disalbe Right click

Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

Thursday, January 4, 2018

அழிக்கப்பட்ட பைல்கள்

அய்யய்யோ என்னோட மெமரி கார்டுல வெச்சிருந்த ஃபோட்டோக்கள் எல்லாம் போயிருச்சே’, ‘என்ன ஆச்சுன்னு தெரியல, திடீர்னு கம்ப்யூட்டர்ல இருந்த ஃபைல்ஸ் எல்லாம் டெலிட் ஆயிடுச்சி’ - இப்படி அடிக்கடி பதற வேண்டியதில்லை. அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க உங்களுக்கு ஓர்  எளிமையான வழி!
உங்களடைய மெமரி கார்டு, ஹார்டு டிஸ்க் மற்றும் ஐபேடு போன்ற சேமிப்பகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏதோ தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால், அல்லது ஏதோ ஒரு காரணத்தினால்   தானாகவே   அழிந்துவிட்டால்  அதனை ‘Recuva’ எனும் ஒரு  மென்பொருள் மூலமாக மிக சுலபமாக நீங்கள் மீட்க முடியும்!
இந்த மென்பொருள் உங்கள் சேமிப்புக் கருவிகளிலுள்ள அழிந்த ஃபைல்களை, அது எத்தகைய கோப்பாக இருந்தாலும் சரி... அதாவது ஆவணங்கள், கோப்புறைகள், படங்கள், காணொளிகள், பாடல்கள் மற்றும் புகைப்படங்கள்  போன்ற எதுவாக இருந்தாலும் சுலபமாக உங்களுக்கு மீட்டுத் தருகிறது.
எப்படி  மீட்பது தெரியுமா?
‘Recuva’ என்ற மென்பொருளை முதலில் உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்யவேண்டும். பின் அதன் மூலமாக ஸ்கேன் செய்து தேடி அழிந்த ஃபைல்களை மீட்டெடுத்துவிடலாம். இவற்றுள், வைரஸால் அழிந்துபோன ஃபைல்களும் அடங்கும். இதனை இணைய உதவியோடு நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்யலாம்.
'http://www.filehippo.com/ என்ற லிங்க்கை பயன்படுத்துங்கள். அல்லது கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 04.01.2018 

