disalbe Right click

Showing posts with label செல்போன். Show all posts
Showing posts with label செல்போன். Show all posts

Monday, March 6, 2017

2g...3g...4g...5g மற்றும் அதன் வித்தியாசங்கள்


2g...3g...4g...5g  மற்றும்  அதன் வித்தியாசங்கள் 

உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! 

இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முதன் முதலில் வெளிவந்த போது இருந்த பரபரப்பை விட, ரிலையன்ஸ் தனது ஜியோ சிம்களின் மூலம் இலவச 4G சேவையை அறிமுகப்படுத்திய போது ஏற்பட்ட பரபரப்பு தான் அதிகம்.

 இந்தியா முழுவதும் தற்போது பத்து கோடி மக்களுக்கு மேல் ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 

4G என்பது மிக விரைவான நெட்வொர்க் சேவை என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் இதற்கு முந்தைய 3G அல்லது அதற்கும் முன்னால் பயன்படுத்தப்பட்ட 2G நெட்வொர்க்குகளுக்கும், 4G நெட்வொர்க்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

 G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! 

முதன்முதலாக அறிமுகமான 0G தொலை தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலை தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன.  

அதனைப் பற்றிய அலசலே இந்த தொகுப்பு.

1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. 

முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவை தான் 1G சேவை. 

1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. 

அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது.  

அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :

பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இது தான். 

இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின. 

இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில் தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன. 

இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது. 

3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. 

நம் இந்திய நாட்டிற்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது. 

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகு தான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.

4G சேவை :

3G சேவையை விட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது. 

அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலை தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை. 

ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G சேவை :

4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை. 

இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். 

மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். 

மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். 

சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. 

இதன் மூலம் தகவல் தொலை தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

- ம. சக்கர ராஜன்
நன்றி : விகடன் செய்திகள் - 06.03.2017

Sunday, January 1, 2017

ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க


ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..!

பணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது.

 `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...’ என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது.

 பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும், தங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பேசுவதற்காகவும் பல மணி நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே செலவழிக்கின்றனர். 

`சார்ஜ் எடு... கொண்டாடு!’ என்பதுபோல, தீரத் தீர சார்ஜ் ஏற்றி, பேசிப் பேசி மாய்ந்துபோகிறார்கள் நம் மக்கள். இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, (Radio Frequency Radiation - RF) கேட்கும்திறனை பாதிக்கிறது. 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கலாம். அவை என்னென்ன... பார்ப்போம்!

・ பேட்டரியில் உள்ள சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும்போது கதிர்வீச்சு வெளிப்படும் அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் ஸ்மார்ட்போனில் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

・ பேட்டரி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது ஸ்மார்ட்போனில் பேசவே கூடாது. மின்சாரம் தாக்கலாம். அதிக வெப்பம் காரணமாக, ஸ்மார்ட்போன் வெடித்துவிடுவதுகூட நிகழலாம். அதிக வெப்பம் மூளையையும் பாதிக்கும்.

・ மலிவு விலை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவு அதிகம். மூளை நரம்புகளின் செயல்திறன் பாதிக்கலாம்.

・ வளரும் குழந்தைகளின் மூளை, இளைஞர்களைவிட இருமடங்கு அதிகமாக கதிர்வீச்சை உள்வாங்கும் ஆற்றல் உடையது. எனவே, முடிந்தவரை குழந்தைகள் ஸ்மார்ட்போனில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அழுகிறார்கள், அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் கொடுத்து விளையாட அனுமதிக்ககூடாது.

கர்ப்பிணிகள் அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு நடத்தைக் குறைபாடுகள் (Behaioral Difficulties) ஏற்பட வாய்ப்பு உண்டு.

・ வேலை காரணமாக, நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் பேசவேண்டியிருப்பவர்கள், புளூடூத் ஹெட்செட் அல்லது தரமான இயர்போன்களைப் பயன்படுத்தலாம். அதுவும், 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டே பலமணிநேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் கவனச்சிதறல் ஏற்படும். அதன் காரணமாக, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

・ 20 நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட்போனை வலது மற்றும் இடது காதுக்கு மாற்றிவைத்துப் பேச வேண்டும்.

