disalbe Right click

Showing posts with label உயர்நீதிமன்ற தீர்ப்பு. Show all posts
Showing posts with label உயர்நீதிமன்ற தீர்ப்பு. Show all posts

Friday, June 21, 2019

நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு - உத்தரவுகள்

நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு
நீர்நிலை, பராமரிப்பு, பாதுகாப்பு, தொடர்பான சில உத்தரவுகளை பல்வேறு கால கட்டங் களில் உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.
நம் மாநிலத்தில், அனைத்து நீர் ஆதாரங்கள் இருந்தும், முறையாக பயன்படுத்தாததால், வளமான நிலங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளை கொட்டியும், வீணாக்கப் பட்டுவிட்டன. கடுமையான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால்,தென் ஆப்ரிக்காவில், கேப் டவுன் நகரில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம், நமக்கும் ஏற்படும் நாள், வெகு துாரத்தில் இல்லை!
நீதிபதிகள், எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் தலைமையிலான, சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச். ஏப்., 2019 -ல் பிறப்பித்த உத்தரவு
⧭ நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்காக, தலைமை செயலர் தலைமையில், பொதுப்பணித் துறையில், சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
⧭ ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர், மாதம் ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும்.
⧭ ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு, போலீசார் ஒத்துழைக்காத பட்சத்தில், ராணுவத்தை அழைக்கலாம்.
 நீதிபதி, கிருஷ்ணகுமார், சென்னை உயர் நீதிமன்றம். ஏப்., 2019-ல் பிறப்பித்த உத்தரவு
⧭ கடலில் வீணாக கலக்கும் மழைநீரை, குளம், குட்டை களுக்கு திருப்பி விட, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
⧭ இதற்கு, ஆலோசனை தெரிவிக்க, தமிழக அரசு, சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
நீதிபதிகள், மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், சென்னை உயர் நீதிமன்றம். 18 ஜூன், 2019ல் பிறப்பித்த உத்தரவு
⧭ மாநிலம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது. இந்த சூழ்நிலை கருதி, எத்தனை நீர்த்தேக்கங்கள் துார் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, பணிகளின் நிலை என்ன... சாகப் போகும்போது என்னவோ சொல்வரே, அதுபோல் கடைசி நேரத்தில், தண்ணீர் சேமிப்பு குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்வதால் என்ன பயன்?
⧭ நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகள், ஆக்கிர மிப்புகளால் சுருங்கிவிட்டதாக, கவனத்திற்கு வந்து உள்ளது
⧭ ஏரிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளும், தண்ணீர் தேக்கம் குறைவுக்கு முக்கிய காரணம். ஆக்கிரமிப்புகள் குறித்தும், பொதுப்பணித்துறை செயலர், அறிக்கை அளிக்க வேண்டும்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்தும், கூடுதலாக நிலையம் அமைக்க, ஆய்வு ⧭ மேற்கொள்ளப் பட்டதா எனவும், அறிக்கை அளிக்க வேண்டும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 19.06.2019

Tuesday, November 13, 2018

குற்றவியல் நடுவரின் அதிகாரம் என்ன?