Wednesday, August 23, 2017

கம்ப்யூட்டர் கீ போர்டு ஷார்ட்கட்ஸ்



 
கம்ப்யூட்டர் கீ போர்டு ஷார்ட்கட்ஸ்
உங்கள் கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 காம்பினேஷன் ஷார்ட்கட்ஸ்.
இன்று உலக அளவில் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, கணினி மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டது எனக் கூறப்படுகிறது, மேலும் கல்வி, மருத்துவம், அலுவலகப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் அதிகம் பயன்படுகிறது இந்த கணினி. 
அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின் விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது 
கணினியில் மவுசைதான் நாம் அதிகம் உபயோகம் செய்கின்றோம், ஆனால் மிக எளிமையாக ஷார்ட் கட் பயன்படுத்தினால் கணினியில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யதுவிடலாம், மேலும் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலார்கள் அனைவரும் இந்த கீபோர்டு ஷார்ட் கட் பயன்பாட்டை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு பல வழிமுறைகள் உள்ளன, பின் வரும் ஸ்லைடர்களில் அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம் 
வழமுறை- 1:
வழிமுறை-1: Windows: 
விண்டோஸ் என்ற பொத்தானை அழுத்தினால் அனைத்து மெனுவும் திறக்கப்படும், தேவையான விருப்பத்தை தேர்வு செய்ய முடியும். 
Win + A: விண்டோஸ் 10-இல் கணியின் மையத்தை திறக்கிறது. 
Win + B: அறிவிப்புப் பகுதியின் முதல் ஐகானைத் தேர்வுசெய்கிறது அம்புக்குறி விசையைப் பயன்படுத்தி சின்னங்களை மாற்றலாம். 
வழிமுறை-2: Win + Ctrl + B:
அறிவிப்புப் பகுதியில் புதிய செய்தியை கொண்டுவந்து கொடுக்கும். 
Win + C: இந்தப் பயன்பாடு விண்டோஸ் 10-இல் உள்ளது, ஆதரிக்கப்படும் மொழியைப் பயன்படுத்த முடியும். 
Win + D: உடனடியாக டெஸ்க்டாப்பைக் காட்டுகிறது. 
வழிமுறை-3:
வழிமுறை-3: Win + E: 
இந்தப் பயன்பாடு விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் திறக்கிறது. 
Win + F: கோப்புகள் மற்றும் கோப்புறைகள் கண்டுபிடிக்க உதவுகிறது. 
Win + Ctrl + F : கணினியைப் பற்றி தெரிந்துகொள்ள இவை உதவுகிறது. 
வழிமுறை-4: Win + G: 
விண்டோஸ் 7, விஸ்டா, விண்டோஸ் 10 போன்றவற்றில் விளையாட்டு பட்டியலைக் கொடுக்கிறது. 
Win + K:ஒரு புதிய தொடக்க மெனுவை திறக்கிறது, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1-இல் பயன்படுகிறது. 
Win + L: விண்டோஸ் லாக் செய்ய இந்த பயன்பாடு உள்ளது. 
வழிமுறை-5:
வழிமுறை-5: Win + M: 
உங்கள் திரையை மினிமைஸ் செய்ய உதவுகிறது. 
Win + Shift + M: நீங்கள் மினிமைஸ் செய்த பகுதியை ரீஸ்டோர் செய்ய உதவுகிறது. 
Win + O : இந்தப் பயன்பாடு கீரோஸ்கோப் செயல்பாட்டை முடக்குகிறது. 
வழிமுறை-6:
வழிமுறை-6: Win + P : 
வெளிப்புற மானிட்டர் ஃ ப்ரொஜெக்டருக்கு இயக்க உதவியாக உள்ளது. 
Win + Q: மெனுவில் பயன்பாடுகளுக்கான தேடல் எனக் கூறப்படுகிறது. 
Win + R : பொதுவாக ரன் டயலாக் பாக்ஸ் திறக்க உதவுகிறது. 
வழிமுறை-7: Win + T:
தேவையான டாஸ்க்பார் ஒபன் செய்ய உதவுகிறது. 
Win + U:  யுடிலிட்டி மேனேஜர் பகுதியை திறக்க உதவுகிறது. 
Win + W:  விண்டோஸ் இன்க் பகுதியை பயன்படுத்த முடியும். 
Win + X: விண்டோஸ் மொபைல் அப்ளிகேஷன் சென்டர் திறக்க உதவுகிறது. Win + Y: யாஹூ மெஸ்சென்ஜ்ர் பகுதிக்கு செல்ல முடியும். 
மேக் ஒஎஸ் கீபோர்டு வழமுறை-1:
மேக் ஒஎஸ் கீபோர்டு 
வழிமுறை-1: Command + Up Arrow: 
விரைவாக வலைதளத்திற்க்கு செல்ல முடியும். 
Command + Down Arrow: வலைதளம் பக்கத்தில் இவற்றைப் பயன்படுத்த முடியும். 
Command + Semicolon: தவறாக எழுதப்பட்ட சொற்களை இந்த பயன்பாடு காட்டும். 
வழிமுறை-2: Command + 1 (2, 3): வரிசையாக உங்களது டேப் திறக்க இவைப் பயன்படும். 
Option + Delete : இந்தப் பயன்பாடு அனைத்து ஆவனங்களையும் டெலிட் செய்ய பயன்படும். 
Command + H: மறைந்துள்ள அனைத்து ஆப் பயன்படுகளை திறக்கப் பயன்படும். 
வழிமுறை-3: Command + Shift + T : இந்தப் பயன்பாடு யுஆர்எல் நினைவில் கொள்ள பயன்படும். 
Command + F3 : தேவையில்லாத ஆப் நீக்க இந்த பயன்பாடு உதவியாக உள்ளது. 
Option + Shift + Volume Up/Volume down: ஒலி வெளியீடு நிலைகளை அறிந்துகொள்ள முடியும்.
Written By: Prakash
நன்றி : கிஸ்பாட் - தமிழ் - 23.08.2017

