஏற்றுக் கொள்வது, கட்டாயம் ஆக்கப்படுகிறது.
KYC
Know Your Customer எனப்படும், வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும் நடைமுறைக்கு, மொபைல் போன் சேவை நிறுவனம் போன்றவை, ஒரு நபரின் எந்த தகவல்களைக் கேட்கிறதோ, அவை மட்டுமே தெரிவிக்கப்படும்.
இணையதளம் இணைப்பு
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.01.2018