அன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.in”
disalbe Right click
Showing posts with label இணையதளம். Show all posts
Showing posts with label இணையதளம். Show all posts
Saturday, January 13, 2018
Personnel
Labels:
இணையதளம்
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Wednesday, January 10, 2018
மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு....
இணையதளம் மூலமாக பிறப்பு & இறப்புச் சான்றிதழ்கள்
நமது நாட்டில் எல்லோருக்கும் அவசியமாக கருதப்படுவது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள். இதனை ஒவ்வொருவரும் பதிவு செய்து நகராட்சி அலுவலகத்தில் பெற வேண்டும். தற்போது தமிழக அரசு இதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிட்டது. இதனை வாங்க வேண்டும் என்றால் அலைந்துதான் வாங்க வேண்டும். பெயரில் அல்லது நாளில் பிழை இருந்தால் அதனை மாற்றுவதற்கும் அலைச்சல்தான். பணத்தையும் கொடுத்து, பிழைப்பையும் கெடுத்து அலையும் பொழுது எல்லோருக்கும் எரிச்சல்தான் வரும்.
மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
நமது தமிழக அரசு முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி ஆகிய மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை இணையதளம் மூலமாகவே பெறுவதற்கும், அதிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அதனை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் இதற்கு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாகவே பிறப்பு & இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு யுனிக் எண் வழங்கப்படுகிறது. தவறுகளையும் இலவசமாகவே திருத்திக் கொள்ளலாம். .
பிறப்புச் சான்றிதழ்
இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், பிறந்த நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்.,
இறப்புச் சான்றிதழ்
இந்தச் சான்றிதழ்களை இணையத்திலிருந்து எடுப்பதற்கு சான்றிதழில் பெயர் உள்ளவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரமும், அவரது பெயரும், இறந்த நாளும் மாதமும், வருடமும், பிறந்த இடம் வீடென்றால் வீட்டின் முகவரியும், மருத்துவமனை என்றால் அந்த மருத்துவமனையின் பெயரும், அவரது தாய், தந்தையின் பெயரும், நமக்குத் தெரிய வேண்டும்.,
எப்படி எடுக்க வேண்டும்?
பாக்ஸில் தேவையானதை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு தோன்றுகின்ற பாக்ஸில் பெயர் மற்றும் வருடம் மற்றும் மாதத்துடன் கூடிய நாளை நிரப்புங்கள். பிழையின்றி நிரப்பினால்தான் நீங்கள் குறிப்பிடுகின்றவரின் சான்றிதழை எடுக்கமுடியும். ஆகையால், பிழையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சென்னை மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு சான்றிதழ் பெற
பிறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள
இறப்பு சான்றிதழ் பெற
இறப்பு சான்றிதழில் உள்ள தவறை திருத்திக் கொள்ள
கோயம்புத்தூர் மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு சான்றிதழ் பெற & இறப்பு சான்றிதழ் பெற
மதுரை மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற
திருச்சி மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற
திருநெல்வேலி மாநகராட்சியில் வசிப்பவர்கள்
பிறப்பு & இறப்புச் சான்றிதழ் பெற
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018
Labels:
இணையதளம்
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Tuesday, January 2, 2018
பெண்களுக்கான அரசு இணையதளம்
பெண்களுக்காக அரசு தனியாக ஒரு இணையதளம் தொடங்கியுள்ளது. இதனை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இணையதள முகவரி http://nari.nic.in/ ஆகும்.
இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது?
இந்த இணையதளத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதில் முக்கியத் தகவல்கள் அடங்கிய, பெண்கள் நலம்பெறும் வகையிலான சுமார் 350 திட்டங்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் அவர்களது வயது அடிப்படையில் 4 பிரிவினராகப்
பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வயது, மாநிலம் மற்றும் எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறது
என்ற தேர்வுகளின்
அடிப்படையில் உதவிகள் இந்த இணையதளம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.
அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் வழங்கும் திட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில், இந்த இணையதளத்தில் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறை தீர்க்கும் பகுதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக பாதுகாப்பு
பெண்கள் வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு
எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பெண்கள் உதவி எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் பெண்களுக்கு மிகவும் உபயோகமான இணையதளம் இதுவாகும்.
************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 03.01.2018
Labels:
இணையதளம்
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Wednesday, November 29, 2017
குழந்தைகளுக்கான இணையதள பக்கங்கள்!
இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே..
Kids Health
மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.
மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெளிவுற தெரிந்துகொள்ளலாம்.
National Geographic Kids
அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society, குழந்தைகளுக்காக நடத்தும் வலைதளம் இது. இதில் தாவரங்கள், உயிரினங்கள் பற்றிய செய்திகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
வாண்டுகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான இந்த தளத்தின் புகைப்படங்களும், வீடியோக்களின் இதன் பெரிய பிளஸ். வலைதள முகவரி: http://kids.nationalgeographic.com/kids/.
Kidsmart
இது லண்டனிலிருந்து குழந்தைகளுக்காகச் செயல்படும் இணையதளம். இணையம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது இந்த இணையதளம்.
சாட்டிங், சமூக வலைதள பக்கங்கள், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாகத் தெரிந்துகொள்ளலாம். வலைதள முகவரி: http://www.kidsmart .org.uk/.
உங்கள் செல்லங்களின் இணையப் பொழுதுகள் இனி பயனுள்ளதாகக் கழியட்டும்!
- சா.வடிவரசு
நன்றி “ விகடன் செய்திகள் 28.11.2014
Labels:
இணையதளம்
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Monday, November 27, 2017
கூகுள் குரோம் பிரவுசரில் வசதிகளை பெறும் வழிகள்
இணையத்தில் தேடல் பிரிவில், தனக்கு நிகர் என எதுவும் இல்லாத வகையில், கூகுள் நிறுவனத்தின் தேடல் இஞ்சின் இயங்கி வருகிறது. தேடல் என்றாலே, அது கம்ப்யூட்டருக்குள் என்றாலும், இணையத்தில் என்றாலும், கூகுள் இஞ்சின் தான் முதல் இடம் பெறுகிறது.
அதே போல, கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர், இணையப் பயனாளர்களால் அதிக அளவில் விரும்பப்படும் பிரவுசராக இயங்கி வருகிறது. நாம் விரும்பும் வகையில் அதனை வடிவமைத்துச் செயல்படுத்த, கூகுள் பல வழிகளைத் தந்துள்ளது.
தெளிவான இடைமுக அமைப்புகள் இதன் இன்னொரு சிறப்பாகும். அத்துடன் நம் இணைய உலாவிற்கான பாதுகாப்பு, அவ்வப்போது இணைக்கப்படும் புதிய வசதிகள் என நம் இணைய உலாவினை அன்றாடம் ஒரு புதிய அனுபவமாகவே கூகுள் தந்து வருகிறது.
கூகுள் குரோம் பிரவுசரில் இந்த வசதிகளைப் பெறும் வழிகளை இந்த கட்டுரை விளக்குகிறது.
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.
2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.
3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும். இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.
4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.
6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.
7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.
8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.
9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.
10.எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.
11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.11.2016
Labels:
இணையதளம்
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்.
Subscribe to:
Posts (Atom)