Tuesday, July 4, 2017

டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தையில், ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு தொழில்நுட்பச் சாதனம் டேப்லெட். இது மக்களால் பெரிதும் விரும்பப்படுவதற்குக் காரணம், எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில், லேப்டாப் அளவுக்கு விலை அதிகமாகவும் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள், தாராளமாக டேப்லெட்டைத் தேர்வு செய்யலாம்.
டேப்லெட் வாங்குவதற்கு முன்...
தேவைகளை அறிந்து அதற்கேற்ப டேப்லெட்டைத் தேர்ந்தெடுங்கள். டேப்லெட்கள் பெரும்பாலும் வாசிப்பதற்கானவை, விளையாடுவதற்கானவை, அலுவலக வேலைகளுக்கானவை, குழந்தைகளுக்கானவை என ஒரு குறிப்பிட்ட தேவையை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வாசிப்புத் தேவைக்காகத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் திரையின் தரம் சற்று மேம்பட்டு இருக்கும். ஆனால், அவை விளையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் டேப்லெட்களின் ரேம் மற்றும் பிராசஸரைக் கொண்டிருக்காது. குழந்தைகளுக்கு எனத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் பயன்பாடு, அவர்களுடைய கற்றல்திறனை மேம்படுத்தும் வகையில் மட்டுமே இருக்கும். அவற்றில் மற்ற வேலைகளைத் திறம்படச் செய்யமுடியாது. எனவே, உங்களின் தேவையைப் பொறுத்து டேப்லெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திரை : டேப்லெட் வாங்க நினைப்பவர்கள் முதலில் அதன் திரையின் (ஸ்க்ரீன் சைஸ்) அளவையும், தரத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். 7 இன்ச் முதல் 10 இன்ச் வரை திரையின் அளவு கொண்ட டேப்லெட்கள் சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப திரையின் அளவை முடிவு செய்யலாம். டேப்லெட் வாங்கும்போது திரையின் PPI (Pixels per Inch) அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்த அளவு அதிகமாக இருந்தால், காட்சிகள் தெளிவாக இருக்கும். PPI-ன் அளவு அதிகமாக இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், குறைந்தபட்சம் 250 பிக்ஸலாவது இருக்க வேண்டும்.
பேட்டரி : டேப்லெட் இயங்கத் தேவையான சக்தியை அளிப்பது பேட்டரிதான். அதுவும் குறிப்பாக டேப்லெட்டில் திரையின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், அதிக பேட்டரித் திறன் இருக்கும் டேப்லெட்டை வாங்குவது நல்லது.
சிம் கார்டு வசதி : டேப்லெட்களைப் பொதுவாக சிம் கார்டு பயன்படுத்தக்கூடியவை, சிம் வசதி இல்லாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டேப்லெட்கள், சிம் கார்டு பயன்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிம் இல்லாத டேப்லெட்களின் விலையைவிட இவற்றின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். சிம் வசதி இல்லாத டேப்லெட்கள் பொதுவாகக் குறைந்த விலைக்கும், அதே சமயத்தில் அதிக வசதிகளுடனும் கிடைக்கும்.
இயங்குதளம் : டேப்லெட்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐ.ஓ.எஸ் என அனைத்து வகையான இயங்குதளங்களிலும் கிடைக்கின்றன. ஆனால், ஆண்ட்ராய்டு டேப்லெட்களே சந்தையில் அதிகமாகக் கிடைக்கின்றன. சாதாரண உபயோகத்திற்கு ஆண்ட்ராய்டு டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் விலையும் குறைவு. மற்றபடி, அலுவலக உபயோகத்திற்கு என்றால் விண்டோஸ் அல்லது ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் இயங்கும் டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
பிராசஸர், ரேம் மற்றும் மெமரி : டேப்லெட்டைத் தேர்வு செய்யும்போது அதன் ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி ஆகியவை அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒரு சில டேப்லெட்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி இருப்பதில்லை. குறைந்தபட்சமாக 2 ஜி.பி ரேம் இருக்குமாறு வாங்கினால் சிறப்பு. கேமிங் பயன்பாட்டுக்காக எனில் கிராபிக்ஸ் கார்டுகள், பிராசஸர் பொருத்தப்பட்ட டேப்லெட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
எடை குறைவான டேப்லெட் வாங்கினால், எங்கும் எளிதாக எடுத்துச்செல்ல முடியும். டேப்லெட்டில் உள்ள கேமராவுக்குப் பொதுவாக அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதால், அதில் குறைவான கவனம் செலுத்தினால் போதும்.
மடிக்கணினியாகவும், அதில் இருந்து தனியே பிரித்தெடுத்து டேப்லெட்டாகவும் பயன்படுத்தும் வகையில் சில தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. நீங்கள் வாங்கும் டேப்லெட்டில் பென் டிரைவ் பயன்படுத்த உதவும் OTG வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். HDMI போர்டுகள் கொண்ட டேப்லெட்கள், மீடியா அவுட்புட் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
படங்கள் வரைய, எழுத எனில், ஸ்டைலஸ் எனப்படும் பேனா போன்ற உபகரணம் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள டேப்லெட்களை வாங்கலாம்.
மு.ராஜேஷ்