・ யாரும் அருகில் இல்லாத நேரங்களில் ஸ்பீக்கர் மோடில் பேசலாம். இதனால், ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் நேரடி கதிர்வீச்சு பாதிப்பைக் குறைக்கலாம்.
 சட்டை பாக்கெட், பான்ட் பாக்கெட் ஆகியவற்றில் ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, இறுக்கமான ஆடையை அணிந்துகொண்டு தரமற்ற ஸ்மார்ட்போனை பான்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு விந்தணுக்கள் பாதிப்பு ஏற்படலாம்.

・ தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்..

・ பேட்டரியை அதிகச் சூடாக்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

・ இருட்டில் ஸ்மார்ட்போனின் திரையைப் பலமணிநேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வைக்குறைபாடுகளும் ஏற்படலாம்.

 இரவு தூங்கும்போது, தலையணையின் அடியில் ஸ்மார்ட்போன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், இரவு முழுவதும் அதன் கதிர்வீச்சு, மூளையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது ஒன்றே, அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி!

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

Tuesday, December 20, 2016

ஆண்ராய்ட் போனில் தமிழில் டைப் செய்ய


ஆண்ராய்ட் போனில் தமிழில் டைப் செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஆண்ராய்ட் மொபைலில் தமிழ் டைப் அடிக்க கஷ்ட படுபவர்கள், 
google handwriting input எனும் App பதிவிறக்கும் செய்து, தமிழில் நேரடியாக கையால் ஸ்கிரினில் எழுதினால், எழுதும் சொற்கள் தானாகவே தமிழ் எழுத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இவ்வாறு ஆங்கிலத்திலும் கைப்பட எழுதுவது, எழுதும் ஆங்கில எழுத்துக்கள் உள்வாங்கப்படும். 

(குறிப்பு - தனித்தனியாக ஒவ்வொரு எழுத்துக்களையும் எழுத வேண்டும். Running Handwriting தவறுகளை ஏற்படுத்தும்)
*********************************************************************************
மேலும் செல்லினம் மற்றும் எழுத்தாணி எனும் மென்பொருள்களும் உள்ளது. அதனையும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
*********************************************************************************

மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்.

CDMA - Code Division Multiple Access

E MAIL - ELECTRONIC MAIL

EDGE - Enhanced Data Rates for GSM Evolution

GPS - Global Positioning System

GSM - Global System for Mobile Communications

GPRS - General Packet Radio Service

IMEI – International Mobile Equipment Identity

LED - Light Emitting Diode

LCD - liquid crystal display

MMS - Multimedia Messaging Service

OS - Operating system

RAM - random access memory

ROM - read only memory

SIM - Subscriber Identity Module

SMS - Short Message Service

USB -universal serial bus

நன்றி : வழக்கறிஞர் திரு லீனஸ் லியோ எட்வர்ட்ஸ் அவர்கள்

Thursday, March 31, 2016

மொபைல் போன் பேட்டரி தடித்தால்


மொபைல் போன் பேட்டரி தடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பலர் தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.

