disalbe Right click

Showing posts with label கிரடிட் கார்டு. Show all posts
Showing posts with label கிரடிட் கார்டு. Show all posts

Monday, November 27, 2017

ஆட்-ஆன் கிரெடிட் கார்டு

No automatic alt text available.
ஆட்-ஆன் கிரெடிட் கார்டு என்பது முதன்மை கிரெடிட் கார்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அல்லது துணை கிரெடிட் கார்டு ஆகும். நிதித்துறை சார்ந்த தனி நபர்கள் இவ்வகையான கார்டுகளை நன்றாகப் பயன்படுத்தலாம்.
அதற்குக் காரணம் நீங்கள் விரும்பியவர்கள் எந்த ஒரு நிதி சார்ந்த பரிவர்த்தனைக்கும் உங்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லை. பெற்றோர், கணவன், மனைவி, 18 வயது மேற்பட்ட குழந்தைகள் என எந்த ஒரு குடும்ப உறுப்பினருக்கும் ஆட்-ஆன் கார்டு வழங்கப்படும்.
கட்டணங்கள்
சில வங்கிகள் இலவச ஆட்-ஆன் கார்டு வழங்குகையில், சிலர் ரூ.125 முதல் ரூ.1000 வரை, கார்ட்டை பொருத்தும் நிறுவனத்தைப் பொருத்தும் வசூல் செய்யும்.
அனைத்து வசதிகளும் உண்டு
முதன்மை கிரெடிட் கார்டு போலவே ஆட்-ஆன் கார்ட்டும் சமமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், பிரதான கிரெடிட் கார்ட்டில் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் இந்தக் கார்ட்டிலும் செய்யலாம்.
கடன் வரம்பு
முதன்மை கிரெடிட் கார்ட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள கடன் வரம்பு இதற்கும் பொருந்தும். ஆட்-ஆன் கார்டு மீது ஒருவர் வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதே போல் அதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு எஸ்.எம்.எஸ். அறிவிப்பு வருவதற்குப் பதியவும் செய்யலாம்.
கணக்காளர்
துணை கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை பிராதன கணக்கு உடைமையாளரின் கீழ் தான் பதியப்படும். அதற்கான பில்லும் அவருக்கே செல்லும்.
அபராத கட்டணம்
ஒட்டுமொத்த கடன் பரிவர்த்தனைகளுக்கு, முதன்மை கணக்கு உடைமையாளரே பொறுப்பாகும். நிலுவை தொகையைச் செலுத்துவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், தாமதமாகச் செலுத்தியதற்கான கட்டணத்தையும் பிரதான உடைமையாளரே செலுத்த வேண்டும்.
தேவைக்கான பணம்
தேவைப்படும் போது .டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பிரதான கணக்கு உடைமையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள பணத்தை எடுக்கும் வரம்பே ஆட்-ஆன் கார்டு உடைமையாளருக்கும் பொருந்தும்.
கிரேடிட் பாயின்ட்ஸ்
உங்கள் கார்ட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெகுமதி புள்ளிகளைச் சில வங்கிகள் அளிக்கும். இது ஆட்-ஆன் கார்டுகளுக்கும் பொருந்தும். உங்கள் கணக்கில் போதிய வெகுமதி புள்ளிகள் சேர்ந்தவுடன், அதனைப் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
கண்காணிப்பு
கிரெடிட் கார்டு எங்கே எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது என உடனடி தகவல் கிடைத்து விடுவதால், கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளைச் சுலபமாகக் கண்காணிக்கலாம். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கார்டு வழங்கப்பட்டிருக்கும் போது.
நிதி சுதந்திரம்
இந்தக் கார்டு நீங்கள் விரும்பியவர்களுக்கு நிதி சார்ந்த சுதந்திரத்தை அளிக்கும். இதனால் அவர்களுக்குத் தேவைப்படும் போது பணம் வாங்குவதற்கு அவர்கள் உங்கள் பின்னால் அலையத் தேவையில்லை.
ஆவணங்கள்
இந்தக் கார்ட்டை வாங்குவதற்கு, ஆட்-ஆன் கார்டு உடைமையாளர்கள் தொடர்பான ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கவனம்
ஆட்-ஆன் கார்டு வழங்கப்பட்டவுடன் பிரதான கார்டு உடைமையாளர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறு நடந்தால், உங்களுக்குத் தெரியாமலேயே அது உங்களின் கடன் புள்ளிகளைப் பாதித்து விடும்.
Posted by: Prasanna
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் பைனான்ஸ்-28.11.201