நன்றி : நாணயம் விகடன் - 09.06.2017

Tuesday, May 16, 2017

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்!

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்!

பாதுகாப்பு வழிமுறைகள் இவைதான்!
உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியுமா?! தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது.
சமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' ரான்சம்வேர் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கணினிகளும் அடக்கம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கணினிகளில் தான் இது மிக அதிகமாகப் பரவி வருகிறது. இந்த ரான்சம்வேர் கணினியில் நுழைந்த சில நொடிகளில், கணினியில் உள்ள தகவல்களை என்க்ரிப்ட் செய்துவிடும். அதன்பின் மீண்டும் கணினியைப் பயன்படுத்தவும், அதில் உள்ள தகவல்களை அக்சஸ் செய்யவும் சுமார் 300 அமெரிக்க டாலர்களை பிட் காயினாக செலுத்தும்படி ஒரு செய்தி திரையில் தோன்றும். தகவல்களை மீண்டும் பெறுவதற்காகப் பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
ரான்சம்வேர் என்றால் என்ன?
கணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் மால்வேர் என அழைக்கப்படும். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ் (Worms), ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், பாட்ஸ் (Bots) எனப் பல வகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். ஆனால் ரான்சம்வேர் கொஞ்சம் அபாயகரமானது.
இ-மெயில் அல்லது இணையத்தின் ஏதாவது ஒரு வழியில் கணினி ஒன்றில் நுழைந்து, அதன் ஒட்டுமொத்தத் தகவல்களையும் லாக் செய்துவிடும் இந்த ரான்சம்வேர். தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அதனை பயனாளர்களால் அக்சஸ் முடியாது. மீண்டும் கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி ரான்சம்வேர் எச்சரிக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்தாவிட்டால், டேட்டாவை அழித்துவிடுவதாக ஹேக்கர்கள் மிரட்டுவார்கள். சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, செலுத்த வேண்டிய தொகையானது இரட்டிப்பாகும்.
பிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி மூலம் செலுத்தப்படுவதால், பணம் யாருக்குச் சென்று சேருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இதன் காரணமாகவே, ஹேக்கர்கள் பொதுவாக ரான்சம்வேர் மூலம் தாக்குதல் ஏற்படுத்தும்போது, பிட் காயின் மூலமாகவே பணத்தைப் பெறுகிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், உங்களுடைய கணினியில் நுழைந்து, உங்களுடைய தகவல்களை லாக் செய்து, அதை மீண்டும் உங்களிடமே தருவதற்கு பணம் கறப்பது தான் ரான்சம்வேர்.
பாதுகாப்பு வழிமுறைகள் :
இ-மெயில் மூலமாக தான் ரான்சம்வேர் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிலைத் திறக்காமல் இருந்தாலே பாதிப் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். முன்பின் தெரியாத முகவரியிலிருந்து மெயில் வந்தால், அதிலிருக்கும் அட்டாச்மென்ட்டை திறப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு முறை இணைப்பைத் திறந்ததுமே, ரான்சம்வேர் தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடும். சில நேரங்களில், வங்கியின் பெயரில் கூட, ரான்சம்வேர் பரப்பும் மெயில்களை அனுப்புவதை ஹேக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தரமான ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளைக் கணினியில் நிறுவுவதோடு, அதை அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப பாதுகாப்பு தரும்படி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளில் மாறுதல்களைக் கொண்டுவருவார்கள். எனவே, ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும். இதே போல கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்வது நல்லது. 'வான்னா க்ரை' போன்ற ரான்சம்வேர் தாக்குதல் நடக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதமே அப்டேட் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ரான்சம்வேர் கணினியைத் தாக்கி, தகவல்களை லாக் செய்தால் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அனுப்ப வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், பணம் செலுத்தினாலும் கூட தகவல்கள் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. கணினியிலுள்ள டேட்டாவை அவ்வப்போது பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மெயில்களில் வரும் அட்டாச்மென்ட்டை டவுன்லோடு செய்து திறப்பதற்கு முன்பும் ஸ்கேன் செய்வது அவசியம்.
உங்கள் கணினியானது ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிப்பது நல்லது. ஏனெனில், = கணினியிலுள்ள தகவல்கள் இணையம் மூலமாக மற்றொரு கணினிக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், உங்கள் கணினியிலிருந்து மற்ற கணினிக்கும் ரான்சம்வேர் பரவுவதையும் தடுக்க முடியும்.
முன்னணி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் நிறுவனமான காஸ்பர்ஸ்கை, ஐரோப்பிய காவல்துறையின் சைபர்கிரைம் தடுப்புப் பிரிவு, இன்டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து நோமோர் ரேன்சம் (https://www.nomoreransom.org/) என்ற இணையதளம் ஒன்றை நிறுவியிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட எண்ணற்ற ரேன்சம்வேர்களில் இருந்து, தகவல்களை மீண்டும் அன்-லாக் செய்யும் அப்ளிகேஷன்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும், ரான்சம்வேர்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.
இந்தியாவிலுள்ள கணினிகளில், 'வான்னா க்ரை' ரான்சம்வேர் விரைந்து பரவிவருவதால் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கருப்பு