குற்றவியல் நடுவரின் அதிகாரம் என்ன?
ஷேக் தாவூத் என்பவர் தனக்கு சொந்தமான ரூ. 25000/- மதிப்புள்ள ஈட்டி மரக்கட்டில் மற்றும் நாற்காலிகள் உட்பட இதரப் பொருட்களை வீட்டில் பூட்டி வைத்திருக்கும் நிலையில், தனது மூத்த சகோதரி வீட்டை உடைத்து அந்தப் பொருட்களை திருடிச்சென்று விட்டதாகவும், இது குறித்து அவரிடம் கேட்டபோது தன்னை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் ஷேக் தாவூத்தின் புகாரில் உண்மையில்லை என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
புலன்விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை 
அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த குற்றவியல் நடுவர், வழக்கை CBCID விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் CBCID போலீசார் புலன் விசாரணை ஏதும் மேற்கொள்ளாததால் ஷேக் தாவூத் மதுரை உயர் நீதிமன்றத்தில், குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவுபடி தனது வழக்கை CBCID போலீசார் புலன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
 குற்றவியல் நடுவர்  உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
இதற்கிடையில் CBCID போலீசாரும், குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் என்ன கூறியது?
இரண்டு வழக்கையும் நீதிபதி திரு. C. T. செல்வம் விசாரித்தார்.
உச்சநீதிமன்றம் " சந்திரபாபு () மோசஸ் Vs மாநில அரசு (CRL. A. No - 866/2015) " என்ற வழக்கில், குற்றவியல் நடுவர் ஒரு குறிப்பிட்ட புலன் விசாரணை துறையை (Specific Agency), அந்த வழக்கில் "மேற்கொண்டு புலன் விசாரணையை செய்யும்படி" உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
ஒரு குற்ற வழக்கில்" மேற்கொண்டு புலன் விசாரணை "(Further Investigation) செய்யும்படி உத்தரவிடலாமே தவிர, அந்த வழக்கை வேறொரு புலன் விசாரணை அமைப்பு "மேற்கொண்டு புலன் விசாரணை" செய்யும்படி ஓர் உத்தரவினை பிறப்பிக்கும் அதிகாரம் குற்றவியல் நடுவருக்கு இல்லை. அந்த அதிகாரம் உயர்ந்த அதிகாரங்கள் கொண்ட நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது.
குற்றவியல் நடுவர்  உத்தரவு ரத்து
எனவே ஷேக் தாவூத் வழக்கை CBCID போலீசார் விசாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஷேக் தாவூத் Vs ஆய்வாளர்,CBCID திருச்சி
2016-1-TLNJ-CRL-157

நன்றி : எனது நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan 

Friday, February 23, 2018

கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம்

தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.முத்தழகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2011 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்காக போளூர் தாலுகாவைச் சேர்ந்த கேளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கோரி நான் விண்ணப்பித்தேன். வங்கி நிர்வாகம்  எனக்கு  கல்விக்கடன் வழங்கவில்லை. ஆகவே கனம் நீதிபதி அவர்கள் எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்
தனி நீதிபதி அளித்த தீர்ப்பு
இதனை விசாரித்த தனிநீதிபதி அவர்கள், மாணவியின் கோரிக்கையை பரிசீலித்து, அவருக்குக் கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்
மேல்முறையீடு செய்த வங்கி
இந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை (23.02.2018) விசாரணைக்கு வந்தது
வங்கியின் வாதம்
ஷை வங்கியின் சார்பாக ஆஜரான  வழக்கறிஞர், கடன் கோரிய மானவியின் படிப்பு கடந்த 2015ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதால், வழக்கு காலாவதி ஆகிவிட்டது. ஆகவே இந்த வழக்கில் தனி நீதிபதி அவர்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
முடிவில் நீதிபதிகள், எந்தவித நிபந்தனையும் இன்றி, உத்தரவாதமும் இன்றி கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் வாரிக் கொடுக்கின்ற வங்கிகள், ஏழை மாணவர்கள் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தால் அவர்களை அலைகழித்து வருகின்றனர். அது போல  ஏழைகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் மறுக்கப்படுவதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியான போக்கையும், ஏழைகளுக்கு வேறு மாதிரியான போக்கையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பது கண்டனத்துக்குறியது. வழக்கைத் தொடர்ந்த மாணவி ஆர்.முத்தழகி-க்கு படிப்பை முடிக்கும் வரை கடன் வழங்காமல் இழுத்தடித்து இந்த வழக்கை வங்கி செல்லாததாக ஆக்கிவிட்டது
ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 48 ஆயிரம் கோடி வரை வாங்கிய கடனை முறையாக வங்கியில் திருப்பிச் செலுத்தாத நிலையில், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என இதுவரை எந்த புகாரும் நீதிமன்றத்திற்கு வந்தது இல்லை
இதுபோல உரிய நேரத்தில் கல்விக்கடன் மாணவ, மாணவியர்களுக்கு மறுக்கப்படுவதால், நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய மிகச்சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கிடைக்காமல் போய் விடுகின்றனர். இதனால் அவர்களுடைய சேவை நாட்டுக்கு கிடைக்காமல் போகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
 வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ஆகவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது
இந்த தொகையை மனுதாரருக்கு இரண்டு வாரத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 24.02.2018.