ஏன் பேட்டரி தடித்துப் பெரிதாகிறது?: 
தற்போது பயன்பாட்டில் இருக்கும், எடுத்துச் செல்லக் கூடிய, லேப்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. இ புக் ரீடர், உடல்நலம் காட்டும் சிறிய கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. குறுக்கப்பட்ட சிறிய அளவில் ஆக்கப்பட்ட பேட்டரிகள் நமக்குக் கூடுதல் வசதிகளையே அளிக்கின்றன. ஆனால், இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளைக் காட்டிலும், லித்தியம் அயன் பேட்டரிகள் சில எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இந்த வகை பேட்டரிகளில், அதில் உள்ளாக உள்ள செல்களுக்கும், மேல் உலோக கவசங்களுக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளது. இதனால், பேட்டரி எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே உள்ளது. 
லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக வெப்பம் பாதிக்கும் போது, அவை தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்படுகையில், அதிக நாட்கள் பயன்பாட்டில் இருந்ததனால், சில வேளைகளில், உள்ளே இருக்கும் செல்களிலிருந்து, எளிதில் நெருப்பு பிடிக்கக் கூடிய எலக்ட்ரோ லைட் மிக்சர் (electrolyte mixture) உருவாகலாம். 
அதிர்ஷ்டவசமாக, நெருப்பு பிடிக்காமல் இருக்க உள்ளாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்பு பிடித்து, கேஸ் வெளியேறாததால், பேட்டரியின் தடிமன் பெருகத் தொடங்குகிறது. இந்த தடிமன் குறைவாக இருக்கும் நிலையில், நாம் அதிகம் அது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், அது ஸ்மார்ட் போனின் உருவத்தைப் பாழடிக்கும் நிலைக்கு வரும்போது, நாம் இந்த பேட்டரியின் தடிமன் குறித்து கவலைப் படுகிறோம். சில வேளைகளில், நாம் போனுக்குள் மைக்ரோ எஸ்.டி. கார்ட் போன்றவற்றை இணைக்கையில், பின்புற மூடியைக் கழட்டி எடுக்கையில், இந்த தடிமன் அதிகமான லித்தியம் அயன் பேட்டரி, ஸ்பிரிங் விசையில் இருந்து விடுபட்டது போல, வெளியே துள்ளிக் குதிக்கிறது. அல்லது பின்புற போன் மூடியை வெளியே தள்ளுகிறது.

பேட்டரியை நீக்கும் வழிகள்: 
இதனால், லித்தியம் அயன் பேட்டரி பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்ற முடிவிற்கு வருவது தவறாகும். பேட்டரியின் உள்ளாக, பல நிலைகளில் பாதுகாப்பான வழி முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டல், அதனை நிறுத்தும் வழிகள், உள்ளாக வெப்பம் பரவுவதை அளந்து, அறிந்து நிறுத்தும் வழிகள் போன்றவற்றைக் கூறலாம். இத்தகைய பேட்டரிகள், எந்த நிலையிலும், தீ பிடித்தது என்ற நிலை ஏற்பட்டதில்லை என்றே கூறலாம்.

வீணான பேட்டரியை என்ன செய்திடலாம்?: 
எனவே, பயன்படுத்த முடியாத நிலைக்கு, உங்கள் சாதனத்தின் லித்தியம் அயன் பேட்டரி சென்றுவிட்டால், அதனை எடுத்துவிட்டு, அதே அளவிலான, மின் திறன் கொண்ட பேட்டரியைப் புதியதாக வாங்கிப் பொருத்த வேண்டியதுதான் சரியான வழியாகும். 
இருப்பினும், அந்த பழைய பேட்டரியை திடீரென குப்பையில் எரிந்துவிடக் கூடாது. அதனை அழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை வெடித்து அல்லது நெருப்பினை உண்டாக்கும் என்ற அச்சத்துடன், சில வழிமுறைகளைப் பின்பற்றி அழிக்க வேண்டும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.

பேட்டரி தடிமன் அதிகமாகி விட்டது என்பதை உறுதி செய்தால், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அது இணைக்கப்பட்டுள்ள சாதனத்தினையும் இயக்கக் கூடாது. சாதனத்தினை ‘பவர் ஆப்’ (power off) செய்து, பேட்டரியிலிருந்து மின் சக்தி செல்வதை நிறுத்த வேண்டும். 
குறிப்பாக அதனை சார்ஜ் செய்திடவே கூடாது. தடிமன் அதிகமாகிப் போன பேட்டரியில், பாதுகாப்பு வளையங்கள் வேலை செய்யாது. எனவே, அது எப்போதும் வெடிக்கக் கூடிய சிறிய பந்து என்று கருத வேண்டும். நம் அறையில், நெருப்பு பிடிக்கக் கூடிய வாயுவை வெளியிடும் சாதனம் ஒன்று உள்ளதாகவே கருத வேண்டும். 

பேட்டரியை உடனே நீக்குக:
 
பயனற்றுப் போன பேட்டரியை உடனே சாதனத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். அதை அழுத்தியோ, அதன் உருவினை மாற்றியோ, வெளியில் உள்ள பின்புற மூடியைச் சரி செய்தோ, பயன்படுத்த முயற்சிக்கவே கூடாது. 
பேட்டரியைத் துளையிட்டு, அதன் தடிமனைக் குறைக்க முயற்சிப்பது, முட்டாள்தனமான வேண்டாத முயற்சியாகும். 
உள்ளிருக்கும், உங்களுக்கு அழிவைத் தரக்கூடிய வாயுவினை நீங்களாகவே வலிந்து பெறும் வழி இது.

நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தினை நீங்களே திறந்து பார்க்க முடியும் என்றால், அதிலிருந்து பேட்டரியை உங்களால் எடுத்து நீக்க முடியும் என்றால், உடனே பேட்டரியை நீக்கவும். 

அல்லது அதற்கான தொழில் நுட்ப பணியாளரிடம் கொடுத்து பேட்டரியை எடுத்துவிடவும். அல்லது உங்கள் சாதனத்தினை இந்த பேட்டரி கெடுத்துவிடும் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. பேட்டரிக்குள்ளாக, கூர்மையான ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, இந்த வீக்கமுற்ற பேட்டரியின் தடிமனைக் குறைத்துவிடலாம் என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். 

உங்களால் பேட்டரியை நீக்க முடியாவிட்டால், அதனை ஒரு டெக்னீஷியனிடம் கொண்டு செல்ல நாளாகும் என்றால், அந்த சாதனத்தினை, குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும். பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். 

கெட்டுப் போன பேட்டரியை விட்டெரிய வேண்டாம்:
 
வீணாகிப் போன லித்தியம் அயன் பேட்டரியை, எந்த நிலையிலும், குப்பைகள் உள்ள இடத்தில் விட்டெறியும் பழக்கத்தினை விட்டுவிடுங்கள். கூர்மையான சாதனம் கொண்டு திறக்க முயற்சித்த பேட்டரியையும் பயன்படுத்த வேண்டாம். எடுத்து எறிந்துவிட வேண்டாம். அதுவரை சாதாரண பேட்டரியாய் இருந்தது, திறக்க வேண்டி முயற்சி எடுத்ததனால், எளிதில் நெருப்பினை வழங்கும் அபாயமான ஒரு பொருளாக மாறுகிறது. 
எனவே, வீட்டில் வைத்திருப்பதும் சரியல்ல. எனவே, சரியான முறையில் அதனை அழித்திட, இதனை விற்பனை செய்திடும் கடைகளை அணுகி அவர்களிடம் தந்துவிடலாம். வெளிநாடுகளில், இதற்கெனவே மறு சுழற்சி மையங்கள் இருக்கின்றன. இந்தியாவில், நம் நகரங்களில் அது போன்ற மையங்கள் இல்லை. 

பேட்டரியை நீக்கியவுடன், அதன் முனைகளை, மின் சாதனங்களை முடக்கப் பயன்படுத்தும் டேப்களைக் கொண்டு மூடவும். இதனால், எதிர்பாராத சூழ்நிலைகளில், இரு முனைகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, பெரும் விபத்து நேரும் அபாயம் தடுக்கப்படுகிறது. 
உங்களால் பேட்டரியை நீக்க முடியாத நிலையில், அது பயன்படுத்தப்படும் சாதனத்தையே பேட்டரி மற்றும் சாதனம் பழுது பார்க்கும் கடைகளுக்குச் சென்று, அவர்கள் உதவியுடன் பேட்டரியை நீக்கி அவர்களிடமே தந்துவிட்டு வந்துவிடலாம்.

பேட்டரிகள் தடிப்பதனை எப்படி தடுக்கலாம்?:
 மேலே தரப்பட்டுள்ள தகவல்களைப் படித்தவுடன், “என்னிடம் இது போல தடிமன் அதிகரித்த பேட்டரி எதுவும் என் சாதனங்களில் இல்லை. ஆனால், இது போல தடிமன் கூடுவதை எப்படி தடுப்பது?” என்ற வினா வரலாம். அதற்கான சில வழிமுறைகள் இதோ:

1. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வெப்பம் என்பதே ஆகாது. எனவே, அது பயன்படுத்தப்படும் சாதனங்களை, குளுமையான இடத்தில் வைத்துப் பயன்படுத்தவும். அல்லது, வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்திருப்பதனைத் தடுக்கவும். சிலர் காரில் டேஷ் போர்டில், இந்த வகை சாதனங்களை வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். நேரடியாக வெயிலில் சாதனமும், பேட்டரியும் வெப்பமடையத் தொடங்கும். இது பேட்டரியின் தடிமனை நிச்சயம் அதிகரிக்கச் செய்திடும்.

2. உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தப் போவதில்லையா? உள்ளிருக்கும் பேட்டரியை எடுத்து, குளுமையான இடத்தில் வைத்துவிடவும்.

3. சரியான சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும். லித்திய அயன் பேட்டரியைத் தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்வது அதில் பாதிப்பினை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்கள், சாதனத்துடன் தரப்பட்ட சார்ஜர் பழுதாகிப்போன பின்பு, குறைந்த விலைக்குக் கிடைக்கும் வேறு நிறுவன சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இந்த செயலினை மேற்கொள்வது, லித்தியம் அயன் பேட்டரியை, அதிகமாக சார்ஜ் செய்திடும் வழிக்குக் கொண்டு சென்று, விரைவில், அதன் தடிமனை அதிகரிக்கிறது.

4. பழைய பேட்டரிகளை உடனே மாற்ற வேண்டும். உங்கள் லேப் டாப் பேட்டரி, இதுவரை 5 மணி நேரம் வரை மின் சக்தியினைக் கொடுத்துவிட்டு, தற்போது 30 நிமிடங்களிலேயே தன் பணியை முடித்துக் கொள்கிறதா? பேட்டரியின் உள்ளிருக்கும் பொருட்கள் வீணாகிவிட்டன என்று இது காட்டுகிறது. உடனடியாக அதனை மாற்ற வேண்டும். 

5. தொடர்ந்து சார்ஜ் செய்திடும் நிலையில், உங்கள் சாதனத்தினை வைத்திருக்க வேண்டாம். பேட்டரி ஒன்றைக் கட்டாயமாக முழுமையாக 100% சார்ஜ் செய்திட வேண்டும் என்பது கட்டாயமல்ல. சற்றுக் குறைவாக சார்ஜ் செய்வதே, லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு நல்லது. எனவே, மின் இணைப்பில் வைத்துவிட்டு 100% சார்ஜ் ஆன பின்னரும், அதனை இணைப்பில் வைத்திருப்பது நல்லதல்ல. வெகுநேரம் தொடர்ந்து பணியாற்றச் செல்வதால், தொடர் மின் இணைப்பில் சார்ஜ் செய்கிறேன் என்ற நிலையை ஏற்க வேண்டாம். இப்போதெல்லாம், இவற்றை சார்ஜ் செய்திட பவர் பேக் எனப்படும் பேட்டரிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.

லித்தியம் அயன் பேட்டரியில் நீங்கள் இதுவரை அதிகக் கவனம் செலுத்தாமல் இருந்தால், இனி அடிக்கடி அதன் நிலையினைப் பார்த்து மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.03.2016

Friday, March 25, 2016

செல்போனில் அழைப்பவர் யாரென்று அறிந்து கொள்ள


செல்போனில் அழைப்பவர் யாரென்று அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நம் ஸ்மார்ட் போனில், அழைப்பு ஒன்று வருகிறது. அழைக்கும் எண் நம் போனில் பெயருடன் பதியப்படாமல் இருந்தால், அழைப்பது யாரென்று தெரியாது. யாரென்று தெரிந்தால், அவர் தவிர்க்கப்பட வேண்டிய நபர் என்றால் தவிர்க்கலாம். ஆனால், எப்படி புதிய, பதியாத எண் யாருடையது என்று தெரிந்து கொள்வது? இவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலியாக இருப்பது, “ட்ரூ காலர்” என்னும் புரோகிராம் ஆகும். 