Tuesday, September 26, 2017

ரத்தத்தை உறிஞ்சும் அட்டை

ரத்தத்தை உறிஞ்சும் அட்டை
கிரெடிட் கார்டு
உங்களுக்கு இமெயில் ஐடி இருக்கின்றதா? அப்படியென்றால், அந்த இமெயில் ஐடிக்கு  நீங்கள் விண்னப்பிக்காமலேயே, ”உங்களது கிரடிட் கார்டு ரெடியா இருக்கு, உடனே வந்து வாங்கிக் கொள்ளுங்கள்!” என்ற அர்த்தம் கொண்ட பல மெசேஜ்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உங்களுக்கு யாராலேயோ அனுப்பப்பட்டு இருக்கும். அட நம்மளயும் மதிச்சி பேங்கில இருந்து கூப்புடுறாங்களேன்னு நெனைக்காம, நாமதான் அப்ளையே பண்ணலியே, பிறகு எதுக்கு நம்மள கூப்புடுறாங்க?ன்னு  நீங்கள் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் தப்பித்தீர்கள். இல்லையென்றால், புதைகுழிக்குள் இறங்கப் போகிறீர்கள்! என்று அர்த்தம். 
சாதாரண வங்கி என்று இல்லை. மிகப்பெரிய வங்கிகளும் இந்த வலையை நமக்கு விரித்து நம்மை வளைக்கிறார்கள்.
இவுங்க ஏன் இப்படி நமக்கு தேடி வந்து இலவசமா கிரடிட் கார்டு தர்ராங்கன்னு கொஞ்சமாவது நாம யோசிக்கணும்.
ஆனா, ரொம்ப பேரு எதையும் யோசிக்கிரதே இல்ல. எப்படி அத யூஸ் பண்ணணும்னு கூட தெரியாமலேயே வாங்கிடுறாங்க. இன்னும் சில பேரு நாலஞ்சி அட்டய வாங்கி வச்சிக்கிடுவாங்க. அத ஒரு கவுரவமா நெனக்கிறாங்க.
கட்டணம்
நம்ம நாட்டுல, “ஆதாயம் இல்லாம செட்டி ஆத்தோட போவானா?”ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டு இருப்பீங்க. அது கிரடிட் கார்டு கொடுக்குற வங்கிகளுக்கு ரொம்ப பொருந்தும். உங்களப் பொருத்த அளவில, அவுங்களுக்கு நீங்க “பொன்முட்டை இடுர வாத்து!” இதுக்கு வருஷத்துக்கு இவ்வளவுன்னு கட்டணம் இருக்கு! 200 ரூபாயில இருந்து 2000 ரூபாய்க்கு மேல கட்டவேண்டியது வரும். அத நீங்க கட்டியே ஆகணும். உங்கள குழிக்குள்ள தள்ள சில தள்ளுபடிகளை வங்கிகள் அறிவிக்கும். அதாவது, நீங்க வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செஞ்சீங்கன்னா நீங்க வருடாந்திர கட்டணம் கட்ட வேண்டியதில்லன்னு சொல்லுவாங்க. ஆனா, உங்க கிரடிட் அட்டையோட லிமிட்டே வருஷத்துக்கு 30,000 ரூபாய்க்குள்ளதான் இருக்கும். நம்மளும் வருடாந்திர கட்டணம் ரத்தாகுதேன்னு நெனச்சி,  தேவையே இல்லாம கிரடிட் கார்ட தேச்சி  அதுக்கு வட்டி கட்ட முடியாம முழிப்போம்.
நீங்க அத பயன்படுத்தாம கட்டுப்பாடோட இருந்தாலும், உங்க நண்பருக்குன்னோ அல்லது உங்க உறவினருக்குன்னோ  ஒரு அவசரத் தேவைன்னு பணம் எடுத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். வேறு வழியில்லாம கொடுத்திருக்கிற லிமிட்டுக்கு மீறி செலவழிப்போம்.
செய்யும் பிஸ்னஸில், இன்னும் பத்தே நாளில் பணம்தான் வந்திரும்ன்னு அதிகமாக முதல் போட்டு அகலக் கால் வைப்பீங்க. எதிர்பார்த்தபடி பணம் வராது. என்ன செய்வது என்றே தெரியாது.
சுயரூபம்
அப்பதான் வங்கி தன்னோட சுயரூபத்த நமக்கு காமிக்கும். வட்டி, வட்டிக்கு வட்டி, தாமதக் கட்டணம், சேவை வரி, அது இதுன்னு போட்டு நம்மள தாக்கும். அதக்கட்ட முடியாம திண்டாடுவோம்.  நாம வாங்கின பணம், கட்டின வட்டி, அபராதம் எல்லாமே இம்மிகூட பிசகாம சிபில்ல ரெக்காடாயிரும். இதனால நம்மோட சிபில் ஸ்கோர் ரொம்ப பாதிக்கும். அதுக்கப்புறம் நாம எங்கயுமே கடன் வாங்க முடியாது.   
என்ன செய்ய வேண்டும்?
உங்களோட கிரடிட் கார்டின் லிமிட் 30,000 ரூபாயின்னா, 10,000 ரூபாய மட்டும் பயன்படுத்துனீங்கன்னா உங்க சிபில் ஸ்கோர் உங்கள பாதிக்காது. சில நேரங்களில் 15,000 ரூபாய் வரைக்கும் போகலாம். அதுக்கு மேல போனா, நீங்க அதுக்கு அடிமையாயிட்டீஙகன்னு அர்த்தம். இந்த சாதாரண அட்டைய ரத்தத்தை உறிஞ்சும் “அட்டையாக” மாற்றுவது நம்ம கையிலதான் இருக்கு.
******************************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி