disalbe Right click

Showing posts with label உணவே மருந்து. Show all posts
Showing posts with label உணவே மருந்து. Show all posts

Monday, November 27, 2017

இயற்கையான முறையில் பித்தப்பை கற்களை நீக்க முடியுமா?

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை.
ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.
ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக நம்தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
Image result for பித்தப்பை
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும். மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.
நன்றி :http://tamil.webdunia.com/ 

Saturday, November 18, 2017

வாழைப்பூவின் மகத்துவம்

Image may contain: text
இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனி அழகும், மருத்துவக் குணமும் கொண்டுள்ளன. பூக்களில் அதிகளவில் மருத்துவ குணங்களை வாழைப்பூ பெற்றுள்ளது. வாழைப்பூவினை தினசரி உணவில் ஏதோ ஒரு விதத்தில் சேர்த்து வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் இருக்கும். இதில் என்னென்ன மருத்துவ பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
முன்னோர்கள் வாழையை பெண தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை மரத்துக்கு முக்கிய இடமுண்டு. குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். இது ஒன்றே நம்முடைய வாழ்வியலில் கலந்ததற்கு மிகப்பெரிய சான்று
வாழையில் உள்ள ஒவ்வொரு அங்கங்களும் மருத்துவ குணங்களும், பயன்பாடும் மிகுந்துள்ளன
சர்க்கரை நோய்க்கு
வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
மூல நோய்க்கு
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். வாரமிருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் வெகுவிரைவில் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து, சிறிது நெய் விட்டு வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்
ஒரு சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக்கழிச்சல் ஏற்படும். இதற்கு வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அந்நேரத்தில் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து, சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்
உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி, கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் செய்து அருந்தி வந்தால் இருமல் நீங்கும்
குழந்தைப்பேறு
வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டு வந்தால் தாது விருத்தியடையும். சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்கு ஆளாகுவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர். இதுபோன்ற எண்ணற்ற நன்மைகளை மனித குலத்துக்கு வாழை மரத்தின் ஒவ்வொரு அங்கங்களும் செய்து வருகின்றன
நன்றி : தினமலர் நாளிதழ் – 13.11.2016