இது ஆண்ட்ராய்ட், ஐபோன், விண்டோஸ் போன், பிளாக் பெரி 10 ஆகியவற்றிற்கென தனித்தனியே இதன் இணைய தளத்தில் (https://www.truecaller.com/download) தரப்பட்டுள்ளது. 200 கோடிக்கும் மேலாக, இதன் தகவல் தளத்தில் மொபைல் போன்கள் உள்ளதாக, இதன் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை “உலகின் மிகப் பெரிய டெலிபோன் டைரக்டரி” என்றும் கூறலாம். இதன் இணைய தளத்திலும், நீங்கள் மொபைல் போன் ஒன்றைக் கொடுத்து, போனுக்குரியவர் குறித்து தகவல்களைப் பெறலாம். ஆனால், நீங்கள் யாரென்பதை, கூகுள் ஐ.டி. அல்லது மைக்ரோசாப்ட் ஐ.டி. யைத் தர வேண்டியதிருக்கும்.

ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் பயனாளர்களில், 60% பேர் இந்த 'ட்ரூ காலர்' என்னும் செயலியைப் பதிந்து பயன்படுத்துவார்கள். இதுவரை பயன்படுத்தாத ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள், True Caller செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, தரவிறக்கம் செய்து, போனில் பதிந்து பயன்படுத்தலாம். ஒருவரின் எண் இன்னாருடையது என்று முதலில் பதியப்படும் பெயரே, ட்ரூ காலரில் காட்டப்படுகிறது. அந்தப் பெயர் இந்த செயலிக்கான சர்வரில் பதியப்பட்டு, நமக்கு அழைப்பு வருகையில் காட்டப்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி நாம் என்ன என்ன வசதிகளைப் பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.



அழைப்புகளைத் தடுக்க: 

குறிப்பிட்ட எண்ணில் தொடங்கும் அழைப்புகளை, உங்கள் போனுக்கு வரவிடாமல் தடுக்கலாம். இதுவரை நீங்கள் அறியாத ஒருவர், புதிய எண்ணிலிருந்து உங்களை அழைத்து, தொல்லை கொடுக்கிறார் என்றால், அந்த எண்ணைக் கவனியுங்கள். அழைப்பினை நீங்கள் நிறுத்தியவுடன், உங்களுக்கு ஒரு சிறிய கட்டத்தில் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதில் இந்த குறிப்பிட்ட எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கும் வகையில், செட்டிங்ஸ் அமைத்துவிடலாம். அல்லது அந்த எண்ணின் முதல் நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, அந்த எண் 8054ல் தொடங்குவதாக இருந்தால், இந்த நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கும் வகையில் அமைப்பினை ஏற்படுத்தலாம்.


இணைய இணைப்பு எப்போதும் தேவையில்லை: 

உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக்குரியவரின் பெயர் எங்கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவிலிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.


தொல்லை கொடுப்பவரிடமிருந்து பாதுகாப்பு

தொடர்ந்து ஓர் எண்ணிலிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின், அந்த எண்ணுக்குரியவரை spammer என அடையாளக் குறியிட்டு வைக்கலாம். இது போல ஓர் எண்ணைப் பலர் ஸ்பேம் என அடையாளம் காட்டி இருந்தால், உங்களுக்கு அழைப்பு வருகையில், இந்த எண்ணை இத்தனை சதவீதம் பேர் ஸ்பேம் என குறித்துள்ளனர் என்று தகவல் காட்டப்படும். எனவே, நீங்களும் இதனை முடக்கி வைக்கலாம்.


ட்ரூ டயலர்: 

இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது. இதனை, உங்கள் போனின் டயலராக செயல்படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால், நீங்கள் குறிப்பிட்ட அடையாளத்துடன், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும். வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடுவதனை, இந்த செயலியின் மூலமும் செயல்படுத்தலாம். 

எண் குறித்த தகவல்: 
ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் தான், அந்த எண்ணுக்குரியவரை அடையாளம் காட்டும் என்ற வரையறை, இந்த செயலிக்கு இல்லை. எந்த எண்ணையும் ட்ரூ காலரில் கொடுத்து, அந்த எண் யாருக்குரியது என்று நீங்கள் ட்ரூ காலர் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால், அந்த எண்ணுக்குரியவருக்கு, இந்த எண்ணிலிருந்து, உங்கள் எண் குறித்த தகவல் அறியப்பட்டது என்ற தகவல் அந்த எண் கொண்ட போனுக்குச் செல்லும்.



உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பு:

 ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி, உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பினை உருவாக்கலாம். இதன் மூலம், நீங்கள் அழைக்கும் நபர்கள், உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, உங்கள் முழுப் பெயர் மற்றும் படத்தினை இத்தொகுப்பில் இட்டு வைக்கலாம். அதே போல, Privacy என்ற வகையில், உங்களைப் பற்றிய தகவல்களைக் காட்டாமல் இருக்கவும் அமைக்கலாம்.


உங்கள் எண்ணை நீக்க: 

ட்ரூ காலர் உங்கள் எண் குறித்த தகவல்களை யாருக்கும் காட்டக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதனுடைய தகவல் தொகுப்பிலிருந்து, உங்கள் எண்ணை முழுமையாக நீக்கலாம். http://www.truecaller.com/unlist என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, உங்கள் மொபைல் எண்ணை, இந்தியாவிற்குரிய குறியீட்டு எண்ணுடன் இணைத்து தர வேண்டும். ஏன் எண்ணை பதிவிலிருந்து நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தை, அதில் தரப்படும் ஆப்ஷன்களிலிருந்து தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர், அதில் காட்டப்படும் 'கேப்சா (Captcha)' சோதனையை மேற்கொண்ட பின்னர், 'Unlist' என்பதில் கிளிக் செய்தால், உங்கள் எண் நீக்கப்படும். நீங்கள் அழைப்புகளை மேற்கொள்கையில், உங்கள் எண் குறித்த தகவல் ட்ரூ காலர் வழியாகத் தரப்பட மாட்டாது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 14.03.2016


Friday, June 5, 2015

செல்போன்கள் வெடிக்காமல் இருக்க


செல்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் கால கட்டத்தில் அவைகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகமாகவே இருக்கின்றது. சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகளவு நடைபெறுகின்றன. 

ஸ்மார்ட்போன்கள் ஏன் திடீரென வெடிக்கின்றன, அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மொபைல் போன்:
புதிதாக மொபைல் வாங்கும் போது முடிந்த வரை பிரான்டெட் கருவியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வெடித்தல்:
 சில சமயங்களில் வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மிஸ்டு கால்களுக்கு மீண்டும் அழைக்கும் போது போன்கள் வெடிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் போனினை சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்வதும் அவைகளை வெடிக்க செய்கின்றன. 

என்ன செய்யலாம்?
 முடிந்த வரை போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பேட்டரி பழுதாகி இருந்தால் அதனை உடனே மாற்றி விட வேண்டும்.

குறைந்த விலை: 
முடிந்த வரை விலை குறைவான போன்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் விலை குறைந்த போன்களில் சீன ஹார்டுவேர்களே பயன்படுத்தப்படுகின்றன, இவை பிரான்டெட் இல்லாத காரணத்தினால் அவை எப்பவும் ஆபத்தை விளைவிக்கும். 

இண்டர்நெட்:
 போன்களில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது உங்களுக்கு அறிமுகம் இல்லாத தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் வை-பை பயன்படுத்துவதும் ஆபத்தில் முடியலாம்.

முன் எச்சரிக்கை:
 போன்களை உங்களது உடலில் இருந்து சற்று தள்ளி வைத்து பயன்படுத்தலாம். முடிந்த வரை ஸ்பீக்கர் அல்லது ப்ளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

ஈரம் நீக்குவதற்கு:
 போனில் தண்ணீரில் விழுந்தால் உடனடியாக அதனினை தனித்தனியாக பிரித்து காய வைக்க வேண்டும். அதிகபட்சம் 12 - 24 மணி நேரத்திற்கு போனினை நன்கு காய வைத்து அதன் பின் ஆன் செய்ய முயற்சிக்கலாம்.

பயன்பாடு:
 போனினை சிலர் முகங்களோடு நெருக்கமாக வைத்து பயன்படுத்துவர், இவ்வாறு செய்வது வாய் புற்று நோய் மற்றும் தூக்கமின்மைக்கு வழி வகுக்கும்.

நன்றி : Meganathan, Tamil GIZBOT 05.06.2015










Monday, April 27, 2015

ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்ய

சென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி?

கா
கிதமில்லாமல்,மொபைல் மூலம் புறநகர் ரயில்  டிக்கெட் பெறும் அப்ளிகேஷனை ஏப்ரல் 22 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில்   அறிமுகப்படுத்தினார் -

செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் ‘GOOGLE பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

அந்த செயலியில்  மொபைல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், பாஸ்வேர்டு எண் கிடைக்கும்.
அதைத் தொடர்ந்து, டிக்கெட் புக்கிங் பகுதி தேர்வு செய்து, அதில் புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து, டிக்கெட்டை பெற முடியும்,

UTS WALLET க்கு பணம் மாறுதல்(money transfer) செய்து balance amount குறைந்த பட்சம் 50 அல்லது 100 ரூ வைத்து கொள்ள வேண்டும் 


ரயில் நிலையத்தில் இருக்கும்போது அந்த ரயிலுக்கு நாம் டிக்கெட் புக் செய்ய முடியாது. ரயில்வே வழித்தடத்தில் இருந்து, 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால், 5 கி.மீ., தொலைவிற்குள், டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும்
இந்த அப்ளிகேசனை இதுவரை 70,000-க்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். அம்பத்தூர் ,கும்மிடி பூண்டி ,வேளச்சேரி போன்ற ரயில் நிலையபகுதிகளுக்கும், பீச் முதல் தெற்கே கிண்டி உள்பட பெருங்களத்தூர் வரை இப்போது இந்த மொபைல் டிக்கெட் வசதி உள்ளது. ஊரப்பாக்கம்  முதல் செங்கல்பட்டு வரை உள்ள  பகுதிகளுக்கு இந்த வசதி இப்போதைக்கு  இல்லை

- ஷான்
நன்றி : விகடன் செய்திகள் 27.04.2015

Monday, April 6, 2015

எஸ்.எம்.எஸ். மூலம் மின்கட்டணம்


எஸ்.எம்.எஸ். மூலம்  மின்கட்டணம்
******************************************************

மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விட்டு இனி ‘பைனோடு‘ கட்டணத்தை செலுத்த தேவையில்லை. நுகர்வோர்களுக்கு நினைவுப்படுத்த மின்வாரியம் மெசேஜ் கொடுத்துவிடும்.

பெரும்பாலானவர்கள் மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விடுவார்கள். இதனால், மின் வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக ரீதியான கட்டிடங்களுக்கு சென்று பியூஸ் கேரியரை பிடிங்கிய பின்னரே கட்டணம் செலுத்த வேண்டியது தெரிய வரும். பின், அபராதத்துடன் சென்று கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பை பெறுவது வழக்கம். இதனால், ஓரிரு நாட்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவதிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில இடங்களில் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி குறித்து நமக்கு ‘அலர்ட்‘ மெசேஜ் அனுப்பும் புதிய வசதியை மாவட்ட மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது அனைத்து மின் நுகர்வோர்களிடம், செல்போன் எண்களை சேகரிக்கும் பணிகளை துவக்கியுள்ளது. செல்போனில், மெசேஜ் கொடுப்பதன் மூலம் இனி அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்துவது குறைவது மட்டுமின்றி, பிரச்னைகளும் குறைய வாய்ப்புள்ளது. நுகர்வோர், மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களுக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை கொடுக்கலாம். இதற்காக மின் அலுவலுகத்தில் தனியாக பதிவேடு வைக்கப்பட்டு, நுகர்வோர் தாங்களாகவே மொபைல் போன் எண்ணை பதிவு செய்யயல்லம் .

அல்லது இணையதளத்தில் பகிர்மானக் கழக இணையதளமான
,http://www.tangedco.gov.in/index1.php?tempno=-பில்லிங் சர்வீசஸ் (Billing Services) என்ற ஆப்ஷனில் சென்றால், இறுதி ஆப்ஷனாக மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ரேஷன் (Mobile Number Registration) சேர்க்கப்பட்டுள்ளது. அதில் க்ளிக் செய்தால், தங்களது மின் மண்டல எண்ணை தனியாகவும், மற்ற எண்களை தனியாகவும் குறிப்பிட வழி செய்யப்பட்டுள்ளது. இணைப்பு எண்ணைப் பதிவு செய்ததும், மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.