நன்றி : விகடன் செய்திகள் - 15.05.2017

Monday, April 10, 2017

லேப்டாப் புதுசா வாங்கும்போது.....


லேப்டாப் புதுசா வாங்கும்போது.....

புதுசா லேப்டாப் வாங்கப் போறீங்களா..!
இதைப் படிக்காம வாங்காதீங்க!
இன்றைய டிஜிட்டல் உலகில் அலுவலகம் செல்பவர்கள் முதல் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை னைவருக்கும் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாக லேப்டாப் மாறிவிட்டது. வேலை விஷயமாக இருந்தாலும் சரி பொழுதுபோக்குக்காக இருந்தாலும் சரி. அனைவருக்கும் மடிக்கணினிகள் ஏதேனும் ஒரு வகையில் தேவைப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றன.

லேப்டாப் வாங்கிய பின்பு நமது தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வருத்தப்படுவதை விட வாங்குவதற்கு முன்பே திட்டமிட்டால் சரியான விலையில் நிறைவான வசதிகளுடன் மடிக்கணினிகளை வாங்கலாம்..
லேப்டாப் வாங்க நினைப்பவர்கள் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சில ஆலோசனைகள்..
1.திரை அளவு
மடிக்கணினிகள் வாங்க நினைப்பவர்கள் முதலில் முடிவு செய்ய வேண்டியது திரையின் அளவுதான். அடிக்கடி பயணம் செய்பவர்கள் எடுத்துச்செல்ல எளிதாக 12-14 இன்ச் அளவை தேர்ந்தெடுக்கலாம்.வீடியோ எடிட்டிங்,போட்டோஷாப் போன்ற வேலை தொடர்பாக வாங்க நினைப்பவர்கள் 15 இன்ச்க்கு மேல் சற்று பெரிய திரையை தேர்ந்தெடுக்கலாம்.
2.மடிக்கணினியின் வகை
மடிக்கணினியில் இரு வகைகள் இருக்கின்றன. பழைய வடிவமைப்பில் உள்ளது தவிர திரையை மட்டும் தனியே எடுத்து டேப்லெட் ஆக பயன்படுத்தும் வகையிலான மடிக்கணினிகள் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன. நமது தேவைக்கு ஏற்றபடி இதைத் தேர்வு செய்யலாம்.
3.போர்ட்களின் வகை மற்றும் எண்ணிக்கை..
தகவல்களை இன்புட் செய்யவும் அவுட்புட் செய்யவும் அவசியமானவை போர்ட்கள். எல்லா மடிக்கணினிகளிலும் குறைந்தபட்சமாக மூன்று USB போர்ட்கள் இருப்பது நல்லது, USB 3.0 வசதி உள்ள போர்ட்களை தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் வேகமாக டேட்டாக்களை பரிமாற்றம் செய்யலாம்  மேலும் தற்பொழுமு ஸ்மார்ட்போன்   Type-C போர்ட்டை கொண்டிருப்பதால் அதற்கேற்ற வசதிகள் மடிக்கணினியில் இருப்பது அவசியம்.இணைய வசதியை அளிக்க ஈதர்நெட் போர்ட் அவசியம் மேலும் HDMI,VGA, போர்ட்களின்  தேவை இருந்தால் மட்டும் அவை இருக்கும் மடிக்கணினிகளை தேர்ந்தெடுக்கலாம்.
4.ஹார்ட்டிஸ்க்,சிடி டிரைவ்
மடிக்கணினி வாங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் ஹார்ட்டிஸ்க். மடிக்கணினியின் இதயம் போன்றது இதைப்பொறுத்தே ஒட்டுமொத்த செயல்திறன் அமையும் என்பதால் ஹார்ட்டிஸ்க் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். சிடிக்கள் தற்பொழுது வழக்கொழிந்து வருவதால் எப்போதாவது மட்டுமே சிடி டிரைவ் தேவைப்படலாம் அல்லது வாங்கிய பின்பு தனியாக பொருத்திக்கொள்ளலாம்.
5.திரையின் வகை
தொடுதிரை வசதி அடுத்த தலைமுறை மடிக்கணினிகளில் புதிய வரவு. உங்களுக்கு கீபோர்டு மூலம் இயக்குவதற்கு சலிப்பு ஏற்பட்டால் திரையை தொடுவதன் மூலம் கணினியை இயக்கலாம். ஆனால் இந்த வகை மடிக்கணினிகள் விலை சற்று அதிகம் என்பதாலும் தொடுதிரை வசதியை அதிகம் பயன்படுத்த முடியாது என்பதாலும் சாதாரண வகை திரையை தேர்ந்தெடுக்கலாம். அது சற்று விலை குறைவாகவும் கிடைக்கும்.
6.பிராசசர், ரேம் மற்றும் கிராபிக்ஸ் கார்ட்
பிராசசர் மற்றும் ரேம் ஆகியவற்றை பொறுத்தே மடிக்கணினியின் வேகம் அமையும் குறைந்தபட்சமாக 4 ஜி.பி ரேம் மடிக்கணினிக்கு தேவைப்படும்.கிராபிக்ஸ் கார்டுகள் திரையில் தெரியும் காட்சியின் தரத்தை மேம்படுத்த உதவும் ஆனால் விலை சற்று அதிகம்.
7.பேட்டரி திறன் மற்றும் எடை
குறைந்தபட்ச பேட்டரி திறன் 6 மணி நேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுத்தன்மைதான் மடிக்கணினிகளின் சிறப்பம்சமே
எடை குறைந்த மடிக்கணினிகளே பயன்படுத்த எளிதாக இருக்கும்.பேட்டரியின் திறன் அதிகமாக இருந்தாலும் எடை குறைவான மடிக்கணினிகள் தற்பொழுது கிடைக்கின்றன.
8.இயங்குதளம்
விண்டோஸ் இயங்குதளம் சிறப்பாக இருந்தாலும் அதன் விலை அதிகம் எனவே ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களை தேர்வு செய்வதால் செலவை குறைக்கலாம்.
-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

