ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுத் துறை வேண்டுகோள்!
ரேஷன் பொருட்கள் விற்பனை தொடர்பாக அனுப்பப்படும்,
எஸ்.எம்.எஸ்., விபரத்தை கவனிக்குமாறு,
கார்டுதாரர்களுக்கு, உணவுத் துறை வேண்டுகோள் விடுத்துஉள்ளது.
• தமிழக ரேஷன் கடைகளில், 2.05 கோடி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.
• இதற்காக, தமிழக அரசு ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. பல அரிசி கார்டுதாரர்கள்,
ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
• ரேஷன் கடைகளில், காகித ரசீது இருந்தபோது, வாங்காத பொருட்களை வாங்கியது போல், பதிவேடுகளில் எழுதி, முறைகேடு செய்தனர்.
• இதனால், முறைகேடு விபரம், கார்டுதாரர்களுக்கு தெரியவில்லை.
• தற்போது, பொருட்கள் அனுப்புவது, விற்பனை உள்ளிட்டவை, கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
• அதனால், கடைகளில் விற்கப்படும் பொருட்கள், விற்பனை கருவியில் பதியப்படுகின்றன.
• பதியப்பட்டதும், அந்த விபரம், கார்டுதாரர்களின் மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும்.
• இதற்காக, உணவு வழங்கல் துறையிடம், 2.04 கோடி கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்கள் உள்ளன.
• எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள்
கவனிப்பதில்லை.
• அவ்வாறு, வாங்காத பொருட்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்தால், உடனே, அதை, 97739 04050/ 99809 04040 என்ற மொபைல் எண்களுக்கு, 'பார்வேர்டு' செய்ய வேண்டும்.
நடவடிக்கை
• பின், அதிகாரிகள், எஸ்.எம்.எஸ்., வந்த கார்டுதாரரை தொடர்பு கொண்டு, பொருட்கள் வாங்காததை உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பர்.
• பொருட்கள் வாங்காத பலர், எஸ்.எம்.எஸ்., வந்தும் புகார் அளிப்பதில்லை.
• விரைவில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
• எனவே, ரேஷன் எஸ்.எம்.எஸ்., விபரத்தை, கார்டுதாரர்கள் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.12.2019