நன்றி : விகடன் செய்திகள் - 10.04.2017

Tuesday, October 27, 2015

கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்குவதற்கு காரணங்கள்


கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்குவதற்கு காரணங்கள் என்ன?
*********************************************************************************
கணினி வேகம் குறைவது சகஜமான ஒன்று தான் என்றாலும், அவ்வாறு நடைபெறும் போது யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். சில சமயங்களில் கணினி மீது வெறுப்பும் உண்டாகும். இங்கு உங்களது கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கும் சில விஷயங்களை பற்றி தான் இருக்கின்றோம். கீழே வரும் ஸ்லைடர்களில் கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்க என்ன காரணம் என்பதை பாருங்கள்..
ட்ராஷ் 
கணினியின் ரீ சைக்கிள் பின் எனப்படும் ட்ராஷ் பாக்ஸ் எப்பவும் காலியாக இருக்க வேண்டும், ட்ராஷ் பாக்ஸ் முழுவதும் ஃபைல்கள் இருக்கும் போது கணினியின் கேம் நிச்சயம் குறையத்தான் செய்யும்
டெஸ்க்டாப் 
கணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.
கேச்சி 
கணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.














Sunday, June 7, 2015

லேப்டாப் சார்ஜ் தீரும் நிலையில்


லேப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் பணியை தொடர்ந்து செய்ய என்ன செய்ய வேண்டும்? 
********************************************************************************************


முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது உங்களின் லாப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் இருக்கின்றதா. லாப்டாப் சார்ஜரும் கையில் இல்லையா, உடனே மனம் தளராமல் மீதம் இருக்கும் நேரத்தில் முடிந்த வரை மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க முடியும். இது போன்ற சம்பவங்களில் சிறிது நேரத்திற்கு லாப்டாப் பேட்டரியை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பேட்டரி சேவர் மோடு:
 பேட்டரி தீரும் நிலையில் லாப்டாப் பேட்டரி சேவர் மோடு ஆன் செய்தால் சிறிது நேரத்திற்கு பேட்டரி தாங்கும்.


டிவைசஸ்:
முடிந்த வரை வை-பை, ப்ளூடூத் ரேடியோ, கிராபிக்ஸ் பிராசஸர் போன்ற அம்சங்களை ஆஃப் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் சற்று நேரத்திற்கு அதிகரிக்கும்.

செட்டிங்ஸ்:
வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களில் லாப்டாப் கீபோர்டு பேக்லைட்டிங்'ஐ ஆஃப் செய்யலாம்.  


ஆப்ஸ்:
 ஹார்டுவேர் மட்டுமின்றி அப்ளிகேஷன்களும் பேட்டரியை பயன்படுத்தும், இதனால் பயன்படுத்தாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வைக்கலாம்.


சிம்ப்லிஃபை:
லாப்டாப்பில் பேட்டரி குறைவாக இருக்கும் போது மல்டி டாஸ்கிங் செய்வது முற்றிலும் தவறான விஷயமாகும். இவ்வாறு செய்வது பேட்டரியை எளிதில் தீர்த்து விடும்.




பேட்டரி: 
 நீண்ட நாள் பேட்டரியை பயன்படுத்த அவைகளை சீராக பராமரிக்க வேண்டும். எப்பவும் பேட்டரியை சார்ஜரில் வைக்க கூடாது. லாப்டாப் பேட்டரிகளை சூடான இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ட்யூன்: 
சீரான இடைவெளியில் லாப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் தேவையற்ற மொன்பொருள்களை அழித்து விடுவது நல்லது. மேலும் வெப் ப்ரவுஸர் கேச்சி மற்றும் பழைய ஃபைல்களையும் அழிக்க வேண்டும்.
ஹார்டுவேர் :
கம்ப்யூட்டரில் சாலிட் ஸ்டேட் டிரைவ் பயன்படுத்தலாம். இவை ப்ளாஷ் மெமரி ஆப்ஷனை பயன்படுத்துவதால் அதிக சக்தியை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.

பேட்டரி பேக்கப் :
மிகவும் எளிமையான விஷயம் என்னவென்றால் கையில் எப்பவும் கூடுதல் பேட்டரியை வைத்து கொள்ளலாம்.

Thanks to : (Meganathan) TAMIL GIZBOT - 07